Friday, June 20, 2014

இப்படிக் கேட்டால் எப்படி உரைப்பேன்


   
     
யார் அந்த மதுரை தமிழன் இழுத்து வாருங்கள் அவரை இல்லை இல்லை (தமிழுக்கு பங்கம் ஏதும் நேர்ந்து விட்டால் என்ன செய்வது ) மெல்ல அழைத்து வாருங்கள். யாராவது பூரிக் கட்டை இருந்தால் எடுத்து வாருங்கள்  தயவு செய்து ஏனெனில் வந்து சேர எவ்வளவு நேரம் எடுக்கும் தெரியாதே எனவே இன் த மீன் டைம் பூரி சுடத் தான்.  ஆமா தெரியாமத் தான் கேட்கிறேன் ஏதாவது ஒரு கனவுக் கன்னியோடு டூயட் பாடுவது போல கனவு காண்பது தானே அதை விட்டு விட்டு வலைதள உறவுகளை பந்தாடுவது போலவா கனவு காணவேண்டும். ராஜி பொண்ணை முதல்ல சொல்லணும் இவ எதுக்கு சும்மா இருக்காம அவர் கனவுல போய் கேள்வி எல்லாம் கேட்டுகிட்டு சரி போனது தான் போனா எப்பிடி சுகமா இருகிறீங்களா என்று கேட்டுவிட்டு வரவேண்டியது தானே. அதென்ன 10 கேள்வி வேண்டிகிடக்கு, எல்லாம் நேரம் தான் வியாழ மாற்றம் செய்யும் வேலை போல... சரி அது தான் போகட்டும் என்று பார்த்தால் என் அம்மு மைதிலி ,தோழி அம்பாள் ,சகோதரர் சொக்கன் எல்லாரும் பிளான் பண்ணி என்னையும் இழுத்து இல்ல விட்டுட்டாங்க. என்னையும் உங்க விளையாட்டில சேர்த்து கொண்டமைக்கு ரொம்ப நன்றிங்க கண்ணுகளா. சரி அவங்க ஆசையை ஏன் கெடுப்பானேன் என்று மண்டையை போட்டு குடைஞ்சு எடுத்து பதில் போட்டிருகேன்ங்க பார்த்து நல்லதா நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க நல்லவர்களே வல்லவர்களே. 
பத்து பேருக்கு நான் எங்கே போவேன் எல்லோரும் ஏற்கனவே எல்லோரையும் பதிவில் பதிந்து விட்டார்கள். முடிந்த வரை தேடிப்பார்கிறேன். முடியாவிட்டால் விட்டுவிடுகிறேன்.



1.உங்களுடைய 100 பிறந்தநாளை எப்படி கொண்டாட விரும்புகிறீர்கள்?
 நான் பேராசைப் படுவதில்லை. காரோட கொண்டிஷனை வைத்து தானே எவ்வளவு தூரம் பிரயாணம் செய்யலாம் என்று தீர்மானிப்போம். என்னோட என்ஜின் அவ்வளவு தூரம் பயணம் பண்ணாது. இருந்தாலும் முதுமை பொல்லாதது எனவே அது எனக்கு வேண்டாம்.


2.என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள்?
எப்படி எல்லாம் நேரத்தை மிச்சப் படுத்துவது, செய்யும் வேலைகள் அனைத்தும் கச்சிதமாகவும், நேர்த்தியாகவும், சீக்கிரமாகவும், இலகுவாகவும்   எப்படி செய்வது என்று பரீட்சித்து கற்றுகொள்ள விரும்புவேன். கவிதையை இன்னும் இன்னும் நன்றாக அழகாக எப்படி எழதுவது. என் ப்ளாக் ஐ மேலும் எப்படி அழகாக்குவது போன்றவையே.

3.கடைசியாக சிரித்தது எப்போது? எதற்காக?
ஜூன் 13 அன்று கட்டுரை போட்டிக்காக ரூபன் அவர்கள் அனுப்பிய பதக்கம் சான்றிதழ் அனைத்தும் அன்று தான் கிடைத்தன. அன்று தான் என் மகனின் பிறந்த நாளும். என் மகள் மார் இருவரும் போட்டோ பிரேம் வாங்கி வந்து அதில் சான்றிதழை இட்டு பதக்கம் வைத்து லிவிங் ரூமில் வைத்து விட்டு என்னை அழைத்து வந்து காட்டினார்கள். எனக்கு ஒரே சந்தோஷம் தான் அத்துடன் flower basket ம் தந்தார்கள். நான் அண்ணாவுக்கு என்ன வாங்கினீர்கள் என்றேன். flower basket ஐ திருப்பி காட்டிவிட்டு களுக் என்று சிரித்தார்கள். பார்த்தால் அதில் இருந்த கார்ட் ல் ஒரு பக்கம் என்னை விஷ் பண்ணியும் மறு பக்கத்தில் என் மகனை விஷ் பண்ணியும் இருந்தார்கள். நான் அடி பாவிங்களா சோ சீட் இப்படியா செய்வீர்கள் என்று அடிக்கப் போனேன்.அப்பொழுது அனைவரும் சிரித்தோம். அந்த சண்டே பாதெர்ஸ் டே அப்போ நான் சொன்னேன் விட்டா நீங்கள் இதிலேயே பாதெர்ஸ் டே க்கும் விஷ் பண்ணிக் குடுப்பீங்க போல என்று கூற மீண்டும்  அனைவரும்  சிரித்தோம்.
 

