Thursday, December 5, 2013

தென்றலே தென்றலே



தென்றலே தென்றலே 
தணியும் நீ ஏன் தணல் ஆனாய் 
தகர்த்திடும் எண்ணம்
ஏன் கொண்டாய் 
உடல் தளர்ந்தாலும்
இதம் தருவாய் 
மனம் வாடுகையில்
உன் வசம் கொள்வாய் 
பூஞ்சோலை வலம் வருவாய் 
மலர்களையே நீ 
நுகர்ந்திடுவாய் வண்டினம்
வந்தால் நகர்ந்திடுவாய்

இன்று பாடும் பண்ணிசை
கேட்கவில்லை 
வீசும் வாடையில்
தண்மை இல்லை
என் கனவுகளை நீ 
காணவில்லை
என் நினைவில்
பூக்கள் பூக்கிறதே 
அதையும் இன்னும்
நீ அறியவில்லை 
ஏனென்று எனக்கு 
புரியவில்லை உனக்கும்
கோபம் சோகம் வருகிறதோ 

மனிதருள்ளும் 
வலிகள் உண்டாம்
புதுமை படைக்கும் 
வலிமை யுண்டாம்
சில நாளில் 
மடிவதுண்டாம் 
விடிவதற்கோ அது 
தெரியவில்லை
பூவுக்குள்ளும் 
ஒரு பூகம்பமாம் 

பூமியிலும் ஒரு 
எரிமலையாம்
கடல் நீரினிலும் ஒரு 
சுனாமி யுண்டாம் 
வானத்திலும் வரும் 
இடி மின்னலாம்
தென்றலும் நாள் ஒரு புயல் ஆகும்
தென்னவனும் ஒரு நாளில் 
தெருவுக்கு வரலாம் 

தென்றலே தென்றலே 
சோகமதை நீ அறிவாயோ
சொப்பனத்தில் ஏனும் கண்டாயோ
தேனினும் இனிய வார்த்தைகள் 
வந்து விழுந்தால் ஆறிடுமே
புனிதமான நட்பிருந்தால்
துயரம் தூர போய் விடுமே
காலமும் கைகொட்டி சிரித்திடுமே.




18 comments:

  1. சிறப்பாகவும் முடித்துள்ளீர்கள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரா உங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்.
      உங்கள் அன்புக்கு நன்றி சகோதரா. தொடர வேண்டுகிறேன்

      வாழ்க வளமுடன்....!

      Delete
  2. இன்று வரைந்த இளந்தென்றற் காட்சியிது
    நன்று! மிளிரமேலும் நாடு!

    அருமையான கருத்து நிறைந்த கவி வரிகள்!.. சிறந்த கற்பனை!

    தொடருங்கள்.. உங்கள் ஆர்வமும் முன்னேற்றமும்
    மேலும் சிறக்க நல் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி
      உங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி...! உங்கள் வரவும் கருத்தும் மிகுந்த தென்பை தருகிறது. நீங்கள் தரும் ஊக்கத்தில் நிச்சயம் மிளிர்வேன் என்கிற நம்பிக்கை வருகிறது தோழி.
      தொடர வேண்டுகிறேன்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  3. வணக்கம்

    புனிதமான நட்பிருந்தால்
    மலைபோல இருக்கும் துயரம் தூர போய் விடுமே
    காலமும் கைகொட்டி சிரித்திடுமே.

    உள்ளிருக்கும் நாதத்தின் ஒலிவடிவம்
    கவிதையை புனைய வரிவடிவம் கொடுத்தது..
    வரிவடிவம் கொடுத்த கவிதை
    என்றென்றும் இனிமையாக
    ஒவ்வொரு வரியிலும் தித்திக்குதே..
    மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.....

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-


    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன் ஓடி வந்து இட்ட கருத்தில் உள்ளம் பூரித்துப் போனேன். இட்ட கருத்தும் மனதை தொட்டது மேன்மேலும் ஊக்கம் தர வேண்டுகிறேன். மிக்க நன்றி....!
      வாழ்க வளமுடன்.....!

      Delete
  4. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    உடல்நலமின்மையால் கருத்துரை வழங்குவதில் தாமதம் பொருத்தருள்க சகோதரி. தென்றலுக்கு ஏன் இவ்வளவு சோகம்! காவியம் படைக்க தட்டச்சு செய்யும் காவியக் கவியின் கைகள் ஏதோ ஒரு காயத்தால் துவலாமா! எதுவும் கடந்து போகும் நாளை நமது வசமாகும் எனும் எண்ணம் கொள்வோம் தென்றலின் தீண்டலை உணர்வோம். மனதை லேசாக அதனுடனே மிதக்க விடுவோம். பாரம் குறையும் பார் புகழ வீறு நடை பெருகும். அழகான கவி சகோதரி. வாழ்க்கையின், இயற்கையின் எதார்த்த்தை இயம்பிய விதம் கண்டு பூரித்து போனேன். ப்கிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் என் இனிய சகோதரரே...!
      இப்பொழுது நலம் தானே.உங்கள் வரவில் மிக மிக மகிழ்ந்தேன் சகோதரா. இணைத்த கருத்து மேலும் ஊக்கம் தருகின்றன.
      சோகமும் சுகமும் கலந்தது தானே வாழ்கை.இல்லையேல் கசந்து விடும் வாழ்கை சீக்கிரத்தில். இதற்கு யாரும் தப்ப முடியுமா என்ன. சோகம் தென்றலுக்கு தான் எனக்கில்லை பொதுவாக தான் எழுதினேன்.
      தென்றல் தீண்டினாலும் நோகும் என் உள்ளம் சுற்றாடலில் நடப்பவை, காண்பவை, கேட்பவை, பட்டவை தானே கவிதை வடிக்க உதவுகிறது. அவை எல்லாவற்றிற்கும் ஒரு நன்றி ...!
      உங்களுக்கும் நன்றி....!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  5. தலைப்பு தொடுத்தது தொடர்ந்தது
    முடித்தது அனைத்தும் இப்படைப்பில்
    சிறப்பாக இருந்தது
    மனம் கவர்ந்த கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ஐயா ...!
      உங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். உங்கள் கருத்துக்கள் என்னை நிச்சயம் வளர்க்கும் நன்றி ....!

      வாழ்க வளமுடன்...!

      Delete
  6. நன்றாக இருந்தது. கடைசி வரியில் கை கொட்டி என்பதற்கு பதில் கைதட்டி என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் கொட்டி சிரிப்பது என்பது எள்ளி நகையாடுவது என்ற பொருள் கொள்ளக் கூடும் .தவறாக நினைக்க வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் சகோதரரே...!
      உங்கள் வரவு கண்டு மகிழ்ந்தேன் .
      மிக மிக நன்றி..! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே இதை நான் வரவேற்கிறேன். ஆனாலும் துயரம் துரத்தப் படுகிறதல்லவா புனிதமான நட்பால் அதனால் காலம் துயரத்தை பார்த்து ஏளனமாக தான் சிரிக்கிறது உன் எண்ணம் ஈடேற வில்லை என்பது போல. எனக்கு மிக்க மகிழ்ச்சியே நல்லது மட்டும் சொல்வது தான் தவறு பிழைகளையும் எடுத்து சொல்லாவிட்டால் எப்படி நாம் தெரிந்து கொள்வது திருந்துவது.
      கருத்து சரி பிழை இரண்டுக்கும் தான் ஆகையால் மனம் வருந்த வேண்டாம் சரி தானே. மிக்க நன்றி ...! தொடர வேண்டுகிறேன்.

      வாழ்க வளமுடன்.....!

      Delete
  7. அருமை .தென்றல் புயலாவது தீமைகள் களைய தோழி.இதமாய் உங்களை தீண்ட வாழ்த்துகின்றேன் தோழி

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி
      வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
      தொடர வேண்டுகிறேன்.
      வாழ்க வளமுடன்....!

      Delete

  8. வணக்கம்!

    தென்றல் கவிபடித்துத் தீட்டுகிறேன் இக்குறளை
    உன்றன் திறத்தை உவந்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே...!

      மிகுந்த ஊக்கம் தர உவந்து குறள் வடிவில்
      தந்த கருத்து உவகை ஊட்டிற்று.

      பெற்றவர் மனம் குளிர போற்றும் உம் தமிழை
      மனங் குளிர ஊற்றும் எமக்கும்

      மிக்க நன்றி ...!

      வாழ்க வளமுடன்....!

      Delete
  9. புனிதமான நட்பிருந்தால்
    துயரம் தூர போய் விடுமே//உண்மைதான்

    ReplyDelete
  10. இனியா , வந்து விட்டேன் .
    தனிமைத் துயர் போக்க வந்த கவிதை
    வெகு இனிமை.

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.