Thanks for the image |
காலம் முழுவதும்
கண்ணுக்குள்ளேயே
இருந்து விடலாமா
நேரம் போவது தெரியாமல்
பெண்ணுக்குள் தோன்றும் புதிராய்
மண்ணுக்குள் தோன்றும் மரமாய்
விண்ணுக்குள் தோன்றும் வரமாய்.
பண்ணு க்குள் தோன்றும் பரவசமாய்.
Thanks for the image |
நீ எனைத் தாங்க
நானும் உனைத் தாங்குவேன்
என் உள்ளங்கையில் வைத்து
உயிரிலும் மேலாய் என் உயிர்
உள்ளவரை உலகே
Thanks for the image |
.
மோதிப் பார்ப்பதால் பாதிப்பு தான் அதிகம்
வாதிக்காமல் வாழ்க்கையை வென்றிடலாமே
பூரிக்கும் படியாய்
நாம் என்ன மனிதர்களா
மாற்றிப் பேசி மனம் நோக வைக்க
என்ன நான் சொல்றது
.
Thanks for the image |
பனியில் நனைந்தாலும்
துளியும் நிறம் மாறேன்
தனியே கிடந்தாலும்
தளர்ந்து நான் போகேன்
துணையை தேடி நான்
தொலைந்தும் போகேன்
(என்கிறது இந்த சிவப்பு ரோஜா )
வலையுறவுகளுக்கு வணக்கம் தயவு செய்து மன்னிக்கவும் நான் மீண்டும் வரும் வரை எனை மறவாதிருக்க இது ம்..ம்.. அப்புறம் புதிய நபர் என்றல்லவா எண்ணுவீர்கள் அது தான். நன்றி !
யாரு முணுமுணுக்கிறது. திட்டாதீங்கப்பா ப்ளீஸ்.