படங்கள் மீது சுட்டியை கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்
பொங்கல் பொங்கலிட பொங்கிடும்
மங்களம் பொங்கிடும் தங்கிடும்
வழங்கும் இன்பமும் எங்கணும்
தினகரன் விண்ணில் தோன்றிட
திங்கள் நெஞ்சில் தவழ்ந்திடும்
தொட்டவை எல்லாம் துலங்கிடும்
பொங்குதமிழ் எங்கும் புலர்ந்திடும்
பார்புகழ ஈழபோர் முடியும் நிலைவரும்
தையிலே பொங்கல் இட
உழவர் உள்ளம் பொங்கிடும்
கள்ளமற்ற மழலையாக மலர்ந்திடும்
உண்மையும் உயர்வும் கொண்டிடும்
மடமை எல்லாம் நீங்கிடும்
அடிமைத் தன்மை அடங்கிடும்
எங்கும் நிதர்சனமாய் உறங்கிடும்
வாழ்வும் வளமும் பெருகிடும்
கதிரவன் கதிர்களால் உயிர்கள் வாழும்
கடுகளவு கூடினால் பயிர்கள் வாடும்
அருளும் பொருளும் நிறைந்திடும்
நேர்வழியில் நிதமும் சென்றிடும்
ஒற்றுமை எங்கும் ஓங்கிடும்
அன்பு வெள்ளம் அலையலையாய்
அனைவரையும் ஆட்கொள்ளும்
உன்னதமான உலகொன் றுருவாகும்
பஞ்ச மஞ்சி விலகும்
படிய ளக்க மிஞ்சும்
வஞ்சம் முழுதும் நீங்கும்
துன்பம் வந்து கெஞ்சும்
துயிலும் போது கூட
துயர்தூர விலகி போகும்
பகையை வெல்ல முடியும்
பழவினை களையே கொல்லும்
தேடக் கிடைக்காத திருவருளும் நமை
வந்து சூழும் நாளும்கோளும்
தேடிவந்தே நன்மை செய்யக் கூடும்
பேரொளியாய் விளங்கும்
அதுபூ வுலகாய் மாறும்
அதுபூ வுலகாய் மாறும்
இல்லை இல்லை என்ற தொரு
நிலை மாறி போகும் காதல்
தேடக் கிடைக்காத திருவருளும் நமை
ReplyDeleteவந்து சூழும் நாளும்கோளும்
தேடிவந்தே நன்மை செய்யக் கூடும்
பேரொளியாய் விளங்கும்
அருமையான கவிதை..பாராட்டுக்கள்..!
வணக்கம் !
Deleteதோழியின் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி....!
உங்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.....!
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாருங்கள் சகோதரரே வருகையும் வாழ்த்தும் கண்டு மகிழ்ந்தேன்.
Deleteமிக்க நன்றி....!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....!
பொங்கல் வாழ்த்துக்கள் தோழி !
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி ...!
Deleteபொங்கல் வாழ்த்துக்கள்.....!
அன்பு சகோதரி வணக்கம்
ReplyDeleteபொங்கலுக்காக பொங்கி வந்த வந்த கவிதை ரசிக்கும்படி அமைந்துள்ளது கண்டு மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இறை நம்பிக்கையும் என்னை வெகுவாக மனம் கவர்கிறது சகோதரி. தொடர்வோம்..
----------
தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது இனிய தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள். அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்க வேண்டி மகிழ்வோம். நன்றி சகோதரி.
அன்புச் சகோதரரின் வருகை கண்டு ஆனந்தமாக இருக்கிறது.துவளாமல் ஊக்கம் தரும் அழகான குணமும் கண்டு மகிழ்ச்சியே மிக்க நன்றி .....! சகோதரா !
Deleteஇனிய பொங்கல் நாளில் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என்றும் வாழ்வும் வளமும் பொங்கிட என் மனமார்ந்த வாழ்த்துக்கள் .....!
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
ReplyDeleteVetha.Elangathilakam
வாருங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் நன்றி.....!
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ......!
தங்களுக்கும் தங்களது குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் தோழி.
ReplyDeleteவரவுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ...!
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்....!
பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட
ReplyDeleteபொங்கலோ.. பொங்கல்!..
அன்பின் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!..
வாருங்கள் சகோதரரே!
Deleteபுத்துணர்வு தரும் புதுப் பொங்கல்
பெற்றுவாழும் வருடம் முழுதும் சிறந்து
தங்களுக்கும் இல்லத்தாருக்கும் என்றும் இன்பம் பொங்க வாழ என் அன்பு கலந்த பொங்கல் வாழ்த்துக்கள்.....!
மனதை மயக்கும் அருமையான படைப்பு ! வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteஉங்களுக்கும் உங்கள் உறவினர்கள் அனைவருக்கும் என் இனிய
பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள் !
வாருங்கள் தோழி ...!
Deleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....!
தங்களுக்கும் இல்லத்தாரும் இன்பம் பொங்க வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்....!
பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
ReplyDeleteஎங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள் தோழி!
பொங்கிடும் கவிதைகள்
புரியுது விந்தைகள்... ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!
வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....! தோழி
Deleteபுன்னகையே பொன்னகையாய் என்றும்
சூட மகிழ்ச்சி பொங்க வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் இல்லாத்தாருக்கும் உரித்தாகட்டும்.....!
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.மேடம்.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....!
Deleteதாமதமான பொங்கல் வாழ்த்துக்கள்.........! தங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்....!
அற்புதமான பொங்கல் சிறப்புக் கவிதை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....!
Deleteதாமதமான இனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்கள் அனைவருக்கும் உரித்தாகட்டும்....!
பார் புகழ முடிவுக்கு வரவேண்டும் போர் என்பதுதான் எனது ஆசையும்..
ReplyDeleteகாத்திருப்போம்..
வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்....!
Deleteவாழ்க வளமுடன்....!
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
தித்திக்கும் சர்க்கரைப் பொங்களை விட என்னுடைய மனதை தித்திக்க வைத்தது பொங்கல் கவிதை.. சிறப்பான கருத்தாடல் மிக்க வரிகள்... இந்த வருடத்தில் ஆவது எமது இலச்சியப்பாதை வெற்றியடைய இறைவனை பிராத்திப்போம்.....அம்மா.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழத்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-