Thursday, March 27, 2014

கேக்கும் வரங்களை ஈந்திடவே


    

நாமகளே உனைதுதி பாட
நல்வரம் எனக்கு நல்கிடம்மா
நற்கவி மாலைநான் தொடுக்க
நாவினில் நின்றுநீ நடமாடு

மரகத வளைக்கரங்கள் விளையாட
மாணிக்கவீணை மடியினில் தவழ்ந்தாடும்
ஏழுஸ்வரங்கள் அதில்ழுந்தாடும்
எதிரினில் நின்றே சதிராடும்

ஏகவீணையில் எழும் நாதம்
ஏழுகடல் தாண்டி எதிரொலிக்கும்
பூத்தபடி உம் புகழ் பாட -இந்த
புவனம் முழுவதும் அசைந்தாடும்

பொருந்திடும் கவிகள் புனைந்திடவே-தினம்
பேரருள் கிட்டிட வகை செய்வாய்
நின்தயவில் எம்தன் நலம் பேண
நித்தமும் பணிவேன்நின் பொற்பதங்கள்

கல்வியும் கலைகளும் மிளிர்ந்திடவே
கவனம் முழுவதும்  எம்மீதே வை- உம்
கை பொம்மை ஆவேன் என்பேன்
கைகூடிடவே என் எண்ணங்கள்


.


காற்றாட கார்குழலும் சேர்ந்தாட
கண்மலர்கள் ஆட கனவுகள் மெய்பட
தண்டை கொலுசு தகதக வென்றாட-நம்
தரித்திரங்கள் யாவும் தறிகெட் டோட

மரகத பதக்கம் உம்மார்பினில்ஆட-எம்
மனமதும் செம்மையாய் மகிழ்வினில்ஆட
இடையினில் செருகிய ஒட்டியாணம்-காண
இம்மையில் இன்ப வெள்ளம் பெருகிட

கைவளை குலுங்க அபிநயிக்கும்
கரம் அபயம்என்றே அடைக்கலம்நல்க
அக்கணமே ஆவிபிரிந்திட எண்ணும்
அகமும்புறமும் ஆனந்தக் கூத்தாடும்

உச்சி ப்பட்டம் நெத்திக் குங்குமம்
உள்ளங் கவரும் கொள்ளை யழகு
கள்ளம் அற்ற புன்னகை கண்டு
கொள்ளை கொள்ளும் உள்ளம் முழுதும்


சாந்தம் பொங்கும்  சந்தன முகமும்
சிந்திடும் கருணை நாம் சிறந்திடவே
குண்டலம் ஓதும் பாமகள் காதினில்-நாம்
கேக்கும் வரங்களை ஈந்திடவே

வெள்ளை பட்டும் வேதங்கள் ஓதும்
வீணையின் நாதம் நல்வழி காட்டும்
வீற்றிருக்கும் வெண் தாமரையும்
வெற்றிகள் கிட்டிட வழி வகுக்கும்

வாணிசரஸ்வதி வாக்கினில்  உறைய
வார்த்தைகள் வந்தே வண்ணமாய்உதி
வேதனை சாதனை வேடிக்கை எல்லாம் 
வல்லகவியாய் வளர்ந்திட அருள்வாய்.

Thursday, March 20, 2014

இனியமகள் இளமதிக்கு

 

இளையநிலா வளர்கிறது
இரவினிலே ஒளிர்கிறது
 இடையிடையே தேய்கிறது
இனிமைதர உலவுறது
 

இணையநிலா வலம் வருகிறது-நல்
இதயங்களில் தவழ்கிறது
கவிதைகளும் பொழிகிறது
கைவேலை மிளிர்கிறது

அன்போடுஅறிமுகங்கள்
அழகான கருத்துரைகள் 
ஆதங்கம் ஆழ்மனதில்
அடிக்கடியே நச்சரிக்கும்

இணைய நிலா வாழ்க-நீ
இன்னலின்றி வாழ்க!
எண்ணம் எல்லாம் ஈடேறி
இனிமையாக வாழ்க!

இளையநிலா இசைவாயா
இனியமகள் இளமதிக்கு-என்
இனிய வாழ்த்தை
செப்பிடவே சென்று!


Wednesday, March 19, 2014

இரங்கவில்லை இன்னல்     இதயம் ஏங்கும்
     இனிமை கூடிவாழ
ஈ -பவரா இரப்பவரா 
     இரங்கவில்லை இன்னல்
சூழும்போது சூழும் தன்னால்
     சுழன்று வந்துசேரும் 
தீரும் விரைந்து துன்பம்
    திரும்ப வந்துசேரும்.Saturday, March 15, 2014

வேல் விழி தைத்திட சருகானேன்

             


நிம்மதி எங்கே நீ எங்கே மனம்
தீயினில் வேகுது  தின மிங்கே
அக்னியில் தோன்றிய ஆரணங்கே
ஆவி துடிக்குது பார் இங்கே

வேரற்ற மரமாய் விறகானேன் 
வேல் விழி தைத்திட சருகானேன்
காரிருள் சூழுது கண்ணொளி மங்குது
தண்ணொளி படர வா இங்கே


 தாமரை இலையில் நீரானேன்
தரையினில் துடிக்கும் மீனானேன்-உனை
தீண்டிய கண்கள் தூங்காது
தோன்றிய எண்ணம் நீங்காது

Photo: How was the episode?

வளைத்திட வேண்டின
வில் ஏந்திய விரல்கள்
வாடிடவே நின்மலர் வதனம்  
 வீழ்ந்தன துவண்டு வாள் ஓங்கிய கரங்கள்
 
அறைகூ விடும் 
நெஞ்சம் நோகிறது
நேர்விழி மெல்ல 
தாழ்கிறது
Photo: How was the episode?
நதி மீதினில் 
விழுந்த நாரானேன்
நகைப்பினிற்கு 
ஆளானேன்

கரையினில் நிற்கும் 
கொக்கானேன்
 கிரகணம் கண்ட வானானேன்
காரிகையே நீ நீங்கிடவே

 ஏங்கிடும் இதயம் 
அலைமோத
 ஓயாதொரு கணம் 
நிலையாக

பொழுதுகள் புலராமல்
பொலி விழந்தன 
 வீரம் செறிந்த புஜங்கள்
புரிய வில்லை நிஜங்கள்

நீ ஓடிய பாதையில்
உனைதேடி நாடி வந்தேன்
திருமணம் செய்யதிட 
கூடி வந்தேன்

Hemalatha Sankaran's photo.


 

Saturday, March 8, 2014

தன்னலம் இல்லா தாரகைகள்     


சர்வதேச மகளிர் தினம் வாழ்க
மகத்தான பெண்ணினமே வாழ்க
சரித்திரங்கள் படைத்திடவே விளைக
சாந்தமும் சிந்திடவே வளர்க

பெண் அடிமை போக்கிடவே எழுக
பொல்லாமை கொன்றிடவே துணிக
கல்லாமை வேண்டாம் என்க
கொடுமை இனி வேண்டாம் சொல்க

போற்றிப் புகழ்ந்திட போராடு
நேற்றைய நினைவினை நீராடு
புதிய சரித்திரம் படைத்திடு
புதுமைகளைநீ புகுத்திடு
மனிதய நேயம்
வளர்த்திடவே பெண்கள்
அவர் மகத்துவங்கள்
புரியவைக்கு முன்னர்

மண்ணையுமே பெண்மை  
என்றே சொல்வர் 
விண்ணையுமே
பெண்ணெனவே புகழ்வர்

கங்கையும் காவிரியும் பெண்ணே
கண்ணெனவே கருதிடுவர் முன்னே
கற்ற பின்னும் இன்னும் ஏன்புண்கள்
கங்கை இன்னும் காண்பதேன் கண்கள்

பாரதி கண்ட புதுமை பெண் 
புலம்புவது  இன்னும் ஏன்
போற்றிடும் பெண்ணை 
தூற்றிடும் மண்ணே காண்


அன்னை யற்ற வாழ்வு
அனல் போல அன்றோ
காதல் அற்ற வாழ்வும்
கசந்து போகும் அன்றோ

அன்பும் அமுதும்
ஊட்டி வளர்ப்பவள்
கண்ணெனவே அன்னை
எண்ணி வளர்ப்பவள்

மனைவி காதலை 
கண்களில் கருதி 
வளர்ப்பவள் கருத்துடன் 
கடமை காத்து நிற்பவள்

சக்தியும் யுக்தியும்
கொண்டவரே சரித்திரம்
படைத்தும் நின்றவரே
சித்திகள் யாவும் கண்டவரே


 ஆட்சியில் அமர்ந்தாள்
அன்பினை சொரிந்தாள்
பெண் ஆயுதம் ஏந்தி 
போர்க்களம் புகுந்தாள்

 


விண்ணிற்கும் விஜயம் 
விரும்பியே செய்தாள்
வண்ணமாய் வீட்டிலும்
வளையவே வந்தாள்

 சிவமும் சக்தியும் சரிபாதி 
இதுவே உலகின் பொது நீதி
ஆடவர் உறு துணைஅருள்நீதி
ஆற்றிடும் சேவையில் வரும் நீதி

 அறிவினை ஊட்டிடிட்ட ஔவையும்
அன்பினை தந்திட்ட அன்னை 
தெரசாவும் கண்ணான காரிகைகள்
தன்னலம் இல்லா தாரகைகள்

மண்ணும் பொன்னும் மின்ன
பெண்ணே வேண்டும் கண்ணே
கண்ணை குத்து முன்னம் 
எண்ணிபாரு முன்னே

மங்களம் பொங்கும்
மங்கை மனம் கோணாத
வாழ்வில் திங்களை
போலவே திகழ்வாள் என்றும் !

சர்வதேச மகளிர் 
தினத்தை முன்னிட்டு
 அனைத்து பெண் மணிகளுக்கும் என் 
மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்....!