Tuesday, December 24, 2013

வருக புத்தாண்டே வருக

   

 சுட்டியை படத்தின் மேல் கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்


வருக புத்தாண்டே வருக
    பொலிவோடு புகழோடு வருக
அருளோடு பொருளும் 
    கொண்டு வந்து தருக
ஒளியோடு நிறைவாக 
    மகிழ்ந்தாட வருக
கோலமயில் போலவே
    கொண்டாட வருக

ஆல மரம் போல 
     அசராமல் வருக 
அன்னம் போலவே 
     குணம் கொண்டு தருக
 மான்குட்டி போல 
      துள்ளலுடன் வருக
பச்சை வயல் போலவே 
      பசுமையாய் வருக


 animated christmas photo: Animated Christmas ChristSantaReadsChild.gif

 ஆனை பலம் கொண்டு
     அசத்திடவே வருக
தென்றல் போலெமை
     தழுவிடவே வருக 
தெவிட்டாத தீஞ்சுவை
     தினம் கொண்டு தருக
எறும்புகளின் சுறு 
      சுறுப்பை ஏந்தியே வருக

காகம் போல் ஒற்றுமை யாய்
    வாழ சொல்லி நீ தருக
கிளி போல நாம் பேச
      கற்று நீ தருக
குயிலிடம் குரல் கொஞ்சம்
      வாங்கியே வருக
வான் மழை போலவே 
      கேட்காமல் தருக

கல்வி தான தானியம் 
      கொண்டு வந்து தருக
கலங்காமல் நாம் வாழ
      களிப்போடு வருக
நோய் நொடிகள் சேராது 
      தடுத்திடவே வருக
வெற்றிகள் கண்டிடவே 
      விரும்பி நீ வருக


 பஞ்சமா பாதகங்கள்
      தொலைந்திடவே வருக
பசி பிணி அனைத்தையும் 
      போக்கிடவே வருக
பொருளாதாரம் 
      உயர்ந்திடவே வருக
அன்பும் அறமும்
      தளைத்திடவே வருக

நல்லாட்சி நிறு விடவே
      நட்போடு வருக  
புத்தாண்டே வருக
      புதுமையுடன்  வருக
 புனிதமும்  மனிதமும்
      கொண்டு நீ தருக 
பணிவோடு பக்தியும்
       பரப்பிடவே வருக

animated christmas photo: Animated Christmas 028002Uw_aN.gif




















21 comments:

  1. வணக்கம்
    அம்மா.
    புத்தாண்டு கவிதை மிக அருமையாக உள்ளது . வாழ்த்துக்கள்

    புத்தாண்டே நீ-வந்திடுவாய்.
    வலையுலக உறவுகளுக்கு
    உடல் நலம் காத்து.-நித்தமது
    ஒரு பதிவு kaviyavi-வலைப்பூவில்
    மலர்ந்திட எப்போதும்
    துணைநிக்கவும்-புத்தாண்டே.
    உன்னை இருகரம் கூப்பி
    வணங்குகிறேன் புத்தாண்டே.

    ------------------------------------------------------------------------------
    அசையும் படங்கள் மிக அருமை இனிய நத்தார்பண்டிகை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் ரூபன்
      இனியவரவும் அழகிய கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்

      மிக்க நன்றி...!
      என் இனிய நல் நத்தார் வாழ்த்துக்களும் புத்தாண்டு வாழ்த்துக்களும் ....! உரித்தாகட்டும்.

      Delete
  2. புத்தாண்டு வாழ்த்துக்கள் ரூபன்.

    ஓடி வந்து இட்ட வாழ்த்து
    தொட்டது என் இதயத்தை
    புதிய புத்தாண்டில்
    புகழோடு பொருளோடு
    எட்டாத உயரத்தை
    எட்டிடுவாய் விரைவினிலே
    தொட்ட தெல்லாம் துலங்கிடவே
    ஈசன் துணை புரிய வேண்டுகிறேன்.

    மிக்க நன்றி வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
  3. புத்தாண்டு சிறக்க வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழி....!
      அமைதியும் இன்பமும் பெற்று
      நிறைவுடன் வாழ வாழ்த்துகிறேன்....!

