அன்னையே எந்தன் அடைக்கலம் நீயே
அகமகிழ் வேன்நான் அணைத்திடு தாயே
உன்னையே எண்ணி உருகுவ தேனோ
உயிரிலும் மேலாய் உணர்வத னாலோ
என்னையே தருவேன் நின்அருள் தாராய்
எத்தனை பிறவி எடுத்திடும் போதும்
உன்னையே தாயாய் பெற்றிட வேண்டும்
உதவிடு நானும் உருகிடு வேனே
வலையுறவுகள் அனைவருக்கும் அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்
பொங்கிடப் பொங்கும் வாழ்வில்
மங்கலம் நிறைந்திட வேண்டும்
தங்கிடும் செல்வம் தளைத்திடவே
இனிய உறவுகள் வாய்த்திட வேண்டும்
இனிய உறவுகள் வாய்த்திட வேண்டும்
இன்பம்சூழ தங்கம்போல் தரமாய்
என்று மனமார வாழ்த்துகிறேன் !
பொன்னையே நிகர்த்த பொற்றமிழ் தன்னை
பெற்றிட நானும் பெருந்தவம் செய்வேன்
கண்ணினைப் போல கருதிடு வேனே
கவிவரம் வேண்டிக் காத்திருப் பேனே
வெண்ணையயை உருக்கி வார்ப்பது போல
வீணையை மீட்டும் விரல்களைக் காட்டும்
கண்களை மூடிக் கொண்டே நானும்
கவிதைகள் புனைய சொற்றிறன் கூட்டும்
நின்னையே பேணி நெகிழ்ந்திட வாழ்த்து
நிம்மதி பெறுவேன் நீ உனில் ஆழ்த்து
விண்ணையும் போற்றி வாழ்ந்திட உன்றன்
வித்தைகள் கற்றே வளர்ந்திட வாழ்த்து
தாயினி நீயே ! தகுவன தாயேன்!
விண்ணையும் பார்த்து மண்ணையும் காத்து
வாழ்த்திடும் நீயே என்னையும் வாழ்த்து
பண்ணிய பாவம் போக்கிட நாளும்
பாக்களை ஊற்றி வழிபட வேண்டும்
புண்ணியம் தேடி புறப்பட யானும்
பண்ணுடன் பாட அருளிடு வாயே
கண்ணியம் காத்துக் கவலைகள் தீர்த்துக்
காரிகை கற்கக் கவிதனை ஊற்று
எண்ணிடு தாயே எழுந்தருள் வாயே
இன்னமும் ஏனோ தாமதிக் கின்றாய்
நண்ணிய தில்லை நாயகன் நெஞ்சில்
நாயகி நின்றே நர்த்தனம் ஆட
கன்றுகள் தாயைத் தேடுதல் போல
கண்திறந் துன்மடி வீழுதல் வேண்டும்
வெண்மையை விரும்பும் வாணியே தாயே
வந்தனை செய்வேன் வரம்தர வாயேன்
திண்மையை பெறகண் திறந்திடு வாயே
திறம்பட பாக்கள் புனைந்திட நானே
எண்ணிய படியே எளிதினில் எழுத
ஏந்திடு வாயே ஏழையேன் எனையே
என்னையே மறக்க ஏற்பன செய்யும்
உன்னையே யன்றி ஒருவழி காணேன்
பொன்னையும் விரும்பும் புகழையும் தேடும்
பூவினில் லென்கண் பொருந்திடும் முன்னில்
எண்ணிய செய்கை யாவிலும் நீயே
எளியனை ஆட்கொண் டருளிடு தாயே !
அழகிய பக்தி கவிதை
ReplyDeleteஉடன் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ ! என்ன மைன்ட் vice ஏதோ கேட்குதே ஒ ...அப்புறம் எங்க ஆளைக்க்னோம் என்று கேட்கப்படாது ok.... சரி சிரி......ஹா ஹா ......
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ....!
மிக அருமை தோழி..
ReplyDeleteவாழ்த்துகள்!
த.ம.இணைக்க முடியவில்லையே..
மிக்க நன்றி டா வருகைக்கும் கருத்துக்கும்.த.ம அதுவா தெரியலையே அது இணைக்கவே இல்லையே. ட்ரை பண்ணிப் பார்த்து விட்டு களைத்து விட்டேன்மா.
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள் தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும்.
செல்லம்
ReplyDeleteஉங்களிடம் நான் வியக்கும் விஷயங்கள் பல......
முதலில் சொற்கள் எப்படிதான், இப்படி அருவியாய் கொட்டுகிறதோ!!
