நிம்மதி எங்கே நீ எங்கே மனம்
தீயினில் வேகுது தின மிங்கே
அக்னியில் தோன்றிய ஆரணங்கே
ஆவி துடிக்குது பார் இங்கே
வேரற்ற மரமாய் விறகானேன்
வேல் விழி தைத்திட சருகானேன்
காரிருள் சூழுது கண்ணொளி மங்குது
தண்ணொளி படர வா இங்கே
தாமரை இலையில் நீரானேன்
தரையினில் துடிக்கும் மீனானேன்-உனை
தீண்டிய கண்கள் தூங்காது
தோன்றிய எண்ணம் நீங்காது
வளைத்திட வேண்டின
வில் ஏந்திய விரல்கள்
வாடிடவே நின்மலர் வதனம்
வாடிடவே நின்மலர் வதனம்
வீழ்ந்தன துவண்டு வாள் ஓங்கிய கரங்கள்
அறைகூ விடும்
நெஞ்சம் நோகிறது
நெஞ்சம் நோகிறது
நேர்விழி மெல்ல
தாழ்கிறது
தாழ்கிறது
நதி மீதினில்
விழுந்த நாரானேன்
நகைப்பினிற்கு
ஆளானேன்
கரையினில் நிற்கும்
கொக்கானேன்
கிரகணம் கண்ட வானானேன்
காரிகையே நீ நீங்கிடவே
ஏங்கிடும் இதயம்
அலைமோத
பொழுதுகள் புலராமல்
விழுந்த நாரானேன்
நகைப்பினிற்கு
ஆளானேன்
கரையினில் நிற்கும்
கொக்கானேன்
கிரகணம் கண்ட வானானேன்
காரிகையே நீ நீங்கிடவே
ஏங்கிடும் இதயம்
அலைமோத
ஓயாதொரு கணம்
நிலையாக
நிலையாக
பொழுதுகள் புலராமல்
பொலி விழந்தன
வீரம் செறிந்த புஜங்கள்
வீரம் செறிந்த புஜங்கள்
புரிய வில்லை நிஜங்கள்
நீ ஓடிய பாதையில்
உனைதேடி நாடி வந்தேன்
திருமணம் செய்யதிட
கூடி வந்தேன்
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
கவிதையின் வரிகளை ரசித்தேன்...அருமை வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
ஆஹா முதல் வருகை அமர்க்களம்! மிக்க மகிழ்ச்சி ரூபன் மிக்க நன்றி !
Deleteவாழும் காலம் முழுதும்
நீ வாழ வேண்டும் நலமே
பொன்னும் பொருளும் பெற்று
பெருக வேண்டும் புகழும்!
கணினி இன்னும் சரியாகவில்லையா?
அருமை
ReplyDeleteரசித்தேன்
சகோதரியாரே
நன்றி
வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் !
Deleteநன்றி சகோதரரே! வாழ்க வளமுடன்....!
ஆகா... படங்களும் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வணக்கம் சகோ ! வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் !
Deleteமிக்க நன்றி!
வாழ்க வளமுடன்....!
//வேரற்ற மரமாய் விறகானேன்
ReplyDeleteவேல்விழி தைத்திட சருகானேன்!..//
தமிழ் இனிமை என்று சும்மாவா சொன்னார்கள்!..
வாருங்கள் சகோதரா ! ஆமாம் உண்ண உண்ண தெவிட்டாதது.தேன் தமிழ் அல்லவா.
Deleteவருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்.ரொம்ப நன்றி !
வாழ்க வளமுடன்.....!
அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாருங்கள் சகோ !
Deleteவருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன் மிக்க நன்றி சகோ !
வாழ்க வளமுடன்.....!
அருமையான தமிழில் அழகாய் கவிதை வ்டித்திட்டீர்கள்! வியந்து பாராட்டுகிறோம்! வாழ்த்துக்கள்! தொடர்கின்றோம்!
