ஓம் சாயி நாதா ஓம் சாயி நாதா
சர்வமும் நீயே ஓம் சாயி நாதா
சர்வமும் நீயே ஓம் சாயி நாதா
நிம்மதி உந்தம் சந்நிதி சாயி
நீயே எங்கள் பெருநிதி சாயி
நீயே எங்கள் பெருநிதி சாயி
நம்பிய பேரின் நலங்களைக் காப்பாய்
நாளும் பொழுதும் நம்பிக்கை வளர்ப்பாய்
நாளும் பொழுதும் நம்பிக்கை வளர்ப்பாய்
வம்படி யான வழக்குகள் சாயி
வந்து வழங்கிடும் வழுவா நீதி
வந்து வழங்கிடும் வழுவா நீதி
தெம்புடன் உம்மை தேடினேன் சாயி
தென்பட வில்லையேன் தேற்றிட சாயி
தென்பட வில்லையேன் தேற்றிட சாயி
சந்தனக் காடு உம்மனம் சாயி
சாந்தி நிலவச் செய்திடும் தாயி
சாந்தி நிலவச் செய்திடும் தாயி
நீர்க்குமிழ் ஆன வாழ்வென வுணர்த்தி
நிந்தனை செய்வதை நிறுத்திடச் செய்யும்
நிந்தனை செய்வதை நிறுத்திடச் செய்யும்
பன்னீர் உந்தம் பவித்திரம் சாயி
பலவு பாதைகள் போக்கிடும் சாயி
பலவு பாதைகள் போக்கிடும் சாயி
தந்திரம் நிறைந்த உலகினில் நீயே
தாயு மானாய் தவத்திரு மகனே
தாயு மானாய் தவத்திரு மகனே
மந்திரம் போலும் நாமம் ஜெபித்தேன்
மனவலி தீர்த்து மகிழ்வதைச் சூட்டும்
மனவலி தீர்த்து மகிழ்வதைச் சூட்டும்
துன்பம் சூழும் பொழுதினி லன்பை
சுயநலம் இன்றி சொரிபவர் நீரே
சுயநலம் இன்றி சொரிபவர் நீரே
சுற்றும் முற்றும் பார்க்கிறேன் சாயி
சுந்தர முகமது எங்கே சாயி
சுந்தர முகமது எங்கே சாயி
சொக்கிடும் உந்தம் முகவுரை காட்டும்
சுலபம் மான வழிதனை நீட்டும்
சுலபம் மான வழிதனை நீட்டும்
சூட்சுமம் தெரிந்தவர் நீரே சாயி
சுழலும் துயரினைத் தூக்கிடும் சாயி
சுழலும் துயரினைத் தூக்கிடும் சாயி
விதியின் பிடியில் விழுப வரைநீ
விரைந்தே வந்து விடுதலை செய்வாய்
விரைந்தே வந்து விடுதலை செய்வாய்
கோபம் கொண்டு குடிகெடு ப்பவரை
கோலம் இட்டுக் கும்பிடச் செய்வாய்
கோலம் இட்டுக் கும்பிடச் செய்வாய்
வாதம் செய்து வலிமிகக் கூட்டும்
வஞ்சக நெஞ்சினில் வளங்களைத் தீட்டும்
வஞ்சக நெஞ்சினில் வளங்களைத் தீட்டும்
பாதக மான பழவினை நீக்கி
பகுத்தறிவை நம் மதியில் புகுத்தும்
பகுத்தறிவை நம் மதியில் புகுத்தும்
கண்களில் ஆறு கரை புரண்டோடக்
கனவிலும் சாயி கதை படித்தோயும்
கனவிலும் சாயி கதை படித்தோயும்
புண்ணியம் தேடுமுன் புகழினைப் பாடும்
புண்ணியன் உன்னிடம் புலம்பித் தவிக்கும்
புண்ணியன் உன்னிடம் புலம்பித் தவிக்கும்
உள்ளம் தன்னில் உதிரப்போக்கு
உதியினை யிட்டு உரம்தனை ஊட்டும்
உதியினை யிட்டு உரம்தனை ஊட்டும்
பள்ளம் தோண்டும் பகைவர்க்கு நீயே
பரிவுடன் பழக பதவுரை கூறும்
பரிவுடன் பழக பதவுரை கூறும்
வாழ்வு மேம்பட வழிமுறை காட்டி
வையம் முழுதும் வழி படச் செய்யும்
வையம் முழுதும் வழி படச் செய்யும்
கண்களில் நிந்தன் கனவழியாது
காப்பேன் என்று கனிமொழி கூறும்
காப்பேன் என்று கனிமொழி கூறும்
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
வணக்கம் சகோ நலமா ? நீண்ட இடைவெளிக்குப் பிறகு அழகிய சாய் பாடலுடன் கண்டதில் மகிழ்ச்சி.
ReplyDeleteவாழ்க நலம்.
நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் கவி கண்டு மகிழ்ந்தேன்
ReplyDeleteவணக்கம் இனியா சகோதரி/இனியா எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது!! மீண்டும் உங்களை சாய் கவி வரிகளுடன் காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சி. கவி வரிகளை என்ன சொல்ல!!! அருமை அருமை என்பதைத் தவிர!!
ReplyDeleteமிக நீண்ட இடைவெளிக்குபின் பார்க்கிறேன் அழகிய சாய் பாடலுடன்....வருக தொடர்ந்து எழுதுக
ReplyDeleteமீள்வருகைக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஉணர்வலைகள் ஓங்கி ஆர்ப்பரிக்கும் கவிவரிகள்!
ReplyDeleteநீண்ட காலத்திற்குப் பின்னர் உங்களைக் காண்கிறேன்.
நலமா தோழி?..
சொல்லி வைத்தாற்போல் நானும் இன்றுதான் வலையில்...:)
தொடர்ந்து சந்திப்போம்!வாழ்த்துக்கள் தோழி!
வாழ்க வளமுடன்!
ஆஹா ஆஹா இனியாவும் வந்தார் இதயம் மகிழ்கிறதே .....ஆமா சொல்லிவைத்தர்ப்போல் இளமைதியக்காவும் தாங்களும் ஒரே தடவையில் வந்திருக்கீங்களே இப்போதான் வலையில் வர நேரம் கிடைத்தது போல ....ம்ம் நல்லது தங்களை நீங்க நாட்க்களின் பின்னர் வலையில் அதுவும் அழகிய சாய்ராம் பாடலோடு கண்டு நெஞ்சம் நிறைகிறது தொடர்ந்து வாருங்கள் இது எங்கள் எல்லோரினதும் அன்பு வேண்டுகை தட்டிக் கழித்தால் தண்டனை உண்டு ஆமா சொல்லிட்டேன் .....!
ReplyDeleteமீண்டும் கவியோடு உங்களைக் காண நாளை வருகிறேன் வாழ்க நலம் வளரட்டும் தங்கள் கவிப்பயணம் !
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
ReplyDeleteஎனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்
நன்றியுடன்
சாமானியன்
வணக்கம் !
ReplyDeleteபங்கயம் பூத்துக் கங்கை
....பசுமையும் கொள்ளல் போல!
மங்கலம் பெருகி மக்கள்
....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
எங்கிலும் அமைதி வேண்டி
...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
...பொலிவுற வாழ்த்து கின்றேன் !
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !
பிரார்த்தனைகள் பலனளிக்கும்
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துகள்
புத்தாண்டு வாழ்த்துகள்
If some one needs expert view on the topic of
ReplyDeleterunning a blog afterward i suggest him/her to go to see this blog, Keep up the pleasant work.