Saturday, January 26, 2013

உயிரே உயிரே


 

 
 உயிரே உயிரே ஒரு நாளும் எனை பிரியாதே  
பிரிந்திருந்தால் என்னுயிரோ ஒரு கணம் தரியாதே
எந்தன் உயிர் எந்தனுக்கே சொந்தமில்லை தெரியாதோ  
உன்னுறவு இருக்கும் வரை என்னுயிரும் நிலைபெறுமே ;
(அதனால் உயிரே )
 முதல் இருந்தால் ஒரு முடிவிருக்கும் 
இரவிருந்தால் ஒரு பகல் இருக்கும் 
நீர் இருந்தால் ஒரு நிலம் இருக்கும்  
நீ இருக்கும் வரை தானே உன் நிழலும் இருக்கும் ;
(அதனால் உயிரே)
 நிலவில்லாத இரவா பகலவன் இல்லாத பகலா  
மலர்கள் இல்லாமல் நந்தவனம்மா
மகுடம் இல்லாத மன்னவனா  
வெறுமை தானே நிஜமா நிம்மதி அங்கு வருமா 
(அதனால் உயிரே )
  பார்வை இல்லாத விழிகள் பருவம் இல்லாத வருஷம் 
உணர்வே இல்லாத உடலும் இரக்கம் இல்லாத இதயம்
காற்றே இல்லாத உலகம்  
இருந்தால் என்ன பயனோ நீ இல்லாத வாழ்வில் நானோ
;(அதனால் உயிரே )
 உறவுகள் அனைத்தும் பிரிந்தாலும் 
என் உணர்வுகள் எல்லாம் ஒழிந்தாலும்
உலகம் முழுவதும் அழிந்தாலும் 
உன்னுயிருடன் என் உயிர் கலந்திருக்கும்   
இறுதி வரையில் சேர்ந்திருக்கும் 
இறந்த பின்பும் தொடர்ந்திருக்கும்  
வானில் ஒன்றாய் பறந்திருக்கும்

நம் உறவுகள்  தொடர்கதையே  
நம் உயிருக்கு விதிவிலக்கே 
(அதனால் உயிரே )

Sunday, January 13, 2013

நடப்பது நடக்கட்டும்

கொட்டும் மழை கொட்டட்டும்
விழியில் இமை வெட்டட்டும்
விட்டால் பிழை திட்டட்டும்
நொந்தால் மனம் ஆறட்டும்
அழகான முருகன்

 
நீ அழகான முருகன் தான் என்றும்
அதை மறுப்பவர் இங்கு இல்லை யாரும்
நீ இளங் குமரன் தான் என்றும்
அதில் எப்போதும் இல்லை சந்தேகம்.
(நீ )
ஆறுபடை வீடுண்டு முருகா உனைசுற்றி
அழகான குடும்பமும் உண்டு.
அங்கங்கு குடியேற குன்றுஹளும் உண்டு

நல் இதயங்களும் ஏராளம் உண்டு .
இருந்தாலும் ஏன் இங்கு வந்தாய் .
இந்த நல்லுரீல் ஏன் தங்கி நின்றாய் .
அது நல்ல ஊர் என்பதால் தானோ?
(நீ )
ஆறு காலப்  பூஜை உனக்காகவில்லையோ ?
அபிசேகம் ஆராதனை செய்யவில்லையோ?
ஆறுமுகம் உனக்குண்டு ஐயா இதில்
பாரா முகம் உனக்கெங்குண்டு ஐயா?
பன்னிரு கரங்கள் உண்டு ஐயா அதில்
ஒன்றேனும் உதவவேன் வரவில்லை ஐயா ?
மக்கள் வேதனை தீர்க்கவே வந்திங்கு உதித்தாய் .
(நீ )
வேலுண்டு வினை தீர்க்க தானே அந்த
வேலுக்கு வேலை ஏன் நீ கொடுக்க மறந்தாய் ?
நீ தேரிலே ஊருலா வந்தாய் நம் ஊர்களை, 

நாட்டினை ஏன் காக்க மறந்தாய்.சூரனை 
வென்ற சுடர் தானே முருகா நீ எமை
சுட்டெரிக்கும் போது சும்மா ஏன் இருந்தாய்
.இந்த அவலங்கள் யாவும் நீ அறியாயோ முருகா
.(நீ )
கும்பகர்ணனைப்போல தூங்கினாயோ
உனக்கு திருப்பள்ளி எளுச்சியும் கேட்கவில்லையோ
தூங்காதே இன்னும் துயர் கூடும் இங்கே.
தீராத பழியை தேடாதே என்றும் 

நீ செய்தாலும் கூட அது பாவம் தானே.
நீ எங்கு போவாய் பாவத்தை தீர்க்க மனிதரைப்

போல பழி தீர்க்க வேண்டாம்.
 
(நீ )
சீ சீ இதனை எங்கு கற்றுக் கொண்டாய்.
உன் அப்பனா சொன்னது இந்தப் பாடம்.
இயற்கைக்கும் நம் மீது ஏன் இந்த சீற்றம்.
அத்தனை பாவம் செய்ததா நம் பூமி.
உன் திருப்பாதம் பட்டால் தீருமே
அந்தப் பாவம். ஏன் இன்னும் தாமதம்
இன்னுமா தீரவில்லை உன் திருகோபம்.
(நீ )

அன்னைய ரின் துயரம்

அன்னையர்கள் செய்த தியாகம் கொஞ்சமோ
அவர் அணிந்த்திருகும் தாலி என்ன சின்னமோ
அவர் அடி வயிறு நொந்ததென்ன உண்மையோ
அடிமை வாழ்கை பெண்களுக்கு தேவையோ
அவர்கள் அர்த்தநாரிஸ்வரர் இல்லையோ
( அன்னை )
அன்பில்லாத கணவனிடம் தஞ்சமோ
அவரை ஆட்டிபடைக்கும் அந்த நெஞ்சமோ இருந்தும்
அவர் அன்புக்கு இல்லையே என்றும் பஞ்சமே
அவர் விட்ட கண்ணீர் உனக்கு வெல்லமோ
வாழ்கை இது வாழ்வதற்கு இல்லையோ
(அன்னை)
அதில் நீர் என்றும் விளையாடல் ஆகுமோ
இந்த நிலை இன்னும் எங்கும் தொடருமோ
இந்த முனேற்ற நாட்களிலும் வளருமோ
பிதாமஹர்கள் மனம் வைத்தல் மாறுமே
இதற்கு முற்றுபுள்ளி வைத்துவிடல் வேண்டுமே
(அன்னை )
ஈருடல் ஒருயிராய் வாழவேண்டும் அல்லவோ
அன்பு தனை சொரிந்து விட்டால் துன்பமோ
நல்ல சந்ததிகள் பெருக வேண்டுமல்லவோ
பொருளை விட புகழை விட நிம்மதி தான் வேண்டும் அல்லவோ
அதை விலை கொடுத்து யாரும் வாங்கிடலாமா.
(அன்னை )