வீற்றிடென் உள்ளமாம் வெற்றறை உன்னொளி
விரட்டுக இருளை நின்று
வெல்வதும் தோற்பதும் ஒன்றெனக் கொண்டுநான்
வாழ்ந்திடும் வழியி தென்ற
ஆற்றலில் என்புயல்
அடங்கிடத் தொடங்கிடும்
அன்பினில் இணைவ தென்று?
ஆள்பவா
உன்னில்நான் அடைக்கலம் என்றிட
அமைதியே பிறந்த தின்று
நூற்றிடும் சொற்களை
நோயிலாப் பாக்களாய்
நின்னடி தூவி நானே
நிம்மதி
பெருகிட நிழலென நின்னையே
நெஞ்சமாய் ஏற்க லானேன்.
சாற்றுவேன் கந்தனே
சகலமும் நீயெனச்
சரிவினில் போகும் போதும்
சாந்தனே நின்னடி சரண்சரண் என்பனே
சாவனை மேவும் போதும்.
முருகனே! சண்முகா!
குமரனே! வள்ளியின்
மனம்கொண்ட மால்மரு கனே!
முகடுகள் உயர்கோயில் திகழ்கின்ற குறிஞ்சியை
மோகித்த மலைவா சனே!
குருவாகித்
தந்தைக்கும் உபதேசம் செய்திட்ட
குகனேசீர் மயில்வா கனா!
கடம்பனே கதிரேசா கதியென்று சேர்ந்தோரைக்
காத்திடும் கார்த்தி கேயா!
சிறுவனாய்
அவ்வைக்குச் சுட்டபழம் தந்தவா!
சுப்ரமணி செவ்வே லனே!
சுந்தர! தாய்தந்தை சுற்றியே காய்விட்ட
செல்லமே! சிவக்கும ரனே!
சரவணா பாலதண் டாயுத
பாணியே!
செந்தில்வடி வேல சரணம்!
சிந்தையில் நிறைகின்ற சிங்கார வேலனே!
சித்தனுன் அடிகள் சரணம்!
தேன ம்மை லக்ஷ்மணன் அவர்கள் வலையில் இப்பொழுதுதான் திருப்பரங்குன்ற மலையினில் நானும் உட்கார்ந்து முருகனை வேண்டினேன் என்று சொன்னேன்.
ReplyDeleteஇதோ அந்த முருகன் வருகிறான்
பாடல் ஒன்று தருகிறான்
பாடல் அல்ல இது. அவன் தரும் பஞ்ச அமிர்தம்.
பஞ்சாமிர்தம்.
பாடு பாடு என உந்துகிறான்.
பாடுகிறேன் அவனது ராகத்திலே
ஷண்முகப்பிரியா என்னும் பெயரில்.
சுப்பு தாத்தா.
முருகனை நினைந்து வழிபட
ReplyDeleteஅருமையான பக்திப் பாடல்
http://www.ypvnpubs.com/
சிந்தையில் நிறையந்து நிற்கின்ற சிங்கார வேலன்
ReplyDeleteவருவான் அருள்வான்
அருமை சகோதரியாரே
நன்றி
வணக்கம்
ReplyDeleteஅம்மா
பக்கதி மயம்.. ஓம் சரவணபவ.......அற்புதமாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அருமையான பக்திப்பாடல் சகோ.
ReplyDelete/ சுந்தர! தாய்தந்தை சுற்றியே கனிபெற்ற
ReplyDeleteசெல்லமே! சிவக்கும ரனே!/ நான் கேட்ட கதை இல்லையே என்ன இருந்தாலும் கதைதானே தேற்றிக் கொள்கிறேன் வாழ்த்துக்கள்
வாருங்கள் ஐயா !
Deleteபிறழ எழுதினேன் மாற்றிவட்டேன் விட்டேன்
வருகைக்கும் சுட்டியமைக்கும் மிக்க நன்றி ஐயா !
மிக உன்னிப்பாக கவனித்திருக்கிறார் ஜி.எம்.பி. வரிகளை பொருத்தமாக மாற்றியது அருமை
Deleteதமிழ்க்கடவுளைப் போற்றிப்பாடிய பாடல் அருமை.
ReplyDeleteமுருகனருள் முழுவதுமாய் கிடைக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteமுருகனை அப்பாவியா எனக் கேட்கும் என் பாடலின் சுட்டி இதோ படித்துப் பாருங்களேன்
ReplyDeletehttp://gmbat1649.blogspot.in/2012/09/blog-post_17.html
முருகன் பாமாலை அருமை சகோ
ReplyDeleteஅழகனுக்கு அழகுப் பாமாலை!
ReplyDeleteசொல்லச் சொல்ல இனிகுதடா முருகா!
அருமை! வாழ்த்துக்கள் தோழி!
சிங்காரவேலனைக் கண்டேன். மனம் உவகை கொண்டேன். நன்றி.
ReplyDeleteசிங்கார வேலனே தேவா!!! பாமாலையைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை. மனதை மயக்குகின்றது. முருகனின் அருள் பரிபூரணமாக உங்களுக்கு!!! வாழ்த்துகள் சகோ!
ReplyDeleteதமிழ்க்கடவுளை இன்றமிழால் வாடாப்பாமலை சூடி இருக்கிறீர்கள்!
ReplyDeleteஅருமையாக இருக்கிறது அம்மா.
வாய்விட்டுப் படித்துப்பார்த்தது இந்த ஊமையும். :)
தொடருங்கள்.
நன்றி
இனியாச்செல்லம் !! என்ன நவம்பர் தொடங்கி இன்னும் நீங்களும் என்னைபோல அதுவும் எழுதலையா!! சீக்கிரம் வாங்கம்மா. உன்னை கண் தேடுதே!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் உளம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் இனியா, நலமா? சில நாட்களாய்க் காணவில்லையே?
ReplyDeleteஉங்களை ஒரு தொடர் பதிவில் இணைத்திருக்கிறேன். :)
http://thaenmaduratamil.blogspot.com/2015/11/kadavulai-kanden-blogpost-chain.html
அருமை..வாழ்த்துக்கள்
ReplyDeleteஅருமையான சிந்துக் கவி! வாழ்த்துக்கள்! - இராய செல்லப்பா
ReplyDeleteவணக்கம், நான் எப்படி இங்கு வராமல்,,,,
ReplyDeleteஎங்கே தங்களைக் காணவில்லையே? நலம் தானேமா?
முருகன் புகழ்ப்பாடும் முத்தான பா !
ReplyDeleteநன்றி
சாமானியன்
எனது புதிய பதிவு : " க்ளிஷே ! "
http://saamaaniyan.blogspot.fr/2015/11/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
கந்தனைப் பாடுமுன் கவித்துவம் கண்டு'என்
ReplyDelete........கண்களும் கசிந்து நிற்க
சிந்தனை பற்பல செழித்துள மோத'நல்
........சந்தமும் தொடர்ந்து கற்க !
அத்தனையும் அருமையான பாக்கள் இதுநாள் வரை வராமல் இருந்திருக்கிறேன் பொறுத்தருளுங்கள் இனித் தொடர்கிறேன்
வாழ்க வளமுடன்
என்ன இனிமையான பாடல்! காலையில் மனதுக்கு இதம் அளிக்கும் இன்சுவை பாடல்.
ReplyDelete