1 ..... தீபாவளியை முன்னிட்டு ரூபன் & யாழ்பவணன் அவர்கள் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய கவிதைப்போட்டி 2014
கண்களில் மின்னுதுகாதல் கருத்தினிலேன் மோதல்-பட்டுவண்ணநிறத்தில சேலை கைவலையிலயேன் மாலை
ஜன்னலோரம் நின்னு கதைபேசுது உன் கண்ணு
திண்ணையோரம் நின்னுநான் திகைக்கிறேனே கண்ணு (ஆ)
அடியெடுத்து வைக்கும்வேளை தடுப்பதெந்தக் காளை
விடியும்முன்னே வந்துதவம் கிடப்பதில்ல வேலை (பெ)
மின்னல்போல பொட்டு வைத்து மயக்கிறியே ஆளை
இடுப்புமேல கூடை வைத்து தடுக்கிறியே தோளை (ஆ)
வனப்புமிக்க வார்த்தைகளை வீசுவதால் தானோ (பெ)
மனம் படபடக்குது ஏங்கிஉடல் வெடவெடக்குது தேங்கி
நுனிமூக்கிலதா கோபம்வந்தா கிடுகிடுக்குது மேனி ( ஆ)
வரையறையே இன்றிகாதல் வளருகின்ற தஞ்சி
விரையம் ஏதும்இன்றி- இங்கு கரைகிறாளே வஞ்சி (பெ)
கொஞ்சுதமிழ் கெஞ்சிடவே கோலம் போடுதிங்கே
மிஞ்சிபோட்ட விரலும் மெல்ல நொஞ்சு பார்க்குதங்கே (ஆ)
வெஞ்சமரே வந்தாலும் அஞ்ச மாட்டேன் -நான்
பஞ்சத்திலே வாழ்ந்தாலும் கெஞ்ச மாட்டேன் (பெ)
ஓஹோ அப்பிடியா......
மண்டியிட்டுக் கேட்டுக்கிறேன் உன் மனசை -என்
மனசிலேயே வைத்து உன்னை பூஜிக்கிறேன் (ஆ)
ஆ ஹா ஹா ஆஹாஹா ஹா...........எனக்கு தெரியாதா
நீ பொன்னை வைக்கும் இடத்தில பூவைவைப்ப
என்னை வைக்கும் இடத்தில உன்னைவைப்ப (பெ)
சாச்சா அப்பிடி செய்வேனா......
பொன்னால தானேநான் போர்த்து வைப்பேன் -உன்
கண் ஜாடைக்காகத் தான் காத்திருப்பேன் (ஆ)
ம்..ம்.....ம் ok ok பார்க்கலாம்........
இனியா சகோதரி எப்படி நாங்கள் இதை மிஸ் பண்ணினோம்!
ReplyDeleteபொன்னால தானேநான் போர்த்து வைப்பேன் -உன்
கண் ஜாடைக்காகத் தான் காத்திருப்பேன் (ஆ)
ம்..ம்.....ம் ok ok பார்க்கலாம்........//
ஆஹா! ம்ம்ம்ம் நாங்களும் உங்கள் வெற்றி காண பார்ப்போம்!!!!
சும்மா தோணிச்சு எழுதிட்டு ரொம்ப பயந்திட்டே இருந்தேன் வெளியிட அப்புறம் துணிஞ்சு போட்டுட்டும் பயந்திட்டேன் அப்பா நிம்மதியா இருக்கு சகோ. வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் மிக்க நன்றி சகோ, நன்றி தோழி கீதா அவர்களுக்கும். பார்ப்போம் என்ன தான் நடக்குது என்று. ok வா.
Deleteஅருமை சகோதரி....வெற்றி பெற வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக்க நன்றிம்மா தோழி வருகைக்கும் வாழ்த்திற்கும்.இனி தொடர்கிறேன் தொடருங்கள்.
Deleteகாதல் ரசம் கவிதையில் இழைந்தோடுகிறது...
ReplyDeleteபோட்டியில் வெற்றிபெற எமது வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா
அம்மா கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
தங்களின் கவிதை வந்து கிடைத்துள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது நடுவர்களின் பரிசீலனையில் உள்ளது என்பதை அறியத் தருகிறேன் போட்டியில் வெற்றி பெற எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இது என்ன ரூபன் னோ என்ட்ரி என்று வருகிறது எங்கே ரூபன். அவரை அனுப்பி வையுங்கள் சீக்கிரமாக.
Deleteமிக்க நன்றி ரூபன்! தகவலுக்கும் வாழ்த்துக்கும்.
ஆஹா! பாட்டு பட்டைய கிளப்புது. பார்த்துட்டு சினிமாக்கு பாட்டெழுத கூப்பிட போறாங்க மேடம். அப்புறம் எங்களை எல்லாம் மறந்திட மாட்டீங்களே:)) உண்மையாவே நல்ல இருக்கு டா செல்லம், வெற்றி பெற வாழ்த்துக்கள்:)
ReplyDeleteஇப்பிடி எல்லாம் கிண்டல் பண்ணக் கூடாதுடா செல்லம். மறக்கக் கூடிய நட்பா இது அதெல்லாம் யாரும் கூப்பிட மாட்டாங்க யோசிக்க வேண்டாம். ok வா அம்மு தங்கள் இனிய கருத்து மகிழ்வளித்தது.வாழ்த்துக்கு மிக்க நன்றிடா அம்மு.
Deleteஅட இங்கப் பார்றா!
ReplyDeleteஇத எப்படிப் பாக்காம விட்டேன்?
.“.........ஓஹோ அப்பிடியா...... ?“
அப்ப அதான் முடிவா.....?
