திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும்
கட்டளைகள் யாவும் கரையேறும்
காட்சிப் பிழையானால் கண்கள்குளமாகும்
சாட்சிகள் நேரென்றால் நிம்மதி நிலையாகும்
சூழ்ச்சிகள் தொடர்ந்தால் சூழும் சோதனைகள்
சொந்தம் பந்தம் யாவர்க்கும் வேதனைகள்
வாட்டமுறவே வரும் பெரும் வலிகள்
கூட்டமாகவே கொல்லும் சிறுநரிகள்
விட்டகலும் வேதனைகள் பட்டகளை தீரும்
என்றேமகிழ இரும்பை கவரும் காந்தம்- போல்
மீண்டும் வளைய வரும் மெல்லவே
கொல்ல வரும் பொல்லாத விதியும்
தொட்டுவிட முடியாத தூரம் பருந்து
வட்டமிட்டு வேண்டுவதோர் விருந்து
காற்றும் மழையும் இங்கு காவலா-விதி
கூட்டிச் செல்லும் பெரும் ஆவலா
தேடும் வாழ்வு கிடைத்திடுமா தெய்வ
வாக்கு பலித்திடுமா வாழ்வில் -இல்லை
இட்டமுடன் எழுதிவிட்ட பரமனவன்
பட்டைகளை போட்டிடுவான் முடிவிலவன்
ஒற்றுமையில் வேற்றுமை காணும் உலகு
நேற்றும் இன்றும் ஒன்றாய் இல்லை விலகு
வீடுகள் தோறும் வாசல் படி - விதி
வந்து வந்து போகும் நேசப்படி
காலம் முழுதும் கவலைகள் தின்னும்
காற்றுப் போனால் மண் உடலை தின்னும்
திட்டிடவும் முடியாது தட்டிடவும் தெரியாது
நாளும் முட்டியே மோதி புத்திபேதலிக்கும்
விட்டவழி என்றெண்ணி வாழ்ந்திடுவோம்
சட்டி சுட்டது என்றெண்ணி வீழ்ந்திடுவோம்
தேட்டமும் திரவியமும் தீண்டாது - என்றும்
தெவிட்டாத பேரின்பம் வழங்காது
நாட்டமுறும் நிகழ்சிகளும் நல்காதே
நன்றி கெட்ட மாந்தர்களும் உள்ளாரே
பச்சிளம் குழந்தை என்றும் பார்க்காதே
பாவங்கள் என்றெண்ணி இரங்காதே
பட்டாம் பூச்சிகள் போல் பறக்காதே
பற்று பாசம் என்னவென்று புரியாதே
காட்டிலும் நாட்டிலும் இது நிலையாமே-இவை
கண்டு கண்டு நொந்தாலும் விதியில்லையே
வீட்டிற்கு வீடு வாசற்படி என்பதை மிக அழகாக சொல்லிவிட்டீர்கள் சகோ.
ReplyDelete"//காட்சிப் பிழையானால் கண்கள்குளமாகும்//" - உண்மை தான், அற்புதமான வரி.
வாழ்த்துக்கள் சகோ.
வாங்க சகோ இப்போ நலம் தானே? நீண்ட நாட்களின் பின்னர் தங்களின் வருகை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
Deleteநன்றி சகோ! வருகைக்கும் அழகான கருத்துக்கும். வாழ்க வளமுடன் ....!
கிட்டத்தட்ட எங்கள் இடுகையின் சாராம்சம் இங்கு கவிதை வடிவில்! ஆஹா!
ReplyDeleteநாட்டமுறும் நிகழ்சிகளும் நல்காதே
பச்சிளம் குழந்தை என்றும் பார்க்காதே
பட்டாம் பூச்சிகள் போல் பறக்காதே
காட்டிலும் நாட்டிலும் இது நிலையாமே-இவை
கண்டு கண்டு நொந்தாலும் விதியில்லையே //
மனதைத் சுடும் வரிகள்! என்று விடிவு காலம் வரும் சகோதரி?!!
