தென்றலே தென்றலே
தணியும் நீ ஏன் தணல் ஆனாய்
தகர்த்திடும் எண்ணம்
ஏன் கொண்டாய்
உடல் தளர்ந்தாலும்
இதம் தருவாய்
மனம் வாடுகையில்
உன் வசம் கொள்வாய்
பூஞ்சோலை வலம் வருவாய்
மலர்களையே நீ
நுகர்ந்திடுவாய் வண்டினம்
வந்தால் நகர்ந்திடுவாய்
இன்று பாடும் பண்ணிசை
கேட்கவில்லை
வீசும் வாடையில்
தண்மை இல்லை
என் கனவுகளை நீ
காணவில்லை
என் நினைவில்
பூக்கள் பூக்கிறதே
அதையும் இன்னும்
நீ அறியவில்லை
ஏனென்று எனக்கு
புரியவில்லை உனக்கும்
கோபம் சோகம் வருகிறதோ
மனிதருள்ளும்
வலிகள் உண்டாம்
புதுமை படைக்கும்
வலிமை யுண்டாம்
சில நாளில்
மடிவதுண்டாம்
விடிவதற்கோ அது
தெரியவில்லை
பூவுக்குள்ளும்
ஒரு பூகம்பமாம்
பூமியிலும் ஒரு
எரிமலையாம்
கடல் நீரினிலும் ஒரு
சுனாமி யுண்டாம்
வானத்திலும் வரும்
இடி மின்னலாம்
தென்றலும் நாள் ஒரு புயல் ஆகும்
தென்னவனும் ஒரு நாளில்
தெருவுக்கு வரலாம்
தென்றலே தென்றலே
சோகமதை நீ அறிவாயோ
சொப்பனத்தில் ஏனும் கண்டாயோ
தேனினும் இனிய வார்த்தைகள்
வந்து விழுந்தால் ஆறிடுமே
புனிதமான நட்பிருந்தால்
துயரம் தூர போய் விடுமே
காலமும் கைகொட்டி சிரித்திடுமே.
சிறப்பாகவும் முடித்துள்ளீர்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வாருங்கள் சகோதரா உங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்.
Deleteஉங்கள் அன்புக்கு நன்றி சகோதரா. தொடர வேண்டுகிறேன்
வாழ்க வளமுடன்....!
இன்று வரைந்த இளந்தென்றற் காட்சியிது
ReplyDeleteநன்று! மிளிரமேலும் நாடு!
அருமையான கருத்து நிறைந்த கவி வரிகள்!.. சிறந்த கற்பனை!
தொடருங்கள்.. உங்கள் ஆர்வமும் முன்னேற்றமும்
மேலும் சிறக்க நல் வாழ்த்துக்கள் தோழி!
வாருங்கள் தோழி
Deleteஉங்கள் அன்புக்கு ரொம்ப நன்றி...! உங்கள் வரவும் கருத்தும் மிகுந்த தென்பை தருகிறது. நீங்கள் தரும் ஊக்கத்தில் நிச்சயம் மிளிர்வேன் என்கிற நம்பிக்கை வருகிறது தோழி.
தொடர வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்....!
வணக்கம்
ReplyDeleteபுனிதமான நட்பிருந்தால்
மலைபோல இருக்கும் துயரம் தூர போய் விடுமே
காலமும் கைகொட்டி சிரித்திடுமே.
உள்ளிருக்கும் நாதத்தின் ஒலிவடிவம்
கவிதையை புனைய வரிவடிவம் கொடுத்தது..
வரிவடிவம் கொடுத்த கவிதை
என்றென்றும் இனிமையாக
ஒவ்வொரு வரியிலும் தித்திக்குதே..
மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்.....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன் ஓடி வந்து இட்ட கருத்தில் உள்ளம் பூரித்துப் போனேன். இட்ட கருத்தும் மனதை தொட்டது மேன்மேலும் ஊக்கம் தர வேண்டுகிறேன். மிக்க நன்றி....!
Deleteவாழ்க வளமுடன்.....!
