Saturday, August 15, 2015

பொன்னும் பொருளும் எதற்கு?
Image result for babies images

அன்பும் அறனும் அணிகலன் ஆகுமெனில் 
பொன்னும் பொருளும் எதற்கு?

ஆடையைத் தேர்ந்தெடுத்[து ஆசையுடன் தான்அணிய
கோடையே  நன்றெனக் கூறு !

நடையழகும் பெண்ணின் உடையழகும் வெல்லும்
படையழகு பெற்ற படைப்பு!

ஈவும் இரக்கமும் இல்லையெனில் உன்வாழ்வு
மேவும் துயரை விரைந்து!

உலைகொதிக்கும் சோறுபோல் உள்ளம் கொதிக்க
நிலையிழந்தேன் துன்பம் நிறைந்து!

ஊளையிட்டு நின்றாலும்  உன்றன் உயிர்வினை
காலைத் தொடரும் கனத்து!

எல்லாம் அவன்செயல் என்றெண்ணி நீமுயற்சி
இல்லா  திருந்தால் இழப்பு!

ஏற்றம் பெறவேநீ என்றும் அருந்தமிழைக் 
கற்க முயன்று களி!

ஒருபொழுதும் தீமையை ஒட்டி நடவா[து] 
இருந்தால் இலையே இடர்  

ஓடும் நதியும் உறைந்திடும் காலமுண்டு!
ஆடும் அகத்தை அடக்கு!

கலைகளைக் கண்டுகளிக்கக் கண்ணிரண்டு போதா 
விலையிவைக் குண்டோ விளம்பு?

காலம் விரைந்திங்குக் காணாமல் போகிறது!
ஓலமிடும் முன்னே உணர்!

சாவும் வருவது சத்தியம் என்றிங்கு 
நோவும் உரைக்குதே நொந்து !

தாளம் அறியாமல் தானே பெரிதென்று
மேளத்தைத் தட்டுதல் வீண்!

வீட்டுக்குள் நல்லொளி வேண்டா திருந்தால்நம்  
கூட்டுக்குள் இல்லை கொதிப்பு!

சாடும் குணங்கள் சரித்திரத்தில் வேண்டாமே!
பாடும் பணிவைப் பருகு!

கோடிட்டு வாழக் குறையொன்றும் வாரா!நற் 
பாடிட்டு வாழ்தல் பயன்!

58 comments:

 1. வணக்கம் தோழி!

  வல்லமை கொண்டு வடித்த குறள்களெலாம்
  சொல்லட்டும் உன்பெயரைத் தொட்டு!

  வீச்சுடன் தந்திட்ட வெல்லக் குறட்பாக்கள்!
  பேச்சுக்(கு) இடமில்லை பின்!

  ஊற்றெடுத்துப் பாய்கிறது உன்னருமைப் பாக்களே!
  காற்றிலும் வாசமே காண்!

  அழகான, அருமையான குறட்பாக்கள் தந்தீர்கள் தோழி!
  மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
  மரபில் கலக்கப் போகின்றீர்கள் போலுள்ளதே!..
  தொடருங்கள்!..

  உளமார்ந்த வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் என் அன்புத் தோழியே முதல் வருகை கண்டு உள்ளம் பூரித்து விட்டது. அருமையான குறள்களால் குளிப்பாட்டி விட்டீர்கள் என்னை. இன்னும் தங்கள் ஆசியில் மேலும் வளர்வேன்.

   மிக்க நன்றிம்மா ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள்ம் மா !

   Delete
 2. குறட்பாக்கள்
  அருமை
  இனிமை
  நன்றி சகோதரியாரே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 3. ஆகா...! ரசித்தேன் பலமுறை... வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 4. புதுக்கோட்டையில் நடக்கவிருக்கும் மாபெரும் வலைப்பதிவர்கள் சந்திப்பு விழாவின் வருகையை பதிவு செய்ய :

  http://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Tamil-Writers-Festival-2015-1.html

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ! அழைப்பிற்கு. ஆவலாகவே உள்ளது அனைவரையும் காண கலந்து கொள்ள. என்ன செய்வது. அனைவரையும் வாழத்த மட்டுமே முடிகிறது விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள் ...!

