Monday, September 7, 2015

என்நாவில் வந்துகுடி ஏறு!


ஒன்றில் நான்கு


  
பஃ றொடை
மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
மென்மொழியே!  ஈடில்லாத் தென்மொழியே! - இன்பமுடன்
உன்னோடு காலமெலாம் ஒன்றி உறவாடச்
சின்னஞ் சிறுகிளியே! சித்திரமே! - அன்னையே! 
என்நாவில் வந்துகுடி ஏறு!



நேரிசை

மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
மென்மொழியே!  ஈடில்லாத் தென்மொழியே! - இன்பமுடன்
உன்னோடு காலமெலாம் ஒன்றி உறவாட
என்நாவில் வந்துகுடி ஏறு!



சிந்தியல் வெண்பா

மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
மென்மொழியே!  ஈடில்லாத் தென்மொழியே! - இன்பமுடன்
என்நாவில் வந்துகுடி ஏறு!



குறள் வெண்பா



மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழே! 
என்நாவில் வந்துகுடி ஏறு!




பஃ றொடை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசை வெண்பா வர வேண்டும்!
நேரிசை வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
நேரிசைச் சிந்தியல் வெண்பா வர வேண்டும் !
நேரிசைச் சிந்தியல் வெண்பாவின் ஈற்றயல் அடியை நீக்க
குறள் வெண்பா வர வேண்டும் !



33 comments:

  1. மின்னுமொளி மன்னுபுகழ் மேகமழைத் தண்டமிழ்
    தங்கள் நாவில் வந்துகுடியேறி
    நிலையாய் அமர்ந்து
    ஆண்டுகள் பல கடந்துவிட்டன சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி !சகோ தங்கள் முதல் வரவுக்கும் இனிய கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன் ...!

      Delete
  2. வணக்கம் சகோதரி
    தொடர்ந்து புதிய விசயங்களை செய்யும் மூளைதான் இளமையாக இருக்கும் ..உங்களிடம் இருந்து கற்க நிறைய இருக்கிறது
    வாழ்த்துகள்
    தொடருங்கள்

    ReplyDelete
    Replies
    1. அட அப்படிய சகோ நான் இளமையாக வந்திடுவேனா அப்போ சரி சரி நான் இனி புதிது புதிதா எதையவாது செய்கிறேன். ஐயையோஅப்புறம் வலைப் பக்கமே வராம விட்டிடப் போகிறீர்கள் சகோ. ஹாஹா... என்ன சகோ நான் சும்மா.... காடு வா வா என்கிறது வீடு போ போ என்கிறது அப்புறம் என்னத்தை... இல்ல ம்..ம் மிக்க நன்றி !வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்திற்கும்.

      Delete
  3. உங்களது பதிவுகளைப் படிப்பதன்மூலமாக பல புதிய இலக்கண உத்திகளையும் பயன்பாடுகளையும் அறியமுடிகிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும் !

      Delete
  4. அன்புள்ள சகோதரி,

    உன்நாவில் வந்து உவகையுடன் வீற்றிடுவாள்

    என்தமிழாள் போற்றிப்பா டு.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும் !

      Delete
  5. உங்கள் எழுத்தில் குடியேறி நாளாகிவிட்டதே தோழி! :)
    இனிமை!

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா தேனு நலம் தானே! நன்றிம்மா இனிய கருத்திற்கு.

      Delete
  6. Replies
    1. மிக்க நன்றி ! சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும் !

      Delete
  7. உங்கள் பதிவின் மூலம் நிறைய இலக்கணங்களை தெரிந்து கொள்ள முடிகிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி ! சகோ வரவுக்கும் வாழ்த்திற்கும் !

      Delete
  8. நானும் இப்போதே பதிந்து விட்டு வந்தேன். இரண்டு நாட்கள் விடுப்பில் இருந்ததால் தாமதம் எழுத எனினும் தங்களுடன் பதிவிட்டதில் கூடுதல் மகிழ்வே வாழ்த்துக்கள் தோழி. கலக்குங்க.

