2 .....தீபாவளியை முன்னிட்டு ரூபன் & யாழ்பவணன் அவர்கள் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப்போட்டி 2014
ஒய்யாரமா நிக்கிறியே கண்ணம்மா
ஒருக்களித்து பார்க்கிறியே செல்லமா-
ஐயா மனசை கலைக்கிறியே மெல்லமா
என்னோருயிரை பறிக்கிறியே நியாயம்...மா
தண்ணிக்குடம் தலையிலதான் கண்ணம்மா
என்தாகம் தீர்க்க வேணுமடி செல்லம்மா
வளைந்து நெளிந்துநிக்கிறியே தேனம்மா- நானுன்
வலையினிலே துடிக்கின்ற மீனம்மா ஒய்யாரமா
அயிலை மீனைபோல என்னை அலைக்கிறியே- தோகை
மயிலை போல ஓயிலாவே நடக்கிறியே
கூடை நிறைய பாசம் வைத்து பார்த்திருக்கே - உன்
கூடபேச ஆசை கொண்டு காத்திருக்கேன் ஒய்யாரமா
வேல்விழியால் தாக்கியெனை விளுத்திறியே கீழே- என்
மேலடுப்பு வச்சுதானே காய்ச்சிறியே கூழே
புன்னகையை மறைத்துவைத்து தாக்கிறியே என்னை
கன்னமிட்டு என்கனவை கலைக்கிறியே பெண்ணே ஒய்யாரமா
மின்னுகின்ற மூக்குத்தி மேலழகு பெண்ணே
மன்னுகின்ற பார்வையிலே சீரழகு கண்ணே -நீ
பொட்டு வைத்தால் வட்டநிலா வாடு....ம் - உன்
கட்டழகை கண்டாலும் பூவிழிகள்நோகும் ஒய்யாரமா
உன்நடையழகை கண்டாலே அன்னமது நாணும்
உன்இடையழகை கண்டாலும் நடையுடனும் தளரும்
என்னவளே உன்னுயிரை தீக்கிறியே மெல்ல - என்
கன்னத்திலே போட்டுக்கிறேன் கட்டிறியா என்னை ஒய்யாரமா
இந்தக் கவிதை பார்க்க இங்கே கீழே சொடுக்குங்கள்