Saturday, January 11, 2014

பொங்கல் பொங்கலிட


http://upload.wikimedia.org/wikipedia/commons/1/18/Sunrise_animation.gif
   
படங்கள் மீது சுட்டியை கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்


பொங்கல் பொங்கலிட பொங்கிடும் 
       மங்களம் பொங்கிடும் தங்கிடும்
வழங்கும்  இன்பமும் எங்கணும்  
       தினகரன் விண்ணில் தோன்றிட
திங்கள் நெஞ்சில் தவழ்ந்திடும்
      தொட்டவை எல்லாம் துலங்கிடும்
பொங்குதமிழ் எங்கும் புலர்ந்திடும்
       பார்புகழ ஈழபோர் முடியும் நிலைவரும்                                               

   தையிலே பொங்கல் இட
        உழவர் உள்ளம் பொங்கிடும்
கள்ளமற்ற மழலையாக மலர்ந்திடும்
        உண்மையும் உயர்வும் கொண்டிடும் 
மடமை எல்லாம் நீங்கிடும்
       அடிமைத் தன்மை அடங்கிடும்
எங்கும் நிதர்சனமாய் உறங்கிடும்
       வாழ்வும்  வளமும் பெருகிடும்
sunrise animated photo: 100x120 thsunset_beach.gif
     
கதிரவன் கதிர்களால் உயிர்கள் வாழும்
       கடுகளவு கூடினால் பயிர்கள் வாடும்
அருளும் பொருளும் நிறைந்திடும்
       நேர்வழியில் நிதமும் சென்றிடும்
ஒற்றுமை எங்கும் ஓங்கிடும்
       அன்பு வெள்ளம் அலையலையாய்
அனைவரையும் ஆட்கொள்ளும்
       உன்னதமான உலகொன் றுருவாகும்

பஞ்ச மஞ்சி விலகும்
         படிய ளக்க மிஞ்சும்
வஞ்சம் முழுதும் நீங்கும்
        துன்பம் வந்து கெஞ்சும்
துயிலும் போது கூட 
        துயர்தூர விலகி போகும்
பகையை வெல்ல முடியும்
        பழவினை களையே கொல்லும்
                                                                      
தேடக் கிடைக்காத திருவருளும் நமை
       வந்து சூழும் நாளும்கோளும் 
தேடிவந்தே நன்மை செய்யக் கூடும்
       பேரொளியாய் விளங்கும் 
அதுபூ வுலகாய் மாறும்
        இல்லை இல்லை என்ற தொரு
நிலை மாறி போகும் காதல்
         அன்புகருணை பிரவாக மாய்ஓடும் 
       
pongal photo: Happy Pongal HappyPongal.gif

நன்றி தனை நவின்றிடவே 
       ஞாயிறுக்கு பொங்கலிடும்
ஆதவனை அலங்கரிக்க 
       கோலமிடும் கும்பிடும்
இஞ்சியிலை மஞ்சள்ளிலை மாலையிட்டு
       பானையில் பச்சரிசி சக்கரையும் 
கற்கண்டும் பாலோடு நெய்யும்மிட்டு                                                        
       தித்திக்கும் பொங்கலிடும் திருநாளில்






           

25 comments:

  1. தேடக் கிடைக்காத திருவருளும் நமை
    வந்து சூழும் நாளும்கோளும்
    தேடிவந்தே நன்மை செய்யக் கூடும்
    பேரொளியாய் விளங்கும்
    அருமையான கவிதை..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் !
      தோழியின் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி....!
      உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!

      Delete
  2. இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்.
      மிக்க நன்றி....!
      உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....!

      Delete
  3. பொங்கல் வாழ்த்துக்கள் தோழி !

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ...!
      பொங்கல் வாழ்த்துக்கள்.....!

      Delete
  4. அன்பு சகோதரி வணக்கம்
    பொங்கலுக்காக பொங்கி வந்த வந்த கவிதை ரசிக்கும்படி அமைந்துள்ளது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இறை நம்பிக்கையும் என்னை வெகுவாக மனம் கவர்கிறது சகோதரி. தொடர்வோம்..
    ----------
    தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க வேண்டி மகிழ்வோம். நன்றி சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. அன்புச் சகோதரரின் வருகை கண்டு ஆனந்தமாக இருக்கிறது.துவளாமல் ஊக்கம் தரும் அழகான குணமும் கண்டு மகிழ்ச்சியே மிக்க நன்றி .....! சகோதரா !

      இனிய பொங்கல் நாளில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் வாழ்வும் வளமும் பொங்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .....!

      Delete
  5. உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
    Vetha.Elangathilakam

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.....!
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ......!

      Delete
  6. தங்களுக்கும் தங்களது குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் தோழி.

    ReplyDelete
    Replies
    1. வரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ...!
      தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....!

      Delete
  7. பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
    பொங்கலோ.. பொங்கல்!..
    அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே!
      புத்துணர்வு தரும் புதுப் பொங்கல்
      பெற்றுவாழும் வருடம் முழுதும் சிறந்து

      தங்களுக்கும் இல்லத்தாருக்கும் என்றும் இன்பம் பொங்க வாழ என் அன்பு கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்.....!

      Delete
  8. மனதை மயக்கும் அருமையான படைப்பு ! வாழ்த்துக்கள் தோழி
    உங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் என் இனிய
    பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி ...!
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....!
      தங்களுக்கும் இல்லத்தாரும் இன்பம் பொங்க வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....!

      Delete
  9. பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
    எங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
    இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் தோழி!

    பொங்கிடும் கவிதைகள்
    புரியுது விந்தைகள்... ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....! தோழி

      புன்னகையே பொன்னகையாய் என்றும்
      சூட மகிழ்ச்சி பொங்க வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் இல்லாத்தாருக்கும் உரித்தாகட்டும்.....!

      Delete
  10. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.மேடம்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....!

      தாமதமான பொங்கல் வாழ்த்துக்கள்.........! தங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்....!

      Delete
  11. அற்புதமான பொங்கல் சிறப்புக் கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....!

      தாமதமான இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்....!

      Delete
  12. பார் புகழ முடிவுக்கு வரவேண்டும் போர் என்பதுதான் எனது ஆசையும்..

    காத்திருப்போம்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....!

      வாழ்க வளமுடன்....!

      Delete
  13. வணக்கம்
    அம்மா.
    தித்திக்கும் சர்க்கரைப் பொங்களை விட என்னுடைய மனதை தித்திக்க வைத்தது பொங்கல் கவிதை.. சிறப்பான கருத்தாடல் மிக்க வரிகள்... இந்த வருடத்தில் ஆவது எமது இலச்சியப்பாதை வெற்றியடைய இறைவனை பிராத்திப்போம்.....அம்மா.
    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழத்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.