வாருங்கள் சகோ ஆமாம் சகோ நானும் பார்த்தேன். ஒரே சமயத்தில் எண்ணம் ஒன்றாக இல்லையா சகோ மிக்க மகிழ்ச்சி! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ! வாழ்க வளமுடன் ....!
Deleteகாலம் முழுதும் கவலைகள் தின்னும்
ReplyDeleteகாற்றுப் போனபின் மண் உடலை தின்னும்
நான் மிகவும் ரசித்த வரிகள்,
எனது புதிய பதிவு. காண்க....
மிக்க நன்றி ! சகோ வருகைக்கும் கருத்துக்கும். இதோ வருகிறேன்.
Deleteவணக்கம் அம்மா..
ReplyDeleteநய வஞ்சகர்கள் நாடாழ வந்து விட்டதன் விளைவு பயனாக விளைந்த சோகத்தை என்னவென்று சொல்வது? தர்மம் ஒரு நாள் வெல்லும் அதை நாமிருக்கும் போதே சரித்திரம் சொல்லும். சோகம் வழிந்தோடும் வரிகள் நெஞ்சை கனமாக்குகிறது. பகிர்வுக்கு நன்றிகள் அம்மா..
பாண்டியரே நலம் தானே? நீண்ட நாட்களின் பின் தங்கள் வருகை கண்டு மிகவும் மகிழ்ந்தேன்.
Delete\\\தர்மம் ஒரு நாள் வெல்லும் அதை நாமிருக்கும் போதே சரித்திரம் சொல்லும்/// எவ்வளவு நம்பிக்கையான வார்த்தைகள் ஆறுதல் தரும்படி மிக்கநன்றி ! வருகைக்கும் கருத்துக்கும்.
நல்ல கவிதை சகோதரி ...
ReplyDeleteவார்த்தைகள் வரிசைகட்டி வந்தவிதம் நன்கு மெருகேறி அசத்துகிறது...
வாழ்த்துக்கள்
வாருங்கள் சகோ ! மிக்க மகிழ்ச்சி தங்கள் வருகையில்.
Deleteதங்கள் இனிய கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோ !
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
வீடுக்கு வீடு என்றாலும்
நாட்டுக்கு நாடு என்றாலும்.
இன் நிலைதான்...
காலம் உணர்ந்து
கவி வடித்துள்ளீர்கள்...
விதியை வென்று ஒரு நாள்
விடியல் பொழுது வந்தடையும்
நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி அம்மா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன். ரொம்பவும் பிசி யாக இருப்பீர்கள் கவிதை போட்டியில். இருந்தும் வந்து கருத்து இட்டமைக்கு மிக்க நன்றி !
Delete//காட்சிப் பிழையானால் கண்கள்குளமாகும்//
ReplyDelete//ஒற்றுமையில் வேற்றுமை காணும் உலகு
நேற்றும் இன்றும் ஒன்றாய் இல்லை விலகு //
//காட்டிலும் நாட்டிலும் இது நிலையாமை//
கவிதை மிக அருமை தோழி..இப்படித்தான் இருக்கிறது நிலைமை.
மிக்க நன்றி! தோழி வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவிடியலை வேண்டி விளம்பினீர் பாடல்!
ReplyDeleteமுடிவினைக் காண்போம் முனைந்து!
நல்ல சிந்தனை! உளமுருக்கும் வரிகள்!
வாழ்த்துக்கள் தோழி!
மிக்க நன்றி தோழி ! இனிய கருத்துக்கும் வருகைக்கும்.
Delete
ReplyDelete"ஒற்றுமையில் வேற்றுமை காணும் உலகு
நேற்றும் இன்றும் ஒன்றாய் இல்லை விலகு
வீடுகள் தோறும் வாசல் படி - விதி
வந்து வந்து போகும் நேசப்படி" என்ற
அழகான பாவரிகளுடன்
சிறந்த கவிதையைப் படித்தேன்.
மிகக் நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteமனம் வலிக்க செய்கிற கவிதை.
