எல்லை இல்லா வானம் எங்கும்
ஏணிப்படிகள் இல்லை போலும்
ஏழை நெஞ்சம் ஈழம் எங்கும்
எடுத்து இயம்ப இல்லை தஞ்சம்
ஏற்பதில்லை ஏழை நியாயம்
காக்கவில்லை பெண்ணின் மானம்
எத்தனை இன விரோதம், பதவி மோகம்
எண்ணிலடங்கா உயிர்கள் சேதம்
எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்ற
எண்ணம் கொண்டான் அண்டை அயலான்
எமனாக அரணா பாரதம் புதிரா
எமை காக்க வேண்டும் உயிரா
எட்டயபுர பாரதிக்கு எட்டவில்லையே
இந்த செய்தி எட்டியிருந்தால் எகிறியே
குதித் திருப்பான் ஏளனம் செய்திருப்பான்
ஏட்டிலே எழுது முழுதும் எடுத்ததை பாடு பரவும்
என்று காணும் இன்ப வாழ்வு
ஏங்கும் நெஞ்சம் வசந்தம் பாடும்
ஏரும் மீளும் ஊரும் வாழும்
வானவில்லும் வந்து போகும்