நல்லூர் நாயகனே
முத்தமிழ் வித்தகனே
வித்தைகள் உனக்கென்ன புதிதா
விதைத்திடும் விதைகளெல்லாம்
மெத்திடுமா நின் அருள்
இன்றி முத்திடுமா இவை புத்தியில்
உறையாமல் செத்திடுமா
விதி என்று நதி வழி செல்லாது
கதி என்று வந்தவரை
காத்திடும் கருணை தெய்வம்
கந்தா நீ அல்லவா
சரவணபவ என வாழ்வினில்
விடிவு தர வந்த வடிவேலா
என் உளம் அறிந்து
என் உளம் அறிந்து
நினைந்து உனை பாடி
நான் மகிழ கவிதையும் தந்த கதிர்வேலா
இதுவும் கந்தன் கருணை தானா
வேண்டியதை தருபவனே
உன்னை தான் பாடுகிறேன்
உன்தனையே வேண்டுகிறேன்
நினைவு தெரிந்த நாள் முதலாய்
நின்தனையே வணங்கி நின்றேன்
நடை பழகும் போதினிலும்
உன் தாள் தான் பணிந்து நின்றேன்
பிஞ்சுக் கரங்களினால் கை
கூப்பி நின்றேன்
இன்று வரை உன் நினைவே
இறக்கும் வரை வேண்டுகிறேன்
கடல் தாண்டி வந்தாலும் கருணை
மழை பொழிபவனே உன்னை
கொண்டாடுவோரை திண்டாட
வைப்பவனே சிந்தனை திறம் வேண்டும்
நெஞ்சினில் உரம் வேண்டும்
நற் பண்புகள் வளர்ந்திட வரம் வேண்டும்
நிந்திப்பவர் தனை
நித்திரை கொள்ளவிடு அவர்
புத்தியில் உறைந்துவிடு
குறைகள் அற்ற வாழ்வு சாத்தியமா
குற்றம் அற்றவர் யாரும் உண்டா
குறைகள் பேசுவதில் அர்த்தம் உண்டா
அனைத்திலும் உண்டு
நன்மையையும் தீமையும் அறியாரா
நெருப்பும் நன்மை செய்திடுதே
கருக்கிடும் போது பயம் வருதே
தென்றல் வீசினால் சுகம் தருதே
புயலாய் மாறினால் பயங்கரமே
ஓங்கார நாதனே உதித்திடும்
குறைகள் அற்ற வாழ்வு சாத்தியமா
குற்றம் அற்றவர் யாரும் உண்டா
குறைகள் பேசுவதில் அர்த்தம் உண்டா
அனைத்திலும் உண்டு
நன்மையையும் தீமையும் அறியாரா
நெருப்பும் நன்மை செய்திடுதே
கருக்கிடும் போது பயம் வருதே
தென்றல் வீசினால் சுகம் தருதே
புயலாய் மாறினால் பயங்கரமே
ஓங்கார நாதனே உதித்திடும்
என் நெஞ்சினில் உன் கோலமே
சரணம் சரணம் சண்முகா சரணம்
நீ வரணும் வரணும் முருகா என்றதும்
தரணும் தரணும் நின்னருளே
நித்திலம் கொழித்திடவே
வேண்டுதலின் தூய்மையை கவிமூலம் அறிவான்
ReplyDeleteநல்லூர் நாயகன் நிச்சயம் அருள்வான்
மனம் கவர்ந்த அருமையான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி சார்,
ReplyDeleteஉங்கள் வருகைக்கும், கருத்துக்கும், கொடுக்கும் ஊக்கத்துக்கும் ரொம்ப ரொம்ப நன்றி.
கவிகொண்டு வாழ்த்துகிறாள் கார்த்திகேயா
ReplyDeleteகண்கொண்டு காத்தருள தேடிவாராய்
புவியாண்டு அருள்பவனே இந்த
புவனத்தில் இனியாவை மகிழ்விப்பாயே...!
அருமை அருமை இனியா
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
This comment has been removed by the author.
ReplyDeleteவணக்கம் சீராளன் அவர்களே,
Deleteவருகைக்கும்,வேண்டுதலுக்கும்,வாழ்த்துக்கும் ரொம்ப நன்றி.
எல்லா நலன்ககளும் கிட்ட நல்லூரன் அருள் புரிவான் என்றும் உமக்கு.
நீங்கள் சொன்னபடி சொல் சரிபார்கையை நீக்கப் பார்கிறேன்.
வணக்கம் சகோதரி.
ReplyDelete\நல்லூர் நாயகனின் திருவருள் அனைவருக்கும் கிடைத்து எல்லோரும் எல்லாமும் பெற்று இன்புற்று வாழட்டும். தங்களின் வேண்டுதலுக்கு முத்தமிழ் நாயகனின் நிச்சயம் செவி சாய்த்து அருள்வார்.
சகோதரா...!
ReplyDeleteநல்லூர் நாயகன் நலம் பல நல்குவான், நானிலத்தில் நற்புகழ் கிட்டிட நயந்திடுவான் நின்தனுக்கு என்றும்.
வரவும், கருத்தும், வாழ்த்தும் மனநிறைவைத் தருகிறது. மிக்க மகிழ்ச்சி.
ரொம்ப நன்றி......! வாழ்க வளமுடன்....!