   Delete
 5. ஆஹா!
  இதையா அதையா இனிதென்றுக் கூற
  எதையும் விடுதல் பிழை

  அத்தனையும் அருமை அன்புத் தோழி! வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிம்மா தேனு! வருகைக்கும் இனிய கருத்துக்கும்.

   Delete
 6. ஆகா ஆகா அருமை சகோ...
  முத்திரை பதிக்க துவங்கிவிட்டீர்களே

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 7. மனதில் பதிந்துவைத்துக்கொள்ள வேண்டியவை. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 8. ஆஹா! அத்தனையும் முத்துக்கள்.
  என்னென்று சொல்வேனோ என்தோழி பாகண்டு
  மின்னிடும் பாக்கள் மிளிர்ந்து.
  வாழ்த்துகள் தொடர்ந்து மரபில் எழுத வாழ்த்துக்கள் பா.

  ReplyDelete
  Replies
  1. வாங்கம்மா தோழி! என்னம்மா உங்களை விடவா தோழி எழுதிவிட்டேன். தங்கள் பரம ரசிகை ஆகிவிட்டேன் இப்போ எல்லாம் நான். மிக்க நன்றிம்மா இனிய கருத்துக்கும் வருகைக்கும் .

   Delete

 9. வணக்கம்!

  தீட்டிய பாக்கள்! செழுந்தமிழ்த் தேனமுதை
  ஊட்டிய பாக்கள்! உயர்நெறியைக் - காட்டிய
  வல்ல இனியா வடிக்கும் அடியெல்லாம்
  நல்ல நதியின் நடை!

  கவிஞர் கி. பாரதிதாசன்
  தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு

  ReplyDelete
  Replies
  1. வாங்கையா தங்கள் வருகை உவப்பே. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காண்பதில் அளவு கடந்த மகிழ்ச்சியே. தொடர்ந்து தங்கள் ஊக்கத்தை அளிக்க வேண்டுகிறேன். இனிய வெண்பாக் கருத் தளித்து ஊக்கப் படுத்தியுள்ளீர்கள் மிக்க நன்றி ! வாழ்த்துக்கள் ..!

   Delete
 10. சில குறள்களில் பொருட் குற்றம் இருப்பது போல் தெரிந்தது. .எனக்கேன் வம்பு.

  ReplyDelete
  Replies
  1. வாங்கையா தாங்கள் சொல்லும் பொருட் குற்றம் யாதென்று கூறினால் தானே அதை ஆராய உதவியாக இருக்கும் ஐயா. எல்லோரும் எல்லாம் தெரிந்தவர்கள் இல்லை தானே. சுட்டினால் மேலும் கற்றுக் கொள்வேன் எனக்கு ஒன்றும் புலப்படவில்லை தெரியப் படுத்தினால் சிந்திப்பேன். நன்றி வருகைக்கும் கருத்துக்கும். வாழ்த்துக்கள் ...!

   Delete
 11. குறள்பாக்கள் அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 12. வணக்கம்
  அம்மா
  குறள் பாக்கள் சிறப்பாக உள்ளது இரசித்தேன் அம்மா.. மேலும் தொடருங்கள்...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி ரூபன் ! வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 13. வணக்கம்,
  தங்கள் ஆக்கம் அத்துனையும் அருமை,
  அது என் எண்ணிக்கை,,,,,,,, இதில் ஏதும் உட்பொருள் இருக்காம்மா,,,,,,,,,,
  பாமரராய் பயந்துபோய் கேட்கிறேன்.
  வாழ்த்துக்களம்மா,,,,,,,,,,

  ReplyDelete
  Replies
  1. என்னம்மா இப்படி பயப் படுத்துகிறீர்கள். என்னாச்சு. என்ன பயம் என்ன எண்ணிக்கை என்ன உட்குத்து ம்..ம்..ம் வெளிப்படையாகவே கேட்கலாம் தோழி ஒன்றும் பிரச்சினை இல்லை ok வா ஹா ஹா ...