அது சரி!
“ஆ ஹா ஹா ஆஹாஹா ஹா...........எனக்கு தெரியாதா? “
என்ன கிண்டல் பண்றேனா?
“சாச்சா அப்பிடி செய்வேனா......?“
இப்பப் புரியாது. ரிசல்ட் வரட்டும்.
ம்..ம்.....ம் ok ok பார்க்கலாம்........!
இது தானே வேணாங்கிறது. இப்படியா கிண்டல் பண்ணுவீங்க. நானே ரொம்ப பயந்து பயந்து தான் எழுதி வெளியிட்டேன். இப்போ நீங்கள் வேற பயப்பிடுத்துகிறீர்களே. ஹா ஹா..ok ok பார்க்கலாம். மிக்க நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteஆமா நீங்கள் இப்போ கவிதை போடுகிறீர்களா இல்லையா சகோ போட்டிக்கு னோ எக்ஸ்கியூஸ் ok வா. சும்மா fun தானே போடுங்க. ok வா வெற்றி உங்களுக்கே.
நீங்கள் நிஜமாகவே தமிழ் சினிமாவிற்கு பாடல் எழுதலாம். இப்பொழுது வரும் பாடல்கள் எல்லாம் வாயில் வரும் எல்லா வார்த்தைகளையும் போட்டு தாளித்து எழுதுகிறார்கள். ஒரு ரசனையான பாடல் ஆசிரியரை நாங்கள் வரவேற்கிறோம்.
ReplyDeleteஅய்யய்யோ என்ன இப்படி சொல்லிட்டீங்க.நானு பா..ட.. ல் ஆசி...ரியரா.....விளையாடுறீங்களா. கேக்க நல்லாத் தானிருக்கு சகோ. மிக்க நன்றி! வரவுக்கும் வாழ்த்திற்கும்.
Deleteஇப்படியோர் கவியெழுதி எங்களைநீ மயக்குறியே!
ReplyDeleteதப்படி பரிசுனக்கு தராதுவிடில் இங்கிவர்கள்!
சித்திரமே! சொக்குதடி சிந்தையொடு எம்செயலும்!
நித்திலமே! வாழ்துகிறேன்! நீடுபுகழ் நீபெறுக!
அருமை! அருமை!
வெற்றியுமக்கே கிட்டட்டும்!
வாழ்த்துக்கள் அன்புத் தோழியே!
ஆஹா என்னம்மா உங்களை மயக்கிட்டேனா தோழி. ல அப்பாடா ரொம்ப சந்தோஷம்மா. எல்லாம் உங்கள் தயவு தானே தோழி. பார்க்கலாம். நீங்கள் எழுதி விட்டீர்களா. தாமதம் செய்யாது பங்கு பற்றுங்கள் ok வா. ஆவலோடு எதிர்பார்க்கிறேன். மிக்க நன்றி வரவுக்கும் வாழ்த்திற்கும்.
Deleteமிக்க நன்றி சகோ! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
ReplyDeleteபாட்டெழுதி பரவசத்தில் ஆழ்த்துறியே கண்ணை
ReplyDeleteபாடியதை நானுமுண்டேன் வெண்ணை
சிட்டாக பறக்கும்கவி சிரிக்குதடி வானில்
செந்தமிழே உள்நனையும் தேனில் !
பற்றுடன் பாடிய பைந்தமிழ் சேர்ந்திடும்
வெற்றிக் கனிகள் விரைந்து !
அழகிய பாடல் வெற்றி உமதே வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்
கவிஞரே தங்கள் கருத்தை காண தவம் அல்லவா இருக்க வேண்டி இருக்கிறது.
Deleteகண்டதுமே கொண்டாடும் உள்ளம்
பண்ணுடனே தரும்கவிதை பரவசத்தில் ஆழ்த்தும்!.
மிக்க நன்றி சீராளா ! வருகைக்கும் வாழ்த்திற்கும். வாழ்க வளமுடன் ....!
//சாச்சா அப்பிடி செய்வேனா......
ReplyDeleteபொன்னால தானேநான் போர்த்து வைப்பேன் -// ஆகா என்ன ஒரு அருமையான காதல் பாடல்...கலக்கிட்டீங்க தோழி! வாழ்த்துக்கள்!
மிக்க நன்றிம்மா தோழி! வருகைக்கும் வாழ்த்திற்கும்.
ReplyDeleteஅருமை! வெற்றிபெற வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅழகான கவிதை. போட்டியில் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDelete***நான் பஞ்சத்திலே வாழ்ந்தாலும் கெஞ்ச மாட்டேன்!**
ReplyDeleteஅடடா!
"கெஞ்சுவதும் கெஞ்சுவதும் வஞ்சியரின் சீதனம்"னு பாடிதெல்லாம் அந்தக்காலமா?
--------------------
ஒரு படத்தைப்பார்த்து காதல் ரசம் சொட்டச் சொட்ட இவ்ளோ எழுத முடியுமா??!!!!
வெற்றி பெற வாழ்த்துக்கள் இனியா! :)
அருமை கவிச்சுவை ரசித்தேன்.
ReplyDeleteவித்தியாசமாக எழுதியுள்ளீர்கள்.
வெற்றிபெற இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
தாமதமாக வந்ததுக்கு மன்னிக்க வேண்டும்.
ReplyDeleteஇப்பொழுது தான் இந்த கவிதையை இல்லை இல்லை பாட்டை படிக்கிறேன் (யாராவது மெட்டோடு பாடி கேட்க ஆசை)
ஆமா, எந்த படத்துக்கு இந்த பாட்டை எழுதினீங்க சகோ??
போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள்