ஆண்டவனே ஒரு முறை நான் பார்க்க வேண்டுமே
பட்டதெல்லாம் போதும் என்று கேட்கவேண்டுமே
பாத்திரத்தை ஏந்துவது எங்கள் குற்றமா
படைத்தவன் கணக்கினிலே உள்ள குற்றமோ
நெற்றிக் கண்ணனே நாம் உனது வம்சமா
எம் நெற்றியிலே எழுதியதும் உனது வேலையா
பிட்சை என்பது உனக்கு இஷ்டமானதா
பிட்சை என்பது உனக்கு இஷ்டமானதா
எத்தனை முறை அதை நாம் உச்சரிப்பது
உச்சாடனம் செய்யவது மந்திரமா
நம் இன்னல்கள் உந்தனுக்கு இன்பமானதா நீ
விளையாட துடிக்கும் எம் நெஞ்சுகள் மைதானமா
நெஞ்சு அஞ்சி தினம் தினம் செத்து மடியுதே
பரிதவிக்கும் எங்களுக்கோ ஈர நெஞ்சமே
படியளக்கும் பரமனுக்கோர வஞ்சமே
ஒழித்து வைத்த எறும்பினிற்கு உணவு தந்தாயே
பட்டினியில் வாடும் எம்மை அலைய விட்டாயே
விருந்தாளி போல நோய்கள் வந்து போகுதே
வலிமை இழந்த உடலும் வளைந்து போகுதே
பசி இன்றி வாழ ஒரு வரம் வேண்டுமே
விதியின்றி வாழ ஒரு வழி இல்லையோ
துன்பம் இன்னும் தொடரும் என்று எழுதிவிட்டாயோ
நம் பாவங்களை ஆண்டவன் நீ பொறுப்பதில்லையோ
பழி வாங்க நீ ஒன்றும் மனிதன் இல்லையே
பழி வாங்க நீ ஒன்றும் மனிதன் இல்லையே
மனித நேயம் மனிதருக்கு இருப்பதில்லையே
நாட்டில் உள்ள துன்பங்களை நீக்கிவிடு
உன் விளையாட்டை கொஞ்ச நேரம் நிறுத்தி விடு
பாவி எம்மை படுத்தாமல் வாழவிடு
எப்போதும் நல் வழியில் போகவிடு
பாவி எம்மை படுத்தாமல் வாழவிடு
எப்போதும் நல் வழியில் போகவிடு
(நதி வழி தானே ஓடமும் போகும் )
(விதி வழி தானே நாமும் போவோம் )