   ஐயடா இந்தப் பேராசிரியருக்கு என்ன தோணிச்சோ தெரியலையே.........ஏதும் தப்பா எழுதிட்டனோ ...ம்..ம் சா சா ... இருக்காது ..பார்க்கலாம்.

   Delete
 14. அருமை சகோ அத்தனையும் அருமை வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 15. மனனம் செய்துகொண்டிருக்கிறேன்....ஆங்...அனைத்தும் arumai

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! முதல் வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 16. சிவகுமார் அண்ணா எழுதுவதை போன்ற மிக அழகான குறள்கள். அசத்திடீங்க செல்லம்.

  செல்லமே நீவடித்த வெண்பாக்கள் அத்தனையும்
  வெல்லமே என்பேன் மகிழ்ந்து! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க அம்மு ! நீண்ட நாட்களின் பின்னர் காண்பதில் அளவு கடந்த மகிழ்ச்சி ....ம்மா இனிய கருத்து வேற .....குறள் வெண்பாவும் அருமைம்மா ! அசத்துங்க அம்மு மேலும்! மிக்க நன்றி வாழ்த்துக்கள் ..!

   Delete
 17. கவி மழை.. கன்னித் தமிழில் காவியத் தேன் மழை!..

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 18. கவிதையை ரசித்து படித்தேன் சகோ.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 19. நவீன குறள்களை படித்து ரசித்தேன் !

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 20. அன்புள்ள சகோதரி,

  குறள்கள் அனைத்துமே குன்றின் விளக்கே!

  அறங்களைப் பாடும் புகழ்.

  நன்றி.
  .

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ !எப்படி நலம் தானா இப்போ கொஞ்சம் தேவலையா சகோ ! வருகைக்கும் கருத்துக்கும் .வாழ்த்துக்கள் ....!

   Delete
 21. தன்க்காக அல்ல! பொன்னும் பொருளையும் சந்தோஷப்படுத்தத்தான் (அவைகளை மிகவும் மதித்து) மனிதன் அவைகள் பின்னால அலைகிறான், இனியா! :))
  ------------------------
  ஒரு வழியாக திருவள்ளுவர் இல்லாத குறையைத் தீர்த்துட்டீங்க! :)

  ---------------------

  எனக்கு ஒரு சந்தேகம்..

  திருவள்ளுவரும் அறியாமையில், அகந்தையில் வாழ்ந்து ..ஆடி அடங்கி ..திருந்திய பின் தான் திருக்குறள்களை எல்லாம் எழுதியிருப்பாரோ?? :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க வருண் என்ன செய்வது ம்..ம்..ம் ஒரே ஓட்டம் தான் என்னத்துக்கு ஓடுகிறோம் இப்படி. அர்த்தம் இல்லாத ஒரு பெரும் ஓட்டம் என்று எண்ணத் தோன்றும் பல வேளைகளில் ஆது வும் அரைச் சாண் வயிற்றுக்காகவா. இல்லை ஆடை அணிகலன்களுக் காகவா என்று தோன்றும். ஆனால் பாருங்கள் ஆடை அணிகலன் எதுவும் தேவை அற்ற விலங்கினங்களும் ஓடிக் கொண்டு தானே இருக்கிறது வாழ்கையின் எல்லைவர. எல்லாம் மாயையே நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.
   நீங்கள் சொல்வது போல திருவள்ளுவரும் பட்டுத் தான் எழுதியிருப்பாரோ என்னமோ? அல்லது சம்பந்தர் போல ஞானப் பால் உண்டாரோ, ஞானோதயம் பெற்றாரோ யார் கண்டா எல்லாம் அந்த ஆண்டவனுக்குத் தான் வெளிச்சம் ...ஹா ஹா ரொம்ப எழுதிட்டனோ. சரி இது போதும் தானே .....

   \\\ஒரு வழியாக திருவள்ளுவர் இல்லாத குறையைத் தீர்த்துட்டீங்க! :)//// ஐயடா பாவம் அந்த மனுஷன் இருந்திருந்தா அவர் நிலைமையை நினைத்துப் பார்கிறேன். அம்மாடி.... ஏற்கனவே தெரிஞ்சிடுச்சு போல அதான் தப்பிட்டார் ......ஹா ஹா ...
   ரொம்ப நன்றி சகோ! வருகைக்கும் கருத்துக்கும் .

