Thanks for the image |
காலம் முழுவதும்
கண்ணுக்குள்ளேயே
இருந்து விடலாமா
நேரம் போவது தெரியாமல்
பெண்ணுக்குள் தோன்றும் புதிராய்
மண்ணுக்குள் தோன்றும் மரமாய்
விண்ணுக்குள் தோன்றும் வரமாய்.
பண்ணு க்குள் தோன்றும் பரவசமாய்.
Thanks for the image |
நீ எனைத் தாங்க
நானும் உனைத் தாங்குவேன்
என் உள்ளங்கையில் வைத்து
உயிரிலும் மேலாய் என் உயிர்
உள்ளவரை உலகே
Thanks for the image |
.
மோதிப் பார்ப்பதால் பாதிப்பு தான் அதிகம்
வாதிக்காமல் வாழ்க்கையை வென்றிடலாமே
பூரிக்கும் படியாய்
நாம் என்ன மனிதர்களா
மாற்றிப் பேசி மனம் நோக வைக்க
என்ன நான் சொல்றது
.
Thanks for the image |
பனியில் நனைந்தாலும்
துளியும் நிறம் மாறேன்
தனியே கிடந்தாலும்
தளர்ந்து நான் போகேன்
துணையை தேடி நான்
தொலைந்தும் போகேன்
(என்கிறது இந்த சிவப்பு ரோஜா )
வலையுறவுகளுக்கு வணக்கம் தயவு செய்து மன்னிக்கவும் நான் மீண்டும் வரும் வரை எனை மறவாதிருக்க இது ம்..ம்.. அப்புறம் புதிய நபர் என்றல்லவா எண்ணுவீர்கள் அது தான். நன்றி !
யாரு முணுமுணுக்கிறது. திட்டாதீங்கப்பா ப்ளீஸ்.
மோதலற்ற
ReplyDeleteஉலகைத் தாங்க விரும்பும்
கைகளிலிருந்து
மலர்ந்த
ரோஜா
பனிப்பொழிவின் மத்தியில்
வாடாமல் கிடக்கிறது!
சிவப்பில் வெண்மை படரட்டும்!
அருமை அம்மா!
நன்றி
மிக்க நன்றி! முதல் வருகைக்கும் இனிய கருத்திற்கும்.
Deleteபனியில் நனைந்தாலும்
ReplyDeleteதுளியும் நிறம் மாறேன்
தனியே கிடந்தாலும்
தளர்ந்து நான் போகேன்
துணையை தேடி நான்
தொலைந்தும் போகேன்
(என்கிறது இந்த சிவப்பு ரோஜா)//
அருமை சகோ...
உலகம் உருண்டை தானே..? என்பக்கம் நேரம் இருப்பின் வாருங்கள்.
மிக்க நன்றி தோழி ! வருகைக்கும் இனிய கருத்திற்கும்.
Deleteஅருமை சகோதரி...
ReplyDeleteமிக்க நன்றி! சகோ வருகைக்கும் இனிய கருத்திற்கும்.
Deleteதொலைந்து போக, நீர் என்ன பனியா?.எங்கப்பா? மறக்க முடிமா?.அருமை.
ReplyDeleteமிக்க நன்றி! வருகைக்கும் இனிய கருத்திற்கும்.
Delete---//பெண்ணுக்குள் தோன்றும் புதிராய்
ReplyDeleteமண்ணுக்குள் தோன்றும் மரமாய்
விண்ணுக்குள் தோன்றும் வரமாய்.
பண்ணு க்குள் தோன்றும் பரவசமாய்.///
அருமை அருமை சகோதரியாரே
மிக்க நன்றி! சகோ வருகைக்கும் இனிய கருத்திற்கும்.
Deleteஇனியாச்செல்லம் !!!! இப்படி இருக்கிறீர்கள்!!! பார்த்து எவ்வளவு நாள் ஆகிவிட்டது!!! உங்கள் கலகல பேச்சை போல அருமையாக இருக்கிறது படக்கவிதை!! சூப்பர்:)
ReplyDeleteஅம்மு sorrymma எப்படி இருக்கிறீர்கள் வந்திட்டேன்ல. நன்றி ம்மா கலகலப்பான வருகைக்கும் கருத்திற்கும். என்ன பதிவையே காணோமே என்னாச்சு ம்..ம். சட்டுப் புட்டுன்னு எழுதிப் போடுங்கள் ok வா
Deleteமோதிப் பார்ப்பதால் பாதிப்பு தான் அதிகம்
ReplyDeleteவாதிக்காமல் வாழ்க்கையை வென்றிடலாமே
ஸூப்பர் சகோ வாழ்த்துகள்.
சகோ நலம் தானே ?
Deleteநன்றி சகோ நலமே உள்ளேன் திருமணநாள் நெருங்குவதால் ரொம்பவே busy அது தான் முடிந்தவுடன் வருவேன் வெகு சீக்கிரம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் பார்ப்பேன் அனை த்து பதிவுகளையும் கருத்து தான் இடுவதில்லை. மன்னித்துக் கொள்ளுங்கள் சகோ மீண்டும் வரும்வரை.
