Thursday, July 9, 2015

எங்கே அந்த நிலவு இங்கே வந்து உலவு

gallery.mobile9.com

பட உதவிக்கு நன்றி

அன்புத்தோழி இளமதிக்காய் தவிக்கும் நெஞ்சோடு அவர்  நலம் பெற்று மீண்டும் வலையுலகில்  உலாவரும் நாளை எதிர்நோக்கி நம்பிக்கையோடு  காத்திருக்கிறேன் ! விரைவில் நலம்பெற வேண்டி! வாழ்த்துகிறேன்!

தாய்நாட்டை விட்டிங்கு தவிப்போடு வந்தும்
தளராத உணர்வோடு தனிப்பட்டு நின்றும்
சேய்காத்து நலம்யாவும் சிறந்தோங்க என்றும்
சிந்தித்தே எந்நாளும் செயற்பட்டு வந்தார்(ய்)
பாய்ந்தோடு நீர்‘ஐயோ பாழிற்குள் செல்லப்
பயனின்றி வீழக்கின்ற போராட்டம் கொல்லும்
நோய்நீங்க நொடிதோறும் நினைக்கின்றேன் தோழி
நொறுக்கத்தான் நினைக்கின்ற விதிகொல்ல வேண்டும்.

நிலவெங்கே என்றென்றன் நெஞ்சென்றும் நோக
நிலைமாறி வரவேண்டும் இருள்நீங்க வானில்
சிலகாலம் கழியட்டும் சீர்பெற்று நன்றாய்ச்
சிறகோடு வரவெண்ணச் சுமையோடோ நின்றாள்?
பலமில்லை எனக்கிந்த பளுதாங்க லாகா!
பதைப்போடு நானொன்றும் புரியாது நிற்பேன்!
வலம்மீண்டும் இளமதியார் வரவேண்டும் என்றே
வரம்கேட்பேன் தமிழேநீ தரவேண்டும் என்றே!

32 comments:

  1. வணக்கம் இனியா,
    தங்கள் வேண்டுதல் நிறைவேறும்,
    அது பிறரின் நலம் வேண்டியல்லவா?
    அவர் பூரண நிலவாய் வளம் வருவார்,
    அவருக்கான இந்த வரிகள் அருமை,
    வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி! உங்கள் முதல் வருகை கண்டு மகிழ்கிறேன். நிச்சயமாக வருவார்ம்மா தங்கள் வாக்கு பலிக்கட்டும் தோழி நன்றி! வாழ்த்துக்கள்

      Delete
  2. வணக்கம்
    அம்மா
    அன்பின் பால் விளைந்த கவி கண்டு மகிழ்கிறேன்... நிச்சயம் விரைவில் சந்திக்கலாம்... ஆண்டவனைப்பிராத்திப்போம்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ரூபன்வருகைக்கும் கருத்துக்கும் ! நிச்சயமாக எல்லோரும் பிரார்த்திப்போம் விரைவில் குணமடைய. நன்றி ரூபன் ! வாழ்த்துக்கள் ...!

      Delete
  3. என் பிரார்த்தனைகளும் சேரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வாழ்த்துக்கள் ...!

      Delete
  4. வலம்மீண்டும் இளமதியார் வரவேண்டும் என்றே
    வரம்கேட்பேன் தமிழேநீ தரவேண்டும் என்றே!..

    நமது வேண்டுதலும் அதுவே!..

    வாழ்க நலம்!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ !வருகைக்கும் வாழ்த்திற்கும் ...! நிச்சயம் வருவார் விரைவில் குணமடைந்து.

      Delete
  5. இளமதிக்கு உடல் நலமில்லையா. தெரியவில்லையே. அவர் நலம் பெறநானும் வேண்டுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஐயா அவர் சில காலமாக நலமின்றியே உள்ளார். அதனால் தான் அவர் வலைக்கு வர முடிவதில்லை. நன்றி ! ஐயா வரவுக்கும் கருத்திற்கும்.வாழ்த்துக்கள் ...!

      Delete
  6. சகோ இளமதியாருக்கு என்ன ஆயிற்று! எதுவாக இருப்பினும் விரைவில் மீண்டு வழக்கம் போல படைப்புக்களை வழங்க நானும் இறைவனை வேண்டிக்கொள்கின்றேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் உடல் நலக் குறைவு சீக்கிரம் நலம் பெற்று வருவார் சகோ !அவருக்காக நாம் வேண்டுவோம் ஆண்டவனை. நன்றி வாழ்த்துக்கள் சகோ !

