சுட்டியை படத்தின் மேல் கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும் |
தேவனே உனை தேடினேன்
பாடினேன் உனை நாடினேன்.
பாடினேன் உனை நாடினேன்.
இயேசுவின் நாமம் பேசிடவே
அவர் வாசம் செய்வார் நம்முடனே
பாசம் கொண்டவர் பரிதவித்தால்
உடன் பாவங்களை வாங்கிக் கொள்வார்
நேசம் கொண்டவர் நெஞ்சினிலே
நித்தியமாய் குடி கொண்டிடுவார்
மேதினியில் மலிந்திருக்கும் பாவங்கள்
கண்டு பரிதவித்தே பிறவி எடுத்தாரே
வார்த்தைகளாய் மணி வயிற்றில்
வளமாய் வந்து வளர்ந்தவரே
திருவாய் உருவாய் திகழ்ந்தாரே
அன்னை மரியாள் மடியில் தவழ்ந்தாரே
அவள் மதி முகம் கண்டு மகிழ்ந்தாரே
மண்ணில் புகழ் பெற மிளிர்ந்தாரே
நாட்கள் நகர்ந்திட இயேசு வளர்ந்திட
நன்மைகள் புரிந்து நேசம் வளர்த்தாரே
எம் நெஞ்சினில் நிறைந்தாரே நய
வஞ்சகர்களையும் மன்னித்தே அருளினாரே
ஆணவம் கொண்ட அனைவரையும்
ஆட்கொள்ளவே அன்பு செய்தாரே
நோய் துன்பம் நீக்கி புதுமைகள்
புரிந்தவர் புண்ணியம் காத்தாரே
இயேசுவின் நாமம் ஒலித்திடவே வரும்
துன்பங்கள் யாவும் தொலை தூரத்திலே
இறை மகன் வழியில் தொடர்ந்தாலே
சுபீட்சம் எங்கும் நிறைந்திடுமே
மண்ணில் மனித குலத்தையே
மீட்டிடவே மேய்ப்பரானாரே
வேதனைகளையே விரட்டிடவே
விரைந்து வருவாரே
ஒளியாய் விழியாய் வருவாரே
நாம் களிப்புற கண்டு மகிழ்வாரே
மன்னிக்க வேண்டி மன்றாட
மறுத்தாரில்லை வழங்கிடவே
மக்கள் பாவம் என்றவர் புனிதப்
படுத்த புறப்பட்டு வந்தாரே
பாவ புண்ணியம் பகுத்தே உரைத்தாரே
நம் பாதையை வகுத்தாரே
இயேசு எம் பாவத்தை தொலைத்து
தன் பயணத்தை முடித்தாரே
பாவ புண்ணியம் பகுத்தே உரைத்தாரே
நம் பாதையை வகுத்தாரே
இயேசு எம் பாவத்தை தொலைத்து
தன் பயணத்தை முடித்தாரே
அமைதியும் அன்பும் நிலவிடவே
அவர் சிலுவை சுமந்தாரே
பாவங்கள் யாவும் வாங்கிடவே
சிலுவையில் அறையவும் பொறுத்தாரே
பரிசுத்தமான பரம பிதாவே உம் பாதம்
துணை என பணிகின்றோம்
யேசுவே உமை துதிக்கின்றோம்
எமை மன்னிக்கவே மன்றாடுகிறோம்.
சிறப்பான பகிர்வு சகோதரி... நன்றி... தொடர வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாருங்கள் சகோதரா
Deleteஎப்போதும் முதலில் வந்து இடும் கருத்து என்னை ஆசீர்வாதம் பண்ணுவது போல் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஆக.
வாழ்க வளமுடன்....!
மண்ணில் மனித குலத்தையே
ReplyDeleteமீட்டிடவே மேய்ப்பரானாரே !..
முன்னதாகவே - மலர்ந்த கிறிஸ்துமஸ் கீதம்!..
அழகான கவிதை மலர்.. வாழ்த்துக்கள்!..
வணக்கம்....!
Deleteஉங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன். கருத்தை கண்டு ஊக்கம் கொண்டேன். கர்த்தர் உங்களையும் ஆசீர்வதிப்பாராக.
