தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
ஆமா ஆமா
இன்னிக்கு இங்க நாம எல்லாம் ஏன் கூடியிருக்கோம் தெரியுமா
ஆமா ஆமா சொன்னாத் தானே தெரியும்
ஏங்க கூடியிருக்கோம் அவசரப் படாத தம்பி இரு இரு
அதுக்குத்தானே வந்திருக்கேன் நல்லா
அளக்கப் போறேன் கேளு தம்பி
அப்பிடியா
ஆமா அப்புறம் சொல்லுங்கண்ணா ஆமா
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
புதுக்கோட்டைக்கு போகப்போறோம் நம்ம
பைந்தமிழை பரப்பப் போறோம்
அப்பிடியா அண்ண
அப்பிடி என்ன விசேஷம்
அங்க இருக்குண்ண அதுவா
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
வலப்பதிவர் எல்லோரும் கூடப் போறோம் நாங்க
வக்கணையா சேர்ந்தங்கு பேசப் போறோம்.
விருந்தும் சேர்ந்து உண்ணப் போறோம்.
ஆமா விருந்தும் சேர்ந்து உண்ணப் போறோம்
வித்தகரை எல்லாம் காணப் போறோம் நல்ல
வித்தைகளும் அங்கு செய்யப் போறோம்
ஆமா வித்தைகளும் அங்கு செய்யப் போறோம்
விருந்தும் உண்டா ...அட அப்பிடியா அண்ண அப்ப நானும் வர்றேன் தானே இல்ல அண்ண
ஆமாட சாப்பாட்டு ராமா
அண்ண வேண்டாம் இப்பிடி சபையில வைச்சு மானம் கெடுத்தாதீங்க அண்ண
சரி சரி உள்ளதைத் தானேடா.சொன்னேன்.. ம்..ம் கோபத்திற்கு மட்டும் குறைச்சல் இல்ல ....
குறுக்க குறுக்க பேசாதே அப்புறம் நான் மறந்திடுவன் பேச வந்ததை
சரி அண்ண ஆமா ஆமா
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
போட்டிகளும் வைக்கப் போறாங்க நல்ல
பொக்கிஷங்கள் கொடுக்கப் போறாங்க
கூட பரிசுகளும் வழங்கப் போறாங்க
ஆமா பரிசுகளும் வழங்கப் போறாங்க
ஆமா ஆமா என்ன பொக்கிஷமா அண்ண அது என்ன
அதுவா நல்ல நூல்கள் எல்லாம் வெளியாகிறது இல்ல
அதைத் தாண்டா சொன்னேன். சரி இப்படியே பேசிட்டு இருந்தா ஆவாது
புறப்படு புறப்படு புறப்படு
பதிவர் திருவிழாவை காணுவோம் புறப்படு
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லிசை பாட
அட நாம போக முன்னம் பதியணுமே
முதல்ல இரு இங்கப் போய் முதல்ல பதி இல்லாட்டி சாப்பாடு அம்போ தான்.
அத்துடன் இந்தக் கையேட்டுக்குத் தகவல் பதிவு செய்யணுமே ம்..ம் அப்புறம் என்ன சரி இப்போ விபரம் எல்லாம் சொல்லிட்டேன்ல என்னடா பேந்தப் பேந்த முழிக்கிற சொல்லிட்டனா இல்லையா ஓ இரு இரு
முக்கியமான விடயத்தை சொல்ல மறந்துட்டேன்
துண்டுப் பிரசுரத்தை எல்லோர்க்கும் கொடுதிட்டுவா சரி அண்ண இந்தா ...
போட்டிக்கு கட்டுரையோ கவிதையோ போய் எழுது போ....
நானா எனக்கு என்ன அண்ண தெரியும் ஆமா வைத் தவிர போட்டிக்குக்
“வலைப்பதிவர் திருவிழா-2015” நிகழ்விற்கென, தனியே ஒரு வங்கிக் கணக்குத் தொடங்கப்பட்டுள்ளது. அந்தக் கணக்கு விவரம் வருமாறு :-
NAME - MUTHU BASKARAN N
SB A/c Number - 35154810782
CIF No. - 80731458645
BANK NAME - STATE BANK OF INDIA,
PUDUKKOTTAI TOWN BRANCH
BRANCH CODE - 16320
IFSC - SBIN0016320
(இந்த வங்கிக் கணக்கு கணினித்தமிழ்ச்சங்க நண்பர்களின் ஆலோசனைப்படி,
“நல்லாசிரியர்” திரு பொன்.கருப்பையா அவர்கள் உள்ளிட்ட இருவர் பெயரில்
தொடங்கப்பட்டுள்ளது. ஆயினும் ஒருவர் பெயர் குறிப்பிட்டாலே போதுமானது)
இந்தக் கணக்கின் வழி நன்கொடை செலுத்துவோர், நன்கொடையாளர் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை முதலான விவரங்களை bloggersmeet2015@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ, +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) தகவல் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்தக் கணக்கின் வழி நன்கொடை செலுத்துவோர், நன்கொடையாளர் பெயர், ஊர் மற்றும் பணம் செலுத்திய நாள், தொகை முதலான விவரங்களை bloggersmeet2015@gmail.com எனும் மின்னஞ்சலுக்கோ, +91 94431 93293 எனும் செல்பேசி எண்ணுக்கோ (குறுஞ்செய்தி) தகவல் தெரிவித்திடவும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
இந்த விபரம் தேனுக்கிட்ட இருந்து சுட்டது நன்றிம்மா தேனு
தொல்கலையான வில்லிசையில் வலைப்பதிவர் சந்திப்பு!..
