ஆறடி மனிதன் அளந்தது என்ன
இழந்தது தானே அதிகம்
மனைவி மக்கள் சுற்றம் இழந்து
சொத்து சுகங்கள் அனைத்தையும்
இழந்து தன்னையும் ஒரு நாள் இழந்தானே
ஆறடிமண் தான் அவனுக்கு சொந்தம்
என்று சொன்னாரே ஒரு பிடி சாம்பல் அதுவும்
கரைந்து காற்றில் பறந்ததுவே
அழியும் உடம்பை நிலையென நினைத்து
ஆசை வைத்தானே விதியென நினைத்து
மாயையில் விழுந்து சிக்கிக் கொண்டானே
பொறுமை இழந்து நிம்மதி இழந்து
தன்னையும் மறந்து தவறுகள் செய்தானே
பற்று பாசம் என்று எண்ணி பதறித் துடித்தானே
ஆசைகள் அவனை ஆண்டு கொள்ள அவதிபட்டானே
எல்லாம் எனக்கே சொந்தம் என்று உரிமை கொண்டானே
பெரியவன் நான் என்று ஆணவம்
கொண்டு அழித்திடத் துணிந்தானே
அன்பு செய்வதை மறந்து அவனும்
ஆட்கொள்ள நினைத்தானே
ஆண்டான் அடிமை என்று அவனும் பேதம் கொண்டானே
உயிருக்கு இல்லை பேதம் என்று உணர மறுத்தானே
ஆண்டவனையும் வகை வகையாக பிரித்து வைத்தானே
பாவத்தை தொலைக்க வந்தவன் இங்கு மேலும் சுமந்தானே
பேரின்பம் காண விளையவில்லை அவன் சிற்றின்பம் கண்டானே
எனது ஆறடி நிலம் படித்து பின்னூட்டம் இட்டமைக்கு எனது நன்றி. தங்களின் இந்தக்கவிதை நன்று. தொடர்வோம் சிந்திப்போம் சந்திப்போம் என்றென்றும் திலிப் நாராயணன்.
ReplyDelete