   Delete
 22. வணக்கம் அம்மா.

  சற்று வேலைப்பளு.

  தாமதமாக வருகிறேன். பொறுதிடுங்கள்.

  நல்ல குறள்வெண்பா நாடி நலமெழுக!
  சொல்லத் தளைநிறுத்திச் சீர்பெருக! - வெல்லுபடை
  வீர அணிவகுப்பில் வெற்றித் திலகமிட
  தீரத் தமிழ்வரு வாள்!

  வணக்கமுடன் வாழ்த்துகள்.

  நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்கையா ! அதனால் என்ன வந்து விட்டீர்களே அதுவே போதும் பெருமகிழ்ச்சிக்கு. நலம்நாடித் தந்த குறள் வெண்பாவால் உளம் நிறைந்தது. தங்கள் வருகை பெரும்பேறே. மிக்க நன்றி ! வருகைக்கும், வாழ்த்திற்கும், தொடர்வதற்கும்.

   Delete
 23. குறள்கள் அனைத்தும் அருமை. மரபிலும் கலக்குகிறீர்கள் இனியா! பாராட்டுக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி தோழி! வருகைக்கும் இனிய கருத்திற்கும்.

   Delete
 24. Replies
  1. மிக்க நன்றி! ஐயா வருகைக்கும் கருத்திற்கும் .

   Delete
 25. அன்பும் அறனும் அணிகலன் ஆகுமெனில்
  பொன்னும் பொருளும் எதற்கு?
  நல்ல கேள்வி

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.வலைப்பூ பற்றி அறியத் தந்தமைக்கும் நன்றி! நிச்சயம் தொடர்கிறேன்.

   Delete
 26. இனிமைத் தமிழ்ப் பா. ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி! :)

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள்! கீதா! முதல்வருகை கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தேன். . மிக்க நன்றி! வருகைக்கும் ரசித்தமைக்கும். தொடருங்கள் தொடர்கிறேன் ...!

   Delete
 27. தெளிந்த நடையில் தேர்ந்தெடுத்த சொற்களால்
  பாக்கள் அமைத்தாய் பகிர்ந்து.

  ReplyDelete
  Replies
  1. அழகுசொற்கள் கொண்டே அணைத்தாய் இனிமேல்
   பழகுவேன் என்றும் பணிந்து !

   மிக்க நன்றி! வருகைக்கும் கருத்திற்கும்

   Delete
 28. அட! அருமையான நவீன குறள்கள்! அருமை சகோதரி வாசித்து வியந்தோம்! திருவள்ளுவரிணி என்று கொள்ளலாமா??!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சகோ ! அட இது என்ன சோதனை அப்படியென்றால் ஹெல்மட் வங்கிப் போடணும் போல.... இல்ல. அடி வாங்கித் தராம விடமாட்டீங்க போல இருக்கே ஹா ஹா ...மிக்கநன்றி சகோ ! வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
 29. வணக்கம் சகோ !

  நற்பாக்கள் ஊட்டும் நயம்கண்டேன் மெய்யுருக்கும்
  பொற்பாக்கள் என்பேன் புகழ்ந்து !

  அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் சகோ வாழ்க வளமுடன்

  ReplyDelete
 30. வாங்கையா வாங்க என்ன அதிசயமா இந்தப் பக்கம். எப்படி நலம் தானே!
  ம்... ம்.ம் இப்பவாவது வந்தீர்களே. புரிகிறது நேரமின்மை காரணம். இருந்தாலும் காணவில்லை என்ற ஆதங்கத்தில் சொன்னேன். நேரம் கிடைக்கும் போது தானே வரமுடியும். மிக்க மகிழ்ச்சியே நீண்ட நாட்களின் பின் தரும் வருகையும் பின்னூட்டமும் கண்டு! அப்போ எப்ப கவிதை தரப் போகிறீர்கள். ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
  மிக்க நன்றி ! வாழ்க வளமுடன் ..!

  ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.