      Delete
  7. விரைவில் வருவார்கள்... நம்புகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. எல்லோருடைய நம்பிக்கையும் நிச்சயம் வீண் போகாது, நம்பிக்கையோடு காத்திருப்போம். நன்றி சகோ வாழ்த்துக்கள் ...!

      Delete
  8. தோழி இளமதி நலம் பெற்று மீண்டும் புதுப்பொலிவுடன் இணையத்தில் வலம் வர நானும் வேண்டுகிறேன். தமிழை.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிம்மா எல்லோருடைய வேண்டுதலும் நிச்சயம் கைக் கை கொடுக்கும் நம்பிக்கையோடு காத்திருப்போம். நன்றி வாழ்த்துக்கள் !

      Delete
  9. இளமதியாரைக் காணாது துடிக்கும்
    உள்ளங்கள் அதிகரிக்கிறதாகத் தகவல்
    இச்செய்தி இளமதியார் காதிற்கு
    எட்டிச்சா... கிட்டிச்சா...

    ReplyDelete
    Replies
    1. ம்..ம் எட்டிச்சு சகோ அவர் விரைவில் நலம் பெற்று வருவார் நிச்சயமாக.நன்றி வாழ்த்துக்கள் ...!

      Delete
  10. தங்களின் வேண்டுதல் பலிக்கும் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. ஆம் சகோதரரே பலிக்கணும் அது தான் எல்லோர் விருப்பமும். நன்றி வாழ்த்துக்கள் ..!

      Delete
  11. எண்சீர் விருத்தத்தில் ஏற்றிய வெண்பாக்கள்
    கண்பட்டு நெஞ்சைக் கலங்கடிக்கும் - வெண்மதியாய்த்
    தேய்ந்த இளம்பிறையைத் தேற்றி முழுநலமும்
    ஆய்ந்து வரல்நம் அவா!

    விருத்தங்கள் அருமை.

    தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வெண்பாவில் சொல்ல விருப்புற்றுச் சொல்சேர்க்கப்
      புண்ணான நெஞ்சம் புகலெங்கு ? - எண்ணத்தில்
      வெந்து தணியாத வேதனைகள் கொண்டவரைச்
      சிந்தித்த நெஞ்சத்தின் சோர்வு.

      எல்லோரது அவாவும் அதுவே. நன்றி! வரவுக்கும் நல்வெண்பா பின்னூட்டத்திற்கும்.!

      Delete
  12. இளமதி பவுர்ணமியரய் வளர்ந்து நம் முன் வருவார். நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்திற்கும். நிச்சயம் வருவார். காத்திருப்போம் வாழ்த்துக்கள் !

      Delete
  13. சகோதரி இளமதி அவர்கள் மீண்டும் வந்திடுவார். ஒளிர்வார். நிச்சயமாக. நம் எல்லோரது நேர்மறை பிரார்த்தனைகளும் ஒரு சக்தியைக் கொடுக்காதா சகோதரி?!!! அந்த இறைவனைச் சென்றடையும் நம் பிரார்த்தனைகள்! இளமதி வருவார்! வருவார்! வருவார்!!

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமா சகோ நம் அன்பும் வேண்டுதலும் அவரை குணப்படுத்தும் என்பதே என் எண்ணம். மிக்க நன்றி சகோ ! வாழ்த்துக்கள் ...!

      Delete
  14. நெகிழ வைக்கும் பா
    வாழ்த்துக்கள்
    வருவார் ..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ ! சகோ வாழ்த்துக்கள் ...!

      Delete
  15. தங்களின் தோழி இளமதி விரைவில் குணமடைய என்னுடைய பிரார்த்தனைகள் சகோ. ஊருக்கு சென்று விட்ட படியால் உங்கள் பதிவை பார்க்க சிறிது தாமதமாகி விட்டது.

    ReplyDelete
    Replies
    1. அட அதனால் என்ன நேரம் கிடைக்கும் போது பார்த்தால் போதும்.
      வந்து கருத்து இடுவதே பெருமகிழ்ச்சி தாமதமானால் என்ன நன்றி ம்மா வாழத்துக்கள் ...!

      Delete
  16. அவர் என்றும் நலமுடன் இருந்து நமக்கு நல்ல பாக்களைத்தரவேண்டும்.நானும் வேண்டிக் கொள்கிறேன் என் சாயிடம்.

    ReplyDelete
  17. //நொறுக்கத்தான் நினைக்கின்ற விதிகொல்ல வேண்டும்.// அருமை இனியா.
    இப்பொழுதுதான் பார்க்கிறேன், இளமதி வந்தது பெருமகிழ்ச்சி தோழி

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.