4. 24மணி  நேரம் பவர்கட் ஆனால் நீங்கள் செய்வது என்ன?
குளிர் காலத்தில் அப்படி வீட்டில் இருக்க முடியாது. வெப்ப காலத்திலும் இருக்க முடியாது தேநீர் கூட அருந்த முடியாது.எனவே அனைவரும் ஷோபிங் மோலுக்கு போவோம் இல்லையேல் தெரிந்தவர்கள் வீட்டில் அடைக்கலம் புக வேண்டும். சமாளிக்க முடிந்தால் வீட்டிலேயே இருந்து  நல்ல சந்தர்ப்பம் என்று கவிதை எழுதுவேன். அல்லது  ஏதாவது வாசிப்பேன் மிகுதி நேரத்தில் தூங்குவேன்.

5. உங்கள் குழந்தைகளின் திருமண நாளில் அவர்களிடம் சொல்ல விரும்புவது என்ன?
டிவோஸ் என்ற நிலைமை வராது கடைசி வரை ஒற்றுமையாக,சந்தோஷமாக ஈகோ இல்லாமல் ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.பிள்ளைகளுக்கு அநாதரவற்ற நிலையினை ஒரு போதும் தேடக் கூடாது  என்று சொல்வேன்.

 6.உலகத்தில் உள்ள பிரச்சனையில் உங்களால் தீர்க்கமுடியும் என்றால் எந்த பிரச்சனையை தீர்க்க விரும்புகிறீர்கள்?
 நோய் அற்ற வாழ்வு அவசியம் இல்லையா அதனால் பொலூசன் இல்லாமல் வாழ வழியும்,  கெமிக்கல் இல்லாத உணவு உற்பத்தியும் செய்ய வேண்டும் என்று விரும்புவேன். பொல்லாத நோய்களையும் அங்கவீனமும் இது குறைக்கும், என்று நம்புகிறேன். நல்ல ஆரோக்கியமான  சமுதாயம் இதனால் உருவாக வேண்டும் என்பது என் எண்ணம்.

7.நீங்கள் யாரிடம் அட்வைஸ் கேட்பீர்கள்?
என் கணவரிடமும் பிள்ளைகளிடமும் மட்டும் தான் இல்லையேல் கடவுளின் கையில் கொடுத்துவிட்டு அவரை நச்சரிப்பேன் அவரும் வேறு வழியில்லாமல் அருள் புரிவார்.  

8.உங்களை பற்றிய தவறான தகவல் பரப்பினால் என்ன செய்வீர்கள்? 
நான் ஒரு பாவமும் அறியேனே ஏன் இப்படி நடக்கிறது என்று கடவுளிடம் முறையிடுவேன் மூக்கையும் சிந்துவேன். அவர் பார்த்துக்கொள்வார்.

9.உங்கள் நண்பரின் மனைவி இறந்தால் அவரிடம் என்ன சொல்வீர்கள்?
மறு பிறப்பில் அவர் தான் மீண்டும் தங்களுக்கு மனைவியாக வருவார் எனவே கலங்கவேண்டாம் என்று சொல்வேன்.

10.உங்கள் வீட்டில் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
முதலில் வீடு சுத்தமாகவும் அழகாகவும் வைத்திருக்க ரொம்ப பிடிக்கும் அதனால் உடனடியாக களத்தில் இறங்கிவிடுவேன் சுத்தம் செய்ய. அதன் பின்பு வலைத்தளம் வந்து வரிசையாக பதிவுகளை படித்து கருத்துக்களை இடுவேன். கவிதை எழுத முயற்சி செய்வேன்.


தயவு செய்து என்னை மாட்டிவிடும் என்னை மன்னித்து விடுங்கள். உங்களுக்கு பெரிய மனது  எனவே மன்னித்து விடுவீர்கள் என நம்புபகிறேன். எதோ என்னால முடிந்தது. தயவு செய்து 10 வினாக்களுக்கும் விடை பகர்ந்து விடுங்கள். ஆவலோடு எதிர்பார்க்கிறேன் நன்றி! நன்றி ! நன்றி !