    ReplyDelete
    Replies
    1. அட நான்தான் பார்த்து கருத்து இட்டுவிட்டேனே ஹா ஹா
      அசத்தல் மா ..... தங்கள் அளப்பரிய ஆற்றல் என்னை மிகவும் கவர்கிறதும்மா அதனால் நானும் சும்மா முயற்சி செய்கிறேன். அவ்வளவே தங்கள் வருகையும் இனிய கருத்தும் மகிழ்வில் ஆழ்த்துகிறது நன்றி தோழி !

      Delete
  9. நாவிற் குடியேறி நல்லாட்சி செய்கின்றாள்!
    பாவில் இனிக்கின்றாள் பார்!

    அவளருள் கேட்டதும் கிடைத்திருக்கிறதே உங்களுக்கு!

    அழகு ரசம் சொட்டச்சொட்ட அருமை வெண்பாக்கள்!
    உளமார்ந்த வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் என் அன்புத் தோழியே இனிய கருத்தினால் உள்ளம் நிறைகிறது. தங்கள் ஆற்றல் என்னையும் தொற்றிக் கொள்ள நான் செய்யும் சிறு முயற்சியே. தங்கள் வாழ்த்து என் பேறு. அது தங்களுக்கே உரிய நற்பண்பையும் பெருந்தன்மையையுமே காட்டுகிறது வேறொன்றும் இல்லைம்மா. நான் இன்னும் வெகு தூரம் கடக்க இருக்கிறது அனைவருடைய துணையுடனும். மிக்க நன்றிம்மா வரவுக்கும் வாழ்த்திற்கும் ..! வாழ்க வளமுடன் ...!

      Delete
  10. வாழ்த்துகள்
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா! தங்கள் அளப்பரிய செயல் கண்டு சொக்கிப் போகிறேன் ஐயா. எத்தனை பெரியவர்கள் நீங்கள் கண்நீர் மல்க நன்றி மட்டும் தான் சொல்லிப் போகிறேன். வாழ்க வளமுடன் ..!

      Delete

  11. வணக்கம்!

    அன்னைத் தமிழின் அருள்!

    பஃறொடை வெண்பா!

    என்னாவில் வந்துகுடி ஏறென்[று] இசைத்துள்ளீர்!
    பொன்பாவில் பாடிப் புகழ்ந்துள்ளீர்! - இன்புற்றேன்!
    உன்பாவில் உள்ள உயர்வெண்ணி வாழ்த்துகிறேன்!
    இன்பாவில் என்றும் விளையாடு! - மின்னிவரும்
    அன்னைத் தமிழின் அருள்!

    நேரிசை வெண்பா

    என்னாவில் வந்துகுடி ஏறென்[று] இசைத்துள்ளீர்!
    பொன்பாவில் பாடிப் புகழ்ந்துள்ளீர்! - இன்புற்றேன்!
    உன்பாவில் உள்ள உயர்வெண்ணி வாழ்த்துகிறேன்!
    அன்னைத் தமிழின் அருள்!

    சிந்தியல் நேரிசை வெண்பா

    என்னாவில் வந்துகுடி ஏறென்[று] இசைத்துள்ளீர்!
    பொன்பாவில் பாடிப் புகழ்ந்துள்ளீர்! - இன்புற்றேன்!
    அன்னைத் தமிழின் அருள்!

    குறள் வெண்பா

    என்னாவில் வந்துகுடி ஏறென்[று] இசைத்துள்ளீர்!
    அன்னைத் தமிழின் அருள்!

    கவிஞர் கி. பாரதிதாசன்
    தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா! வாருங்கள். ஒன்றில் நாலிலேயே இனிய கவிதை இயற்றி வாழ்த்தியமைக்கு நன்றிகள் ஐயா.
      தங்கள் வாக்கும் வாழ்த்தும் பலிக்க வேண்டும். அதற்கு தங்கள் ஆசிகள் என்றும் எனக்கு கிட்டிட வேண்டும். மிக்க நன்றி ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும் ..!

      பாவரசர் பாட்டெல்லாம் பைந்தமிழ் சோலைதான்
      நாவாரப் பாடும் நயந்து!

      Delete
  12. வணக்கம்,
    அழகுமின்னும் பாக்கள் அரங்கேற்றும் பாமகளே
    அதிசயத்து நின்றேன் நான்
    அருமை அருமை வாழ்த்துக்களம்மா
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் மகிம்மா! என்னம்மா நான் உங்களைப் பார்த்து அதிசயிக்கிறேன். நீங்கள் என்னையா ம்..ம் பேராசிரியர் நீங்கள் தமிழைக் கரைத்துக் குடித்தவர் தாங்கள் அல்லவா நான் எல்லாம் எம்மாத்திரம் நன்றிம்மா வருகைக்கும் கருத்துக்கும் .

