Thursday, September 5, 2013

வேழ முகத்தோனே


 
வேழ முகத்தோனே முதல் 
வேண்டுவதுனைத் தானே
உனை மஞ்சளில் உருண்டை 
செய்து அதில் உள்ளபடி அருகம்புல் 
ஒன்று நாட்டி முன் வைத்து
எடுத்த கருமம் எல்லாம் 
இனிதே நடந்தேற இறைஞ்சி 
நிற்போம். முன்னவனின் பொற் 
பதங்கள் பணிந்து நிற்போம்.

பேழை வயிற்றோனே பாழும் 
உலகில் வாழும் மனிதர்கள் 
நாளும் நலம்பெறவே
கோளும் துணை செயவே குற்றம் 
குறைகள் எல்லம் பொறுத்திட
முன் செய்த தீவினையும் முற்றும் 
விடைபெறவே தோப்புக்கரணம் 
 இட்டு வணங்கி நிற்போம்.


உனை தொழுதிடும் பொழுதும் 
அழுதிடும் கண்கள் நினைந்திடும் 
பொழுதும் உருகிடும் நெஞ்சம் 
பதிகங்கள் பாடி பரவிடும் போதும் 
பெருகிடும் பக்தி வெள்ளம் 
விழுந்திடும் பொழுதும் எழுந்திடும் 
பொழுதும் ஒலித்திடும் 
நாவில் உன் நாமம்

பவள நிறத்தோனே பார்வதி பாலகா  
வையத்தில் அனைவரும் பாவிகளா 
நீ பேசிடு போகும் பாவங்களே 
கல்லாயிருந்து நீ கண்டது என்ன
கண்களை திறந்து கருணை புரியும் .
மோதகபிரியனே பாரினில் இனிமேல்
மோதல்கள் வேண்டாம். மாறுதல் 
வேண்டும் நீ மாநிலம் வாவா.
தேறுதல் தர வல்லவனே 
தேனும் பாலும் தந்திடுவோம் 
தேன்தமிழ் சிந்திட வாவா 


கானகத்துக் குயில்கள் எல்லாம் 
கானம் இசைக்கும்.ஈழத்துக் 
குயில்கள் இசைத்தால் கூடாதா 
இரைதேடி பறப்பதும் பாவமா இது 
முனோர்கள் இட்டு சென்ற சாபமா 
இல்லை ராமரை பிரிந்த சீதை 
அழுத கண்ணீரா சிந்திய முத்துக்கள் 
மண்ணில் சிதறியதாலா சீர் கெட்டதங்கே.
நம்பிக்கை கொண்டு தும்பிக்கையானை 
வேண்டுகிறோம் எமை வாழவிடு எங்கும் 
அமைதியும்  அன்பும் நிலவிடு 

4 comments:

  1. சதுர்த்தி சிறப்புப் பதிவு வெகு சிறப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றிகள் பல.
    எல்லா நன்மைகளும் என்றும் தொடரும் உமை.வேழமுகத்தோனும் நல்வாழ்வை நல்குவான் என்றும்.

    ReplyDelete
  3. வணக்கம் சகோதரி
    தங்கள் வேண்டுதல் கேட்டு வேழ முகத்தான் வேகமாக ஓடி வந்து வேண்டியதை வழங்கி அருளிடுவான். அனைவருக்குமான அருமையான வேண்டுதல். பகிர்வுக்கு நன்றி. தொடருங்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா...!
      உங்கள் வருகையில் அளவு கடந்த ஆனந்தம் அடைந்தேன்.
      கருத்தும் வாழ்த்தும் உண்மையில் பூரிப்படைய வைக்கிறது.
      நன்றி...!
      வேழ முகத்தான் வாழ்த்திட வருவான்
      வினைகளை அறுப்பான் திருமணத்தில்
      வேண்டு வதை அளிப்பான் என்றும்
      நலம் பல பெறவருள் நல்கிடுவான்..!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.