காற்று நடைபயிலக்
கண்கள் சிறகடித்து
காணும் அத்தனையும்
களமே
காலம் கரைகின்ற முன்னே
கசடற்றுக்
கருதி சேர்ப்பாயே
உளமே!
போற்றும் நெறிநின்று
பொழுதைப் பயனாக்கி
போதல் என்றென்றும்
சுகமே
போதும் எனுமெண்ணம்
பெருகி நிறைகின்ற
புத்தி பெறவேண்டும்
அகமே!
கூற்று வந்தாலும்
கொள்கைத் தடம்மாறா
கோலம் தனைக்கொள்க பலமே
கோபக் களைநீக்கிக்
குழந்தை மனமாக்கிக்
கொள்க என்றென்றும்
நலமே!
தேற்றும் அன்போடு
தெளிந்த அறிவோடு
திகழ மனிதனே எழுக
தெளிந்த முன்னோர்கள்
தந்த வழிகண்டு
சீற்றம் அறமெழட்டும் சிந்தை வலுப்படட்டும்
செய்கை பிறர் நலனைக்
காணும்
செம்மை உளம்வரட்டும்
செல்லத் தடமெழட்டும்
சொல்லில் இனிமையெனும்
தேனும்!
சேற்றை இறைக்கின்ற
சின்னத் தனங்கண்டு
சிரித்துப் போகின்ற
தன்மை
சொந்த மெனக்கொண்டு
செல்க தடைவென்று
சிதறிப் பகைநடுங்கும்
உண்மை!
மாற்றம் நலமாக
மனிதகுலம் வாழ
மீட்டு செந்தமிழ்
யாழை!
மரபின் நெறிநின்று
மாண்டு போனாலும்
மைந்து தருகின்ற வாழை!
ஆற்றல் அணுவிஞ்ச ஆளும்
வலிபடைத்த
ஆண்மை உனக்குண்டு தோழா
அமைதி உலகுய்ய அழகு
மதிபடைத்த
அருமை அறிவுகொண்டு
வாடா!
இளைய சமூகத்திற்கு நம்பிக்கையூட்டும் வீறார்ந்த எளிய மரபுக் கவிதை 24 வரிகளில் -எழுக மனிதனே எழுக எனும் தலைப்புடன் இதோ .
“இதற்கு முன் வெளியான படைப்பல்ல, முடிவு வெளிவரும் வரை வேறு இதழ் எதிலும்
வெளிவராது“ என்னும் உறுதி மொழி கூறி இதை என் தளத்தில் வெளியிடுகிறேன்.நன்றி !
வணக்கம் சகோ !
ReplyDeleteஒவ்வோர் வரியிலும் வீரம் விளைந்து நிற்கிறது
கண்டிப்பாய் மனிதன் எழுவான் சகோ அருமை அருமை !
தொடர வாழ்த்துக்கள் ...
இப்போடியிலும் இனிவரும் எல்லாப் போட்டிகளிலும் வெற்றிபெற நெஞ்சார வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
அட வாங்க சீராளரே என்ன அதிசயமா அதுவும் முதல் வாழ்த்து முதல் வருகை ம்..ம் மழை கிளை பெய்கிறதா பார்க்கிறேன் இருங்கள். அட இல்லையே. மிக்க நன்றி நன்றி! இது போல் எப்பவும் வருகை தந்தால் மிகவும் மகிழ்வேன் ஹா ஹா ... முடியாதா சரி சரி புரிகிறது. வாழ்த்துக்கும் வரவுக்கும் நன்றி சீர்!
Deleteதெளிந்த முன்னோர்கள் தந்த வழிகண்டு
ReplyDeleteஅவ்வழி தொழும் தம் கவிஇனிது
வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரியாரே
வாருங்கள் சகோ! தங்கள் உடன் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ !
Deleteபா உங்களது
ReplyDeleteபோட்டிக்கு அல்ல.
ஈட்டி கொண்டு எதிர் நீச்சல் போட்டிடவே
மீட்டும் எமது இதயத்து நாண். .
உள்ளம் சிலிர்த்து எழ
உடல் மெய் மறந்து போகிறது.
வாடிய உயிரை எல்லாம்
வாழ வைக்கும் கவிதை இது.
படிக்கும்போதே
பாடியும் விட்டேன்.
யதுகுல காம்போதி என்னும் பண்ணில்.
சுப்பு தாத்தா.
www.vazhvuneri.blogspot.com
www.subbuthathacomments.blogspot.com
வாங்க தாத்தா அட அதற்குள் பாடி விட்டீர்களா? பயங்கர ஸ்பீட் தான் இல்ல ஹா ஹா ... ஆனால் இன்னும் கேட்க முடியலையே எங்கும் காணோமே தாத்தா. மிக்க நன்றி. தங்கள் அன்புக்கு என்றும்
Deleteதலை வணங்குகிறேன். வாழ்க நலமுடன் ...!