      Delete
  13. இனிமை!
    அருமை...
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தாத்தா !
      என்ன தவம் செய்தேன் தாத்தா தங்களைப் போன்றோர் ஆசி பெற. மகிழ்ச்சியில் துள்ளுகிறது நெஞ்சு. மேலும் எழுத ஆவல் பல மடங்கு பெருகிறது தாத்தா. எத்தனை இனிமையாக நாலு ராகத்தில் பாடி அசத்திவிட்டீர்கள். எப்படி நன்றி சொல்வது என்று தெரியாமல் தவிக்கிறேன்.நன்றி நன்றி ! வாழ்க வளமுடன் ...!

      Delete
  14. ஓ! ஆசானின் மாணாக்கர்கள் எல்லோரும் வீட்டுப்பாடமா!!!!! அருமை அருமை! உங்களிடம் ஏற்கனவே சரஸ்வதி தேவி குடி கொண்டு இருக்கின்றார்...! நிரந்தரமாகவே இருப்பார் சகோதரி! உங்கள் எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொண்டு வருகின்றோம்....நீங்கள், இனியா, தென்றல் சசிகலா, கவிஞர், அம்பாளுக்கடியாள், விஜு அவர்கள் எல்லோரும் எங்கள் ஆசிரியர்களாகின்றீர்கள்! தொடருங்கள் உங்கள் பணியை...நாங்களும் கற்றுக் கொள்கின்றோம்....ஆனால் என்ன உங்களைப் போல வீட்டுப்பாடம் எல்லாம் எழுதுவதில்லை...அஹஹஹ்

    ReplyDelete
  15. அருமை!பாவலர்கள் அனைவரும் தமிழுக்கு மகுடம் சூட்டுகிறீர்கள்

    ReplyDelete
  16. வாழ்த்துகள் சகோ தாத்தா பாடிக்கேட்டேன்

    ReplyDelete
  17. இனியாவின் இனிய தமிழ் வெண்பாக்களின் சுவை அறிந்தேன்! அருமை தோழி!

    ReplyDelete
  18. வணக்கம் சகோ !

    பஃறொடை வெண்பா
    ......................................

    இனியா எழுதும் இலக்கணப் பாக்கள்
    நனிகூர் அறிவின் நளினம் - கனிபோல்
    இனிக்கும் கருத்தும் இயற்றமிழ் சாற்றும்
    தனித்துக் கொடுக்கும் தகைமை விளைக்கும்
    புனித மொழியின் புகழ் !

    நேரிசை வெண்பா
    ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

    இனியா எழுதும் இலக்கணப் பாக்கள்
    நனிகூர் அறிவின் நளினம் - கனிபோல்
    இனிக்கும் கருத்தும் இயற்றமிழ் சாற்றும்
    புனித மொழியின் புகழ் !

    சிந்தியல் வெண்பா
    .................................
    இனியா எழுதும் இலக்கணப் பாக்கள்
    நனிகூர் அறிவின் நளினம் - கனிபோல்
    புனித மொழியின் புகழ் !

    குறள் வெண்பா

    இனியா எழுதும் இலக்கணப் பாக்கள்
    புனித மொழியின் புகழ் !

    அருமை அருமை சகோ தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
  19. மரபுக் கவிதையின் மாண்பை எவ்வளவு எளிமையாக விளக்கிவிட்டீர்கள்! தலை வணங்குகிறேன் தங்கள் தமிழுக்கு. அத்துடன், பிரான்சிலிருந்து உங்களோடு போட்டிபோடும் வண்ணம் பின்னூட்டக் கவிதை யாத்துள்ள கவிஞர் பாரதிதாசன் அவர்களுக்கும் என் வணக்கங்கள். - இராய செல்லப்பா சென்னை

    ReplyDelete
  20. வணக்கம்
    அம்மா

    என்ன விளக்கம் படித்த போது தலை சுற்றி விட்டது... அற்புதமாக உள்ளது தொடருங்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.