எட்டாத உயரத்திலே வட்ட நிலவோ
வந்து வந்து போவதினால் கிட்டவில்லையோ
வளர்ந்து தேய்ந்து போவதானால் வண்ண நிலவோ
பௌர்ணமியில் வருவதனால் பால் நிலவோ
திருமணத்தின் பின்னர் அது தேன் நிலவோ
கன்னக்குழி விழுவதென்ன கன்னத்திலா
உன் விம்பம் விழுந்ததென்தன் கண்ணிலா
என் நினைவு தொலைந்ததென்ன உன்னிலா
நீ கோபம் கொண்டதென்ன என்னிலா
உன் சீற்றம் தணிந்தது என்ன என் சொல்லிலா
உன் சிந்தை மகிழ்ந்ததென்ன அன்பிலா
என் கனவு மிதந்ததென்ன விண்ணிலா
உன்மதிப்பு உயர்ந்ததென்ன பண்பிலா
செல்வம் தவழ்ந்ததென்ன கையிலா
வானம் பொழிந்ததென்ன மண்ணிலா
கப்பல் கவிண்டதென்ன கடலிலா
சேலை விழுந்ததென்ன முள்ளிலா
சிலைகள் பொழிந்ததென்ன கல்லிலா
வீரம் வந்ததென்ன வில்லிலா
வாழ்வு வந்ததென்ன பணிவிலா
சர்க்கரை கலந்ததென்ன பாலிலா
இன்பதுன்பம் வந்து போகும் வாழ்விலா
நிலவு மறைந்ததென்ன முகிலிலா
முற்றும் துறந்து விடும் முடிவிலா