Sunday, March 3, 2013

சுமந்துவிடு






பார்த்தசாரதி நீதானோ பரந்தாமா 
வரம்தர வருவாயோ இல்லை    
பாமகளின் பூமுகம் பார்த்து 
பூவுலகை நீ மறந்தாயோ 
தேவர்கள் தந்த அமுதினை உண்ட
மயக்கத்தில் இன்னும் உள்ளாயோ 
கர்மா என்பது என்ன கண்ணா
அதில் நாம் உழல்வது முறை 
தானோ சொல்லு கண்ணா
கீதையில் சொன்னது அதைத்தானோ
அதை அறியும் திறனோ எனக்கில்லை 
அறியாமல் தான் கேட்கின்றேன் 
விதி வழி தானே மதியும் 
போகும் என்று சொன்னாரே 
ஆடுவதும் நீ ஆட்டுவதும் நீ  
என்றும் சொன்னாரே என்றால் 
பாவம் செய்தது நீ தானே 
அதை சுமப்பதும் உன் தன் கடன் தானே 
இது ஒரு சுமை அல்ல உன்தனுக்கு
நீயே வந்து சுமந்துவிடு நாம் சுகம் காணவே    

No comments:

Post a Comment

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.