அப்புறம் உங்கள் நடையின் சரளம். அடேயப்பா!!!! எவ்வளவு நீளம்!!! எனக்கானால் இத்தனை நீளமாக எழுதவராது(என்னது சரக்கு இருந்தாதானே ன கேட்டீங்க? அதுவும் சரிதான்:))
எப்படிமா இவ்ளோ பிசியான நேரத்தில் கூட இப்படி அருமையாய் எழுத முடிகிறது!!!
வாழ்த்துகள் செல்லம்:))
அம்முக்குட்டி ஒரு பழமொழி தெரியுமா தாரமும் குருவும் தலைவிதிப் படியென்று என்ன புரியுதா? அதே ம்..ம்..ம்
Deleteஅம்முகுட்டி உங்களை மாதிரி என்னால எழுத முடியாது அம்மு அவ்வளவு ஹை ஸ்டாண்டர்ட் உங்களோடது தெரியுமா சில சமயங்களில் நான் போய்விட்டு திரும்ப திரும்ப வந்து வாசிப்பேன்
அதன் பின்னர் தான் கருத்து போடுவேன். அது விளங்கும் போது ஆச்சாரியமாக இருக்கும். விளங்காமல் கருத்து போடமாட்டேன். ஹா ஹா .. அவ்வளவு ஆற்றல் தங்களுக்குண்டும்மா ok வா சொ தயங்காமல் நன்றாக எழுதுங்கள். மிக்க நன்றிம்மா !
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ...!
எண்ணிய செய்கை யாவிலும்
ReplyDeleteதங்களை ஆட்கொண் டருளிடுவாள்
நன்றி சகோதரியாரே
எளிமையான அழகான வரிகள். வாசிப்பதிலும் ஒரு சந்தோசம். அப்படியே சரஸ்வதி தேவியை என்னையும் கொஞ்சம் ஆட்கொள்ள பரிந்துரை செய்யுங்கள். நான் எழுதுனா மட்டும் வார்த்தைகள் ஓடி ஒழிந்து கொள்கிறது. உங்கள் பக்தி கண்டு நானும் மெய்மறந்தேன்.
ReplyDeleteஅனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் ...!
Deleteஒவ்வொரு வரியும் சிறப்பு... வாழ்த்துக்கள்...
ReplyDeleteஅனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் ...!
Deleteபொன்னையே நிகர்த்த பொற்றமிழ் தன்னை
ReplyDeleteபெற்றிட நானும் பெருந்தவம் செய்வேன்
கண்ணினைப் போல கருதிடு வேனே
கவிவரம் வேண்டிக் காத்திருப்பேனே!..
அருமை.. இனிய பாமாலை.
நல்வாழ்த்துக்கள்!...
கலைமகளுக்கு அழகான கவிதையை படைத்து, நன்றியை செலுத்திவிட்டீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் ...!
Deleteஅழகான பக்தி மணம் கமழும் பா! அந்தக் கலைமகளின் அருள் தங்களுக்கு எப்போதும் கிடைக்கபெற எங்கள் வாத்துக்கள்.
ReplyDeleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மன்மார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
அனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் ...!
Deleteஆஹா...என்னமா எழுதுறீங்க.....வார்த்தைகள் அழகாய் சரளமாய் கொட்டுகிறது..ஆனா...நான் எழுத ஆரம்பிச்சா...வார்த்தைகளே இல்லாதமாதிரி இருக்கு...தெரிந்தது அம்புட்டுத்தானே அப்படிங்குறீங்க ஆமா ஆமா.... சரஸ்வதி தேவி மகிழ்ந்து ஆசிர்வதிப்பார் எங்கள் சகோதரியை....நன்றி வாசிக்க வாசிக்க ....அழகாய் போகிறது கவிதை.
ReplyDeleteஅனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் ...!
Deleteஅருமை சகோ பாராட்டத் தகுதியில்லை எமக்கு அருமை,,,,, வாழ்க வளமுடன் பொங்கல் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவருக்கும் என் மனமார்ந்த பொங்கல் வாழ்த்துக்கள் ...!
Deletehttps://www.youtube.com/watch?v=J4i3PLxYCUQ
ReplyDeleteiniya pongal vazhththukkaL.
subbu thatha
மிக்க நன்றி தாத்தா அருமையாக பாடி என் பாடலுக்கு மெருகூட்டியமை கண்டு மிகவும் மகிழ்ந்தேன். நன்றி சொல்ல வதை இல்லை கலைமகள் கடாட்சம் பெற்று தாத்தா பாட்டி மற்றும் அனைவரும் இன்பமாய் வாழ மனமார வாழ்த்துகிறேன்இனியா பொங்கல் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.நன்றி நன்றி !
