அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அது ஏன் எனக்கு மட்டும் விதிவிலக்கா... என்ன ? ( பட உதவிக்கு கூகிளுக்கு நன்றி !) |
அன்னிக்கு ஒரு நாள் என் வீட்டுக்கு அருகாமையில் உள்ள வாசிகசாலைக்கு சென்றேன். தமிழ்நூல்கள் ஏதும் இருக்கிறதா என்று தேடிப் பார்த்தேன். அப்போது ஒரு பகுதியில் அரைவாசிக்குமேல் இரண்டு மூன்று தட்டுகளில் தமிழ் புத்தகங்கள் அடுக்கி இருக்க கண்டு ரொம்ப ஆர்வத்தோடு எனக்கு பிடித்த புத்தகங்கள் இருக்குமா என்று தேடிப்பார்த்தேன் . அப்போது இரண்டு மூன்று நூல்கள் அகப்பட அதை எடுத்து வந்து வாசித்தேன். அதில்
கணக்குப் பண்ணுவோம் வாங்க .........என்று இருந்தது
அட இதென்ன அப்படி என்ன கணக்குப் பண்ணப் போறாங்க என்று ஆர்வத்தோடு நானும் வாசித்து பார்த்தேன். அட இது இப்ப ரொம்ப அவசியம் என்று எனக்கு தோன்றிற்று உங்களுக்கும் தோன்றலாம். ஆனால் ஆச்சரியமாக இருந்தது. அது தான் பகிரலாமே என்று எண்ணினேன். அட அலட்டாம விடயத்திற்கு வா என்கிறீர்களா? சரி சரி இதோ.....
அது வேறு ஒன்றுமில்லைங்க
பலாப் பழத்தை வெட்டாமலே எத்தனை சுளை இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அட இதெல்லாம் எனக்குத் தெரியாது உங்களுக்குத் தெரியுமா? ம்..ம்..ம் தெரிந்தவர்கள் சொல்லலாம்.
ஆனால் நம்ப viju அவர்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
வெட்டாமலே அதிலுள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறிந்து கொள்ள பழம் பெரும் கணித நூலான கணக்கதிகாரம் ஒரு வழி சொல்லியிருக்கிறதாம். இது விந்தை தானே ...
இதோ கணக்குப் பண்ண அதற்குரிய வெண்பா வேறு போட்டிருக்கிறார்கள்...
''பலாவின் சுளையறிய வேண்டுதிரேல் ஆங்கு
சிறுமுள்ளுக் காம்பருக் கெண்ணி வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தினுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை !
ஒரு பாலாப் பழத்தை அறுப்பதற்கு முன்பு அதிலுள்ள சுளைகள் இவ்வளவு என்று
கண்டு பிடிக்கலாமா என்ற கேள்விக்கு பலாப் பழத்தின் காம்பு அருகில் உள்ள சிறு முட்களின் எண்ணிக்கையை 6 ஆல் பெருக்கி வரும் விடையை 5 ஆல் வகுக்க கிடைக்கும் ஈவானது பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையாகும்.
அதாவது பலாப் பலத்தின் முற்களின் எண்ணிக்கை: 100
இதை 100*6=600 பின்பு 600-ஐ 5- ஆல் வகுக்க , வரும் விடையே சுளைகளின் எண்ணிக்கை யாகும்.
ஆச்சரியமாக இருக்கிறதா இல்லையா? தெரிந்தவர்களுக்கு நிச்சயமா இருக்காது தெரியாதவர்கள் பரிசோதித்து பார்த்து சொல்லலாம்.
எனக்கு இங்கெங்கே கிடைக்கப் போகிறது. அதனால் தான் சொன்னேன். யாரவது வீட்டு முற்றத்தில் வைத்திருந்தால் சுலபமாக கணக்கிடலாம். ஹா ஹா ....