அன்பின் சீராளன்  என்னுயிரே
http://soumiyathesam.blogspot.com/2014/06/blog-post.html

அன்பு சகோதரர்
 ஊமைக்கனவுகள்
http://oomaikkanavugal.blogspot.ca/  

அன்பு சகோதரர்
சிவகுமாரன் கவிதைகள்
http://sivakumarankavithaikal.blogspot.ca/2014/05/40.html

அன்பு சகோதரர் ஜீவலிங்கம் யாப்பறிந்து பாப்புனைய வாருங்கள்
http://paapunaya.blogspot.ca/2014/06/blog-post_20.html 

அன்புத் தோழி ராஜராஜேஸ்வரி
மணிராஜ் -
http://jaghamani.blogspot.com/2014/06/blog-post_16.html
Laughing graphics

Sunday, June 15, 2014

தந்தையை மிஞ்சிய தெய்வமும் இல்லை

      

Happy Father's day

தாயிற் சிறந்த கோவிலுமில்லை
தந்தையை மிஞ்சிய தெய்வமும் இல்லை-நாம்
கெஞ்சிட கெஞ்சிட செய்யும் தொல்லை 
கொஞ்சி கொஞ்சி மகிழ்வார் தந்தை

பத்துமாதம் சுமப்பாள் அன்னை 
பகல் இரவாய் உழைப்பார் தந்தை
மனதுபூரா இழைப்பார் எம்மை
களைப்பை மறந்து சிரிப்பார் தம்மில்

ஊன் உறக்கம் இன்றி காப்பாள்  அன்னை
உடலை உயிரை வருத்தி பார்ப்பார் தந்தை 
கேட்பது எல்லாம் கிடைக்கும்- எம்
கேள்விக்கு பதிலும் கிடைக்கும்

ஊட்டி ஊட்டி வளர்க்கும் தந்தை
உள்ளத்தில் கனவு வளரும்
பாட்டி சொல்லும் நீதி கதைகளை 
மீட்டிப் பார்த்து சொல்வார்

பண்புடனே தான் நடப்பார்
உண்மைகளை நமக் குரைப்பார்
விசனம் என்றால் போதும் 
வேடிக்கை காட்டிட விளைவார்

கேள்விக்குறி போல் தோன்றி
உப்பு மூட்டை சுமப்பார்
ஒப்புக்கே அவர் சிரிப்பார் -எம்
தப்பை மறைக்க தவிப்பார்

ஆனை போலே மாறி எம்மை 
அள்ளிச் செல்வார் பாரீர்
கோளை போல எம்மை கண்டு
கெஞ்சி கெஞ்சி பார்ப்பார்

மேம்பட எம்மை வளர்ப்பார்
நல்வழியினில் நடத்திச் செல்வார்
தேம்பி அழுதால் நாமும்- அவர்
திகைத்தே நிற்பார் காணும்

தவறுகள் செய்தால் போதும்-அவர்
தடி கொண்டு அடிப்பார் மேலும்-தலை
தலையென அடிப்பார் தானும் -தாயிற்
திரும்பும் கோபம் தணிந்திடும் உடனே பாரும் 

கண்மணி போல் எமை காக்கும் தந்தை
கலங்கிட நேரா தென்றும் 
காத்திடவேண்டும் இறைவா 
நோய்கள் தாக்காதென்றும்  
நோக்கிடவேண்டும் வா வா 

நிம்மதி என்றும் நிலைத்திடவும்
மகிழ்சிக் கடலில் நீந்திடவும்
நீடுழி வாழ்ந்திடவும்
வாழ்த்திட வேண்டும் வாவா
போற்றிடுவோம் உமை பாபா


Wednesday, June 11, 2014

விதையில் விருட்சம் வாழ்வுக்கு வெளிச்சம்


   
  
 


நட்டால் தானே
நெடுமரம் வளரும்
மழையும் வளமும்
தினப்படி நல்கும்




பட்டு போனால்
பசுமைக ளின்றி
புளுங்கிடுவீரே
புரிந்திடுவீரோ

புதைத்திடும்
வித்துக்கள்தான்
முளைத்திடும்
ஒத்துக்கொள்

விதையில் விருட்சம்
வாழ்வுக்கு வெளிச்சம்
விளைந்து பொலிந்தால்
தவிர்க்கும் அச்சம்

வீழா தென்றும்
விழுதுகள் தாங்கும்
விரும்பி வேர்கள்
தாகம் தீர்க்கும்


வசப்படு வோர்க்கு
வதிவிடம் நல்கும்
பசித்திட புசியென
விருந்தே வைக்கும்

நிழலும் நல்கி
நிம்மதி காக்கும்
களையினை போக்கும்
கவிதையில் பார்க்கும்



உறங்கிட மெல்ல
சாமரை வீசும்
உயரிய குணங்கள்
உள்ளவர் தன்வசம் 

இளகிய மனது
கொண்டவை மரங்கள்
பழகிட வேண்டும்
பார்த்து நாங்கள்