Deleteu r at
Deletevazhvuneri.blogspot.com
also to taste this Happy Pongal.
subbu thatha
Happy 2015 Thai pongal
ReplyDeleteVetha.Langathilakam.
தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல்தின வாழ்த்துக்கள். சர்க்கரைப்பொங்கல்போல வாழ்க்கை என்றும் இனிக்கட்டும்.
ReplyDeleteமிக்க நன்றி விச்சு வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும் !
Deleteதங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் ...!
அருமை! இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுப்புத்தாத்தா குரலிலும் கேட்டுவிட்டேன்....வாழ்த்துகள் தோழி! :)
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
தை பிறந்தாச்சு
ReplyDeleteஉலகெங்கும் தமிழ் வாழ
உலகெங்கும் தமிழர் உலாவி வர
வழி பிறந்தாச்சென வாழ்த்துகிறேன்!
***பண்ணிய பாவம் போக்கிட நாளும்
ReplyDeleteபாக்களை ஊற்றி வழிபட வேண்டும்***
அதென்னவோ, பாவம் செய்வதால்தான் நமக்கு "கடவுள்" தேவைப்படுகிறார். :-)))
***இன்னமும் ஏனோ தாமதிக் கின்றாய் ***
அது ஏன்னா நம்மளவிட பாவம் செய்தவங்க நெறையப் பேரு இருக்காங்களாம். அவர்களுக்குத்தான் "ப்ரையாரிட்டி" கொடுக்கிறாங்க போல!
-----------
உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள் இனியா!
திருவள்ளுவர் தின வாழ்த்துகளும், மாட்டுப்பொங்கல் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக.....
ReplyDeleteஎண்ணக் கவிபொருந்த ஏங்கும் மதிமுகத்தைத்
ReplyDeleteதண்ணீர் தலைகோதித் தாலாட்டும் - கண்விரியக்
காவியத்தில் ஓர்கவிதை காணக் கடுந்தவமோ
ஓவியமே கொண்ட துயிர்!
நன்றி அம்மா!
தாமத வருகையை மன்னியுங்கள்.
முதல் முறை வருகிறேன். கண்திறந்து உன் மடி வீழ்தல் வேண்டும்.அருமை, தொடர்கிறேன்.
ReplyDeleteமுதல் முறை வருகிறேன். அருமை. தொடர்கிறேன்,
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteஅம்மா.
தைமகளை மான்புடன் வரவேற்க
பா புனைந்த வரிகள் எவ்விதமே எடுத்தாய்
என்று ஏக்கி தவிக்கிது என் உள்ளமது
செப்பிய வரிகள் கண்டு சிந்தை குளிர்ந்தது...
மிக அருமையாக உள்ளது அம்மா.
பகிர்வுக்கு நன்றி
காலம் தாழ்த்தி வந்தமைக்கு மன்னித்து விடுங்கள்.... அம்மா...
என்பக்கம் கவிதையாக வாருங்கள் அன்போடு
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: ஆராரோ பாடிடுவோம்:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
கலைமகளுக்கு அழகான கவிதை. நல்வாழ்த்துகள்.
ReplyDeleteMadam,
Good Morning !
You may like to go through this Link:
http://gopu1949.blogspot.in/2015/01/12-of-16-71-80.html
This is just for your information, only
With kind regards,
GOPU [VGK]
gopu1949.blogspot.in
வணக்கம் ! வாருங்கள் ஐயா ! தங்கள் முதல் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். மிக்க நன்றி ஐயா ! நிச்சயம் வருகை தருகிறேன் .
Deleteவாழ்க வளமுடன் ...!
அன்பு தமிழ் உறவே!
ReplyDeleteஆருயிர் நல் வணக்கம்!
இன்றைய வலைச் சரத்தின்,
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"வலை - வழி - கைகுலுக்கல் - 2"
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துகள்!
வலைச் சரம் வானத்தில் வானவில்லாய்
உமது பதிவின் எழில் முகம் கண்டேன். களிப்புறேன்.
உவகை தரும் பதிவுகள் உயிரோவியமாய் திகழட்டும்!
தேன் தமிழாய் சுவைக்கட்டும்! திகட்டாமல் திக்கெட்டும்.
நட்புடன்,
புதுவை வேலு
WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM
(குழலின்னிசையின் உறுப்பினராகி உவகை தர வேண்டுகிறேன் நன்றி)