முயற்ச்சி செய்கிறேன்.
மரபுக்கவிதைப்போட்டிகாகவா!!! கலக்குங்க செல்லம். வெற்றி பெற புதுகை விழாக்குழுவின் சார்பாக வாழ்த்துக்கள் பல:)
ReplyDeleteஅப்பாடா அம்முக் குட்டியின் வாழ்த்து கிடைத்து விட்டது மிக்க நன்றிம்மா! எங்கே busyஇல் வராது விட்டு விடுவீர்களோ என்று எண்ணினேன்.
Deleteசிறப்பான படைப்பு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteமிக்க நன்றி! சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும்...!
Deleteமாண்பு குலையாமல் மரபின் நெறிநின்று
ReplyDeleteமனதைக் கரைக்கின்ற கவிதை.
- போட்டியில் வெற்றிபெற வாழ்ததுகள்.
முதல் வருகை கண்டு மகிழ்கிறேன் நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
Deleteஅருமை கவிஞரே போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!
Deleteமனம் கவரும் கவிதைப்பண். பாராட்டுகள் இனியா. வெற்றிபெற நல்வாழ்த்துகள்.
ReplyDeleteமிக்க நன்றிம்மா வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!
Deleteஆஹா அருமையான படைப்பு
ReplyDeleteசேற்றை இறைக்கின்ற சின்னத் தனங்கண்டு
சிரித்துப் போகின்ற தன்மை..
மனம் பக்குவம் வேண்டும் தான்,,,,,,,
வாழ்த்துக்களம்மா வெற்றி பெற,,
மிக்க நன்றிம்மா ! வருகைக்கும் வாழ்த்திற்கும் ...!
Deleteஉணர்வு பொங்க கவிதை படைத்துள்ளீர்
ReplyDeleteகவிதை நூல் ஏதேனும் வெளியிட்டுள்ளீர்களா?
அன்புள்ள சகோதரி,
ReplyDeleteஅமைதி உலகுய்ய அழகு மதிபடைத்த
அருமை அறிவுகொண்டு வாடா!
அமைதிவழி காண அருமையான கவிதை. போட்டியில் வெற்றிபெற வாழ்த்துகள்.
" மாற்றம் நலமாக மனிதகுலம் வாழ
ReplyDeleteமீட்டு செந்தமிழ் யாழை!
மரபின் நெறிநின்று மாண்டு போனாலும்
மைந்து தருகின்ற வாழை!
ஆற்றல் அணுவிஞ்ச ஆளும் வலிபடைத்த
ஆண்மை உனக்குண்டு தோழா
அமைதி உலகுய்ய அழகு மதிபடைத்த
அருமை அறிவுகொண்டு வாடா!"......அருமையான வரிகள் சகோதரி!..(நீண்ண்ண்ட...இடைவெளிக்குப் பிறகு வலைத்தளம் வந்துள்ளேன்.).வாழ்த்துக்கள்..!
அழகான பதினான்கு சீர் விருத்தக் கண்ணிகள் தமிழிற்கு அணிகலன்.
ReplyDeleteபோட்டியில் வெல்ல வாழ்த்துகள் அம்மா.
நன்றி
போதும் எனுமெண்ணம் பெருகி நிறைகின்ற
ReplyDeleteபுத்தி பெறவேண்டும் அகமே!
கூற்று வந்தாலும் கொள்கைத் தடம்மாறா
கோலம் தனைக்கொள்க பலமே ஆகா! அருமை இனியா! இன்றைய காலத்துக்குத் தேவையான செய்திகள். போட்டியில் வெல்ல வாழ்த்துகிறேன்!
அருமையான படைப்பு தாமத வருகைக்கு மன்னிக்கவும் தோழி.
ReplyDeleteபோட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
நல்லதொரு படைப்பு. வெற்றிபெற வாழ்த்துக்கள். எப்படிங்க எழுதுறீங்க!! ஆச்சரியமாக உள்ளது.
ReplyDeleteவிரையும் பரிபோலுன் வீரமிகு பாக்கள்!
ReplyDeleteஉரைத்திடும் வெற்றி உணர்!
அருமையான உணர்வுமிக்க கவிதை!
வெற்றி உங்களுக்கே ஆக என் உளமார்ந்த வாழ்த்துக்கள் மா!
காலதாமத வரவும் வாழ்த்தும்!
பொறுத்திட வேண்டுகிறேன்!