ReplyDeleteதுளசிதரன், கீதா
வாருங்கள் வாருங்கள் இருவருக்கும் என் அன்பு வணக்கங்கள்!
Deleteமுதல் வருகை மிக்க மகிழ்ச்சி ! தங்கள் கருத்தும் வருகையும் என்னை இன்னும் மெருகு படுத்தும். மிக்க நன்றி!
தொடர வேண்டுகிறேன் ! நானும் இனி தொடர்வேன்.
வாழ்க வளமுடன......!
அற்புதமான கவிதை
ReplyDeleteஅதற்கான அருமையான படங்களுடன்
மிகவும் ரசித்துப் படித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ! வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி...! வாழ்க வளமுடன் ....!
Deleteஆரமுதாய்க் கொட்டும் அழகிய சொற்பதங்கள்
ReplyDeleteபாரதத்தின் பண்புதிர்க்கும் நற்படங்கள் - பாராளும்
தாய்போற்றப் பாடுகின்றாய் வாழ்த்துகிறேன் !நெஞ்சோடு
சாய்ந்தாடும் இன்பம் சுகித்து !
நீண்ட நாளின்பின் தங்கள் வலை வந்தேன்
இனிய கவிதை ரசித்தேன்
வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்
வாருங்கள் சீராளா!
Deleteவருகையில் பெரும் உவகை கொண்டேன்.தங்கள் வலைத்தளத்தில் இருந்து தான் வருகிறேன் துயரம் மிக்க கவிதை கண்டு.தங்கள் கருத்தில் ஆனந்தமும் அமைதியும் கொண்டேன். மிக்க நன்றி! சகோதரா.
காலங்கள் மாறவேண்டும்
கண்ணீரும் மறைய வேண்டும்
புத்தம் புதுக் கனவுகள்
நித்தம் நீ காணவேண்டும்
வாழும் காலம் முழுதும்
இனிமையாய் வாழ நாளும்
கோளும் கூடி வரவேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன் ....!
அழகான வரிகளும் பொருத்தமான படங்களுமாக
ReplyDeleteஅமர்க்களமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும்.
Deleteவாழ்க வளமுடன்...!
அன்பு சகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteஅழகான கவிதை. படங்களும் கவிதையின் கருத்துக்கு காட்சியாய் நிற்கின்றன. சகோதரியின் கவிதைக்குள் நானும் மூழ்கிப்போனேன். காரணம் ஐயாவுக்கு ஏற்ற கரு. சும்மா. தங்களின் கவிவரிகள் உண்மையில் வியக்க வைக்கிறது. அழகான. பொருத்தமான உவமைகள். ரொம்ப மகிழ்ச்சியாய் இருக்கிறது. தொடருங்கள் சகோதரி. நன்றி..
எங்கே என் அன்புச் சகோதரரை காணவில்லை என்று பார்த்தேன்.அப்பாடா வந்தாச்சு. ஆமா என்ன இப்படியா குண்டு போடுவீர்கள் பாண்டியா\\ ஐயாவுக்கு ஏற்ற கரு//. ஒரு கணம் திக் எண்றது தெரியுமா. விளையாட்டுக்கு கூட சொல்ல வேண்டாமே இப்படி.
Deleteவழமை போலவே என்னை ஊக்கப் படுத்தும் உங்கள் கருத்துக்கள் கண்டு மிக்க மகிழ்ச்சி பாண்டியா!
எல்லா நலன்களும் பெற்று இன்பமாய்
வாழ வாழ்த்துகிறேன் ....! நன்றி !.
அருமையான கவிதை சகோதரி.
ReplyDelete"//உனை
தீண்டிய கண்கள் தூங்காது'//"
ஐய்யையோ, அப்படியென்றால் கண்கள் தூங்கவே தூங்காதா??
வரிகளுக்கு மிகவும் பொருத்தமான படங்கள்.
ReplyDeleteநீங்களும் மகாபாரதம் பார்க்கிறீர்கள் என்று தெரிகிறது.