ReplyDeleteநிலையாமையை அழகா காட்டிருகீங்க செல்லம். படங்கள் அழகோ அழகு!!
அதில் ஒரு படம் தான் நம்ம அம்முவோ:))
மிக்க நன்றி அம்மு! வருகைக்கும் கருத்துக்கும். ஆனா அந்தளவுக்கு எல்லாம் அழகா இருக்க மாட்டேன் அம்மு. ம்..ம்..ம்..sorry டா.
Delete
ReplyDelete***தேடும் வாழ்வு கிடைத்திடுமா தெய்வ
வாக்கு பலித்திடுமா வாழ்வில் -இல்லை
இட்டமுடன் எழுதிவிட்ட பரமனவன்
பட்டைகளை போட்டிடுவான் முடிவிலவன்***
ஏன் பரமன் மேலே இவ்ளோ "அவநம்பிக்கை", இனியா?
தினமும் எதாவது ஒன்றுக்காக அனைவரும் வருந்திக் கொண்டு தானே இருக்கிறோம் வருண் கூழுக்கு உப்பில்லை என்பவருக்கும் சரி பாலுக்கு சர்க்கரை இல்லை என்பவருக்கும் சரி கவலை ஒன்று தான்.
Deleteபரீட்சை வருகிறது என்று பயந்து கொண்டு இருப்பார்கள். பரீட்சை எழுதி விட்டால் பாஸ் பண்ணவேண்டும் என்று கவலை பாஸ் பண்ணினா இன்னும் நல்லா எழுதவில்லையே என்ற கவலை. பின்னர் இண்டர்வியூ வேலை இப்படி இதைவிட நாளாந்தம் பசி பட்டினி வாழ்க்கையை தொலைத்தவர்கள்.இப்படி சுற்றத்தை தொலைத்தவர்கள் காலமெல்லாம் தினமும் படும் துன்பங்கள். நாளை நல்லது நடக்காதா கிடைக்கும் என்கிற நம்பிக்கையுடன் வாழ்பவர்கள் கடைசிவரை துன்பத்தை தொடர்ந்து அனுபவித்து விட்டு ஏக்கத்துடனேயே இறந்து விடுகிறார்களே. அதை நினைத்து வேதனை பட்டு எழுதியது தான் இது எனக்கு பரமன் மீது பேர்சனலாக ஒரு கோபமும் இல்லை வருண். ok வா உண்மையில் சில பதிவுகள் தந்த வேதனை தான் இந்தக் கவிதை.
மிக்க நன்றி! வருண் வருகைக்கும் கருத்துக்கும்.
விதி வந்து வந்து போகின்ற
ReplyDeleteவீடுதோறும் வாசல்படி...... அருமையாக உள்ளது தோழி.
மிக்க நன்றி தோழி! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteஅய்யோ என்ன ஆச்சு உங்களுக்கு.........??!!!
ReplyDeleteகவிதையில் சித்தர் பாடல்கள் நெடியடிக்கிறதே!
மெய்ஞானத் தேடல் முயற்சி எல்லார்க்கும் வர்றது தானே?
நீங்க மட்டும் என்ன விதிவிலக்கா?
பாடலைப் பாடிப்பார்த்தேன்.நல்லா வந்திருக்கு.
நானும் இது போல் எழுதி மெய்யாய் ஒரு பொய் என்று பதிவிட்டிருக்கிறேன். இருப்பதும் ஒரு கூடை அளவு தேறும்.
சில நேரங்களில் இப்படியெல்லாம் தோன்றத்தான் செய்கிறது .....!
எப்பொழுதும் இந்த எண்ணம் மாறாமல் இருந்தால் சந்நியாசமாவது கொள்ளலாம்..
இல்லையா?
இன்னும் எழுதுங்கள் சகோதரி!
நன்றி!
ReplyDeleteகவிதை ராகம் கட்டிப் பாடுவதற்கு ஏற்றதாக இருக்கிறது அருமை... மூன்றாவது படத்தில் இருக்கும் குழந்தை அழகோ அழகு ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் என் கண் திருஷ்டியே பட்டு இருக்கும்...
சிறரிசிட்டு இருந்த பிள்ளை ஏன் அழுதது என்று இப்பதானே புரியுது. சீக்கிரம் பூசணிக்காய் சுத்திப் போடணும். இப்படியெல்லாம் கண்ணு வைக்காதீங்க சகோ ok வா .
Deleteமிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.
கவி அருமை சகோதரியாரே
ReplyDeleteவேதனைகள் விட்டகலும் காலம்
தொலைவில் இல்லை
நன்றே நடக்கும்
கவி அருமை சகோதரியாரே
ReplyDeleteவேதனைகள் விட்டகலும் காலம்
தொலைவில் இல்லை
நன்றே நடக்கும்
மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteநல்ல கவிதை- நெஞ்சைத் தொடுகிறது!
ReplyDeleteமிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.
Delete""ஒற்றுமையில் வேற்றுமை காணும் உலகு
ReplyDeleteநேற்றும் இன்றும் ஒன்றாய் இல்லை விலகு
வீடுகள் தோறும் வாசல் படி - விதி
வந்து வந்து போகும் நேசப்படி""
these four lines says the realistic...... wow , super kavithai... congrats
மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteதொட்டுவிட முடியாத தூரம் பருந்து
ReplyDeleteவட்டமிட்டு வேண்டுவதோர் விருந்து / அதன் இயல்பு அதுதானே. நைஸ்...
மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteஅன்புடையீர்..
ReplyDeleteவிருது ஒன்றினைத் தங்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
இணைப்பு - http://thanjavur14.blogspot.com/2014/09/blog-post84-blog-award.html
மிக்க நன்றி சகோ ! எனக்கும் விருது தந்து சிறப்பித்தமைக்கு. மனம் உவந்து ஏற்றுக் கொள்கிறேன். தங்கள் கருணையை வியந்து.
Deleteதங்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!
வணக்கம்
ReplyDeleteதங்களுக்கு விருது இரண்டை பகிர்ந்துள்ளேன் அதை இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதோ விருது அள்ளிச் செல்லுங்கள்....:
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ஆஹா மீண்டும் தங்களிடம் இருந்து விருந்தா மிக்க நன்றி ரூபன். பணிவன்புடன் ஏற்றுக் கொள்கிறேன். என்னையும் மறக்காது விருது வழங்கி சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ரூபன். வாழ்க வளமுடன் ....!
Deleteவீட்டுக்கு வீடு வாசல்படி அதை
ReplyDeleteமுட்டிக் கொண்டால் நட்டம் தனி !
அழகான அர்த்தம் உள்ள வரிகள்
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
வாருங்கள் சீராளன்! நலம் தானே. கவிஞர் ஆன பிறகு ரொம்ப பிசி போல அத்தி பூத்தாற்போல் வருகிறீர்கள். நன்றி நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteஅன்புள்ள திரு. காவியக்கவிக்கு,
ReplyDeleteஅருமையான கவிதைக்கு...உள்ளத்தைத் தைத்தக் கவிதைக்கு என் உள்ளத்து நன்றி.
வீடுகள் தோறும் வாசல்படி...
நாடுகள் தோறும் நல்லபடி
நாளும் இல்லையே உள்ளபடி!
விதியை எண்ணாத வாழ்க்கைப்படி
மதியை எண்ணினால் மாற்றுப்படி
தேடும் வாழ்வு கிடைக்கும் படி
போடும் திட்டத்தால் அவன் தவிடுபொடி
தமிழன் ஆள்வான் மீண்டபடி
தமிழால் மீண்டும் காவியக் கவிபடி.
நன்றி.
-மாறாத அன்புடன்,
manavaijamestamilpandit.blogspot.in
மணவை ஜேம்ஸ்.
தங்கள் முதல் வருகையில் மனம் மகிழ்ந்தேன். விரைவில் வருகிறேன் தங்கள் தளத்திற்கு மிக்க நன்றிசகோ ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!
Delete