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி..
வாழ்க நலம்!..
அடடே வில்லுப்பாட்டு ஸூப்பர் சகோ வாழ்த்துகள் மிகவும் ரசித்தேன்
ReplyDeleteஆஹா அற்புதமான வில்லுப்பாட்டுக்கலையில் பதிவர் சந்திப்பை கலக்கலா சொல்லியிருக்கிங்க. நன்றிங்க.
ReplyDeleteஅசத்திட்டீங்க பதிவர் சந்திப்பை இப்பவே!
ReplyDeleteஅற்புதமா எழுதியிருக்கீங்க தோழி!
விழா களைகட்டிடிச்சு இதோட..:)
நல்ல கற்பனை! மிகச் சிறப்பு!
வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்!
வணக்கமா,,,,,,,
ReplyDeleteஇதச்சொன்னால்,,,,,,,,
உண்மையா இந்த முறையில் தான் சொல்லனும் என்று நினைத்தேன். ஆனால் படிக்கும் போது எப்படி இருக்கும் என்று,,,,,,,,,,
தாங்கள் சொல்லியுள்ளது அருமைமா,,,,,,,,,,
சுபமங்களம் அருமைமா,,,,,,,,
வணக்கம் சகோ !
ReplyDeleteஅடடா அடடா
வில்லிசை பாடி விருந்துக்கு அழைக்கும் உங்கள் தாராள மனசுக்கு நாங்க விருந்து வைக்கணும் போல இருக்கே ! செம
பல்திறமை கொள்'இனியா பாட்டிசை நெஞ்சினிக்கும்
சொல்லுருக்கித் தந்த சுவை !
தொடர வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்
வணக்கம் நண்பரே! உங்களுக்கே உரிய தனிப்பாதையில் சென்று புதுக்கோட்டை மாநாட்டை பிரபலப்படுத்திவிட்டீர்கள்! நன்றி!
ReplyDeleteஆஹா அருமையான வில்லிசைப்பாட்டு...வாழ்த்துகள்மா.
ReplyDeleteஆகா
ReplyDeleteசோமு அவர்களின் வில்லுப் பாட்டுக் கச்சேரியிக்கேட்ட ஓர் உணர்வு
அருமை சகோதரியாரே
வணக்கம்
ReplyDeleteஅம்மா
அடா...அடா..நான் நினைத்தேன் ஏதோ வில்லுப்பாட்டு என்று படித்து போகும் போதுதான் தெரிந்தது.. நம்ம பதிவர் சந்திப்பு என்று... அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் அம்மா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றிகள் சகோதரி...
ReplyDeleteபதிவே பெரும் ஆதரவு
ஆகா! இனியாவின் வில்லுப்பாட்டு இனிமையோ இனிமை!
ReplyDeleteஇது என்ன சுட்டது, நானும் வலைப்பதிவர் விழாவிற்கான தளத்தில் இருந்து சுட்டது.. ஹாஹா சுட்ட பழம் சுவைக்கும்! ஹஹா
அம்மு.....செல்லம்.....ஸ்வீட்டி ......தேங்க்ஸ் தேங்க்ஸ் தேங்க்ஸ்:))) அட்டகாசம் ம்மா!!!! விழாக்குழுவின் சார்பாக என் நன்றிகளும்:)
ReplyDeleteஅன்புள்ள சகோதரி,
ReplyDeleteதந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாடி விழாவிற்கு அழைத்தது அருமை.
புதுக்கோட்டைக்கு வித்தியமாக அழைக்கும் பாணிஅருமை. சந்திப்போம்.
ReplyDeleteஅழகான அழைப்பு!
ReplyDeleteவில்லுப்பாட்டு அருமை
ReplyDeleteவில்லுப்பாட்டு வழியே விருந்துக்கழைத்த விதம் அருமை. பாராட்டுகள் இனியா.
ReplyDeleteவணக்கம்...
ReplyDeleteதாங்களும் விமரிசனப் போட்டியில் கலந்து கொள்ளலாம்...
இணைப்பு : →இங்கே சொடுக்கவும்←
புதுக்கோட்டை விழாக்குழுவின் சார்பாக...
அன்புடன் திண்டுக்கல் தனபாலன்