Deleteமோதிப் பார்ப்பதால் பாதிப்புத் தான் அதிகம்
ReplyDeleteஆனால்
நீ எனைத் தாங்க
நானும் உனைத் தாங்குவேன்
என்று அடுக்கிப் படிக்கிறேன்
சிறந்த பாவரிகள்
சிந்திக்கவைக்கிறது
தொடருங்கள்
மிக்க நன்றி! சகோ வருகைக்கும் இனிய கருத்திற்கும்.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteபடங்களும் பாக்களும் அருமைத்தோழி..
ReplyDelete//வாதிக்காமல் வாழ்க்கையை வென்றிடலாமே// மிக நன்று அன்புத் தோழி.
பனியில் நிறம் மாறா ரோஜாவைப் போல, உங்கள் இடைவெளியில் நினைவில் வைத்திருப்போம், அம்ம! :)
அட தேனு எப்படி இருக்கிறீர்கள் . மிக்க நன்றி ஏனா மறக்காமல் இருப்பதற்கு த் தான் ஹா ஹா ... இனித் தொடர்வோம் மிக்க நன்றி! வருகைக்கும் இனிய கருத்திற்கும்.
Delete**** நாம் என்ன மனிதர்களா
ReplyDeleteமாற்றிப் பேசி மனம் நோக வைக்க
என்ன நான் சொல்றது***
பிரமாதம், இனியா! மனிதர்கள் தங்களைத் தாமே ஏன் உயர்திணை என்று சொல்லிக்கிறார்கள்ணு தெரியலை. அஃறிணைக்கும் கீழேதான் மனிதர்கள்- விலங்குகளின் அகராதிகளில்!
ஆமாம், தலைப்பு, "துணையைத் தேடி தொலைந்தும் போனேன்" என்று வராதா? அரைகுறைத் தமிழில் எழுதும நான் எல்லாம் "திருத்துநர்" ஆகிவிட்டேன் பாருங்க! நானும் மனிதந்தானே? அதான்.. :))))
\\\\\பிரமாதம், இனியா! மனிதர்கள் தங்களைத் தாமே ஏன் உயர்திணை என்று சொல்லிக்கிறார்கள்ணு தெரியலை. அஃறிணைக்கும் கீழேதான் மனிதர்கள்- விலங்குகளின் அகராதிகளில்!////
Deleteஅட வருண் மெல்லமா சொல்லுங்கய்யா யாரரவது கேட்டுவிடப் போகிறார்கள் இல்ல..... என்ன மாட்டி விடப் போகிறீர்களா என்ன
\\\\"துணையைத் தேடி தொலைந்தும் போனேன்" என்று வராதா?////// சா சா அதெல்லாம் வராது ஏனா யாரும் தொலையவில்லையே வருணும் வலையில் சிக்கி வந்து போய்க் கொண்டு தானே இருக்கிறார். தொலையவே இல்லையே அப்புறம் எப்படி எழுதுவது ஹா ஹா ....
அருமையான வரிகள் சகோதரி! உங்கள் வரிகளில் தொலைந்துவிட்டோம்!!!
ReplyDeleteஐயையோ அதெல்லாம் வேண்டாம் சகோ அப்புறம் என்னால் உங்களை தேடிப் பிடிக்க முடியாது அது தான் உங்களை காண்பது கடினமாக உள்ளதா? ஹா ஹா ..
Deleteஅன்புள்ள சகோதரி,
ReplyDeleteமோதிப் பார்ப்பதால் பாதிப்பு தான் அதிகம்
வாதிக்காமல் வாழ்க்கையை வென்றிடலாமே
பூரிக்கும் படியாய்...
நாம் என்ன மனிதர்களா?
மாற்றிப் பேசி மனம் நோக வைக்க
என்ன நான் சொல்றது...
என்ன நான் சொல்றது...
எண்ணிப் பார்த்தால்...
நொடிப் பொழுதில்...
உயர்திணையை அஃறிணையாக ஆக்கி...
அஃறிணையை உயர்திணையாக்கி
உயர்திணையாகிப் போனீர்கள்!
நன்றி.
மிக்கநன்றி !சகோ வருகைக்கும் கருத்திற்கும்.
Deleteபனியில் நனைந்தாலும்
ReplyDeleteதுளியும் நிறம் மாறேன்
தனியே கிடந்தாலும்
தளர்ந்து நான் போகேன்
துணையை தேடி நான்
தொலைந்தும் போகேன்
ஒற்றை ரோஜாவுக்கே உயிருள்ள வார்த்தைகளா அருமை அருமை
ஹா ஹா வாருங்கள் கவிஞரே ஆமா நீங்கள் ரொம்ப தூரம் போய் விட்டீர்களே ம்...ம்..ம் மறுபடி எப்போ வருகிறீர்கள் அடிக்கடி கவிதை தாருங்கள். யாவரும் மகிழ மிக்க நன்றி வருகைக்கும் இனிய கருத்திற்கும்
Deleteமீண்டும் மீண்டும் மீண்டு வா... மறக்காமல் தேடுகிறோம் பார்த்தீர்களா..!!
ReplyDeleteமிக்க நன்றி! வருகைக்கும் கருத்திற்கும்.
Deleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
ஒவ்வொரு வரிகளும் மிக அருமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்க நன்றி.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக்க நன்றி ரூபன் !வருகைக்கும் கருத்திற்கும்.
Deleteமிக்க நன்றி! சகோ வருகைக்கும் இனிய கருத்திற்கும்.
ReplyDelete