அன்பு சகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteஉடல்நலமின்மையால் கருத்துரை வழங்குவதில் தாமதம் பொருத்தருள்க சகோதரி. தென்றலுக்கு ஏன் இவ்வளவு சோகம்! காவியம் படைக்க தட்டச்சு செய்யும் காவியக் கவியின் கைகள் ஏதோ ஒரு காயத்தால் துவலாமா! எதுவும் கடந்து போகும் நாளை நமது வசமாகும் எனும் எண்ணம் கொள்வோம் தென்றலின் தீண்டலை உணர்வோம். மனதை லேசாக அதனுடனே மிதக்க விடுவோம். பாரம் குறையும் பார் புகழ வீறு நடை பெருகும். அழகான கவி சகோதரி. வாழ்க்கையின், இயற்கையின் எதார்த்த்தை இயம்பிய விதம் கண்டு பூரித்து போனேன். ப்கிர்வுக்கு நன்றிகள்..
வாருங்கள் என் இனிய சகோதரரே...!
Deleteஇப்பொழுது நலம் தானே.உங்கள் வரவில் மிக மிக மகிழ்ந்தேன் சகோதரா. இணைத்த கருத்து மேலும் ஊக்கம் தருகின்றன.
சோகமும் சுகமும் கலந்தது தானே வாழ்கை.இல்லையேல் கசந்து விடும் வாழ்கை சீக்கிரத்தில். இதற்கு யாரும் தப்ப முடியுமா என்ன. சோகம் தென்றலுக்கு தான் எனக்கில்லை பொதுவாக தான் எழுதினேன்.
தென்றல் தீண்டினாலும் நோகும் என் உள்ளம் சுற்றாடலில் நடப்பவை, காண்பவை, கேட்பவை, பட்டவை தானே கவிதை வடிக்க உதவுகிறது. அவை எல்லாவற்றிற்கும் ஒரு நன்றி ...!
உங்களுக்கும் நன்றி....!
வாழ்க வளமுடன்....!
தலைப்பு தொடுத்தது தொடர்ந்தது
ReplyDeleteமுடித்தது அனைத்தும் இப்படைப்பில்
சிறப்பாக இருந்தது
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..
மிக்க நன்றி ஐயா ...!
Deleteஉங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். உங்கள் கருத்துக்கள் என்னை நிச்சயம் வளர்க்கும் நன்றி ....!
வாழ்க வளமுடன்...!
நன்றாக இருந்தது. கடைசி வரியில் கை கொட்டி என்பதற்கு பதில் கைதட்டி என்று இருந்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் கொட்டி சிரிப்பது என்பது எள்ளி நகையாடுவது என்ற பொருள் கொள்ளக் கூடும் .தவறாக நினைக்க வேண்டாம்
ReplyDeleteவாருங்கள் சகோதரரே...!
Deleteஉங்கள் வரவு கண்டு மகிழ்ந்தேன் .
மிக மிக நன்றி..! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே இதை நான் வரவேற்கிறேன். ஆனாலும் துயரம் துரத்தப் படுகிறதல்லவா புனிதமான நட்பால் அதனால் காலம் துயரத்தை பார்த்து ஏளனமாக தான் சிரிக்கிறது உன் எண்ணம் ஈடேற வில்லை என்பது போல. எனக்கு மிக்க மகிழ்ச்சியே நல்லது மட்டும் சொல்வது தான் தவறு பிழைகளையும் எடுத்து சொல்லாவிட்டால் எப்படி நாம் தெரிந்து கொள்வது திருந்துவது.
கருத்து சரி பிழை இரண்டுக்கும் தான் ஆகையால் மனம் வருந்த வேண்டாம் சரி தானே. மிக்க நன்றி ...! தொடர வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்.....!
அருமை .தென்றல் புயலாவது தீமைகள் களைய தோழி.இதமாய் உங்களை தீண்ட வாழ்த்துகின்றேன் தோழி
ReplyDeleteவாருங்கள் தோழி
Deleteவருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
தொடர வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்....!
ReplyDeleteவணக்கம்!
தென்றல் கவிபடித்துத் தீட்டுகிறேன் இக்குறளை
உன்றன் திறத்தை உவந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வாருங்கள் கவிஞரே...!
Deleteமிகுந்த ஊக்கம் தர உவந்து குறள் வடிவில்
தந்த கருத்து உவகை ஊட்டிற்று.
பெற்றவர் மனம் குளிர போற்றும் உம் தமிழை
மனங் குளிர ஊற்றும் எமக்கும்
மிக்க நன்றி ...!
வாழ்க வளமுடன்....!
புனிதமான நட்பிருந்தால்
ReplyDeleteதுயரம் தூர போய் விடுமே//உண்மைதான்
இனியா , வந்து விட்டேன் .
ReplyDeleteதனிமைத் துயர் போக்க வந்த கவிதை
வெகு இனிமை.