      மிக்க நன்றி உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  4. padankalum kavithaiyum manathai kavarnthana .wish u happy new year to u

    ReplyDelete
    Replies
    1. Have a Wonder Full New Year tholi

      Thank you....!

      Delete
  5. அசைந்தாடும் படங்களுடன் அழகிய கவிபடைத்து
    ஆடிட வேண்டும் மகிழ்வில் ஓடிடவே துன்பங்கள் என்றீர்...

    மிக அருமை! வளரட்டும் உங்கள் ஆற்றல்! சிறக்கட்டும் அனைத்தும்!

    இனிய நத்தார் புதுவருட நல் வாழ்த்துக்கள் தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி

      வருகின்ற புத்தாண்டு உன் வசமாக
      விசனங்களின்றி கரகோஷம் காண
      கை வண்ணம் மின்ன நாவன்மை
      செழிக்க செல்வமும் கொழித்து............ வாழ வாழ்த்துகிறேன்.....!

      Delete
  6. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    புத்தாண்டை வரவேற்று புது கவிதையும் படைத்தது மிக அழகாக உள்ளது. கவி வரிகளும் ரசிக்கும் படி ரம்யமாக இருந்தது கண்டு மகிழ்ச்சி பொங்குகிறது. புதிய வருடத்தில் என் சகோதரியும் நல்ல உடல்நலம் பெற்று மனநிறைவான வாழ்வு வாழ எல்லாவல்ல இறைவனை வேண்டுகிறேன். எல்லோரும் எல்லாமும் பெற வழிவகை செய்யும் புத்தாண்டாக மலர வேண்டும் என்பதே எனது விருப்பமும். படமும் சுட்டியை வைத்தால் வாசகம் வரும் நுட்பமும் மிக அழகு. பகிர்வுக்கு மிகுந்த நன்றிகள் சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் பாண்டியா
      இந்தப் புதிய ஆண்டில்
      எலோரும் எல்லாமும் பெற வேண்டும்
      இல்லாமை இல்லாத நிலை வேண்டும்.

      வருகின்ற ஆண்டு வளமாக வேண்டும்
      வரும் பெண்ணும் உன் தன் வசமாக வேண்டும்
      இரண்டோடு மூன்றாய் நாலாக வேண்டும்
      அந்த மகிழ்வோடு என்றும் போராட வேண்டும் என்று வாழ்த்துகிறேன்....!

      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ ....!
      வாழ்க வளமுடன்......!

      Delete

  7. வருக வருகவென்று வாஞ்சையுடன் வேண்டி
    உருகும் உனக்கே உயர்வு!

    இனிய கவிதைகள் இனியா ......வாழ்த்துக்கள்

    இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் எல்லோர்க்கும் உரித்தாகட்டும்

    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. பேராளும் சீராளா வருக வருக....!
      வருகையும் கருத்தும் கண்டு உவகை கொண்டேன்.







      வாழும் நாளெல்லாம் மகிழ்வோடு
      வாழ வேதனைகள் யாவும்
      விலகியே ஓட உறவுகள்
      யாவும் உனை வந்து சூழ

      பொன்னும் பொருளும்
      உன் கையில் மின்ன
      மண்ணையும் பெண்ணையும்
      மாண்போடு ஆள வாழ்த்துகிறேன்.....!

      Delete
  8. வருக புத்தாண்டே வருக
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி .....!
      என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!

      Delete
  9. இனிய புத்தாண்டே வருக!
    இனிய வாழ்த்துக்கள்
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. மிக்க மகிழ்ச்சி
      என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் உங்களுக்கும் உரித்தாகட்டும்....!

      Delete
  10. புத்தாண்டு கனவுகள் எல்லாம் அருமை சகோதரி
    புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வருகையில் மகிழ்ந்தேன்.
      உங்களுக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!

      Delete
  11. வாழ்க வளமுடன்!..
    வளர்க நலமுடன்!..
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

    ReplyDelete
    Replies

    1. புதிய ஆண்டில் இனிமை
      நிறைவு நலம் பெற்று
      வாழ வாழ்த்துகிறேன்...!

      வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.