மிக்க மகிழ்ச்சி ....! தொடர வேண்டுகிறேன் ...!
வாழ்க வளமுடன்....!
அன்பு சகோதரிக்கு வணக்கம்..
ReplyDeleteஆன்மீகக் கவியைத் தந்து எங்களையும் மூழ்கடித்து விட்டீர்கள். மிக அற்புதமாக வரிகள் சகோதரியின் எண்ணங்களிலிருந்து ஊற்றெடுத்து வந்துள்ளது கண்டு மகிழ்ச்சியாய் உள்ளது.
//பரிசுத்தமான பரம பிதாவே உம் பாதம்
துணை என பணிகின்றோம்
யேசுவே உமை துதிக்கின்றோம்
எமை மன்னிக்கவே மன்றாடுகிறோம்.//
ஆம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களை மன்னித்து மன்னுயிகளையெல்லாம் ரட்சிக்க வேண்டுவோம். பகிர்வுக்கு நன்றி சகோதரி.
இனிய சகோதரனுக்கு
Deleteஉம் இனிய கருத்தும் வருகையும் கண்டு உள்ளம் பூரித்து போனேன். இட்டவுடன் வந்து இடும் கருத்தில் பரம திருப்தியே.
பரிசுத்தமான பரம பிதாவின் பார்வை
பணிவன்பு கொண்ட பாண்டியன் மீதும் படரட்டும்
அரும் பணிகள் ஆற்றும்படி அருளட்டும்.
ஈன்றவளோ ஈடு இணை இல்லை
என பெருமிதம் கொள்ளட்டும்.
வாழ்க வளமுடன்....!
http://www.youtube.com/watch?v=Ml4tTrRETI0
ReplyDeleteListen to this song in Carnatic classical
meenaachi paatti
வணக்கம் சுப்பு தாத்தா...!
Deleteநான் செய்த புண்ணியம் என் பாடலை நீங்கள் பாடுவது கேட்க. என் செவிகளும் உள்ளமும் குளிர்ந்தன. ஆண்டவன் அருள் முழுமையாக கிட்டும் தாத்தா. மிக்க நன்றி....! இப்படி நீங்கள் பாடுவதாக இருந்தால் என்னால் நிறைய எழுத முடியும் போல் உத்வேகம் வருகிறது. முயற்சி செய்கிறேன். நீங்கள் தரும் ஊக்கம் என்னை வளரச் செய்யும். நன்றி ...!
வாழ்க வளமுடன்....!
வணக்கம்
ReplyDeleteஆயிரம் யானைகள் சுமக்க வேண்டிய
துன்பச் சிலுவையை -தானே ஒருதன்
சுமந்தவன் எம் தேவன்-அல்லவா.
தட்டுங்கள் திறக்கப்படும்
கேளுங்கள் கொடுக்கப்படும்
என்று புனித வைபிளில் உள்ளதல்லவா
கவிதையிலும் அருமையாக வேண்டி எழுதியுள்ளீர்கள்
காலம் அறிந்து கவி புனைந்த விதம் நன்று.
வாழ்த்துக்கள்
---------------------------------------------------------------------
படங்கள் இரண்டும் மிக அருமையாக உள்ளது. மேலும்எதிர்காலத்தில் பல.பல கவிதைகளும் சிறுகதைகளும் வலைப்பூவில் பூத்து மலர எனது வாழ்த்துக்கள்.
இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் எங்கே காணோம் என்று பார்த்தேன்.
Deleteபோட்டியோடு போட்டி போட்டுக் கொண்டு இருகிறீர்களோ என்றல்லவா எண்ணினேன். வந்து விட்டீர்கள் அதனால் தப்பினீர்கள். உங்கள் இனிய கருத்து தென்பை கொடுக்கிறது அன்பை கொடுக்கிறது.
மிக்க மகிழ்ச்சி ...! சிறு...... கதை.....யா நானா விளையாடதீர்கள். இயேசு அனைவருக்கும் அருள் பாலிக்கட்டும்.
உங்களுக்கும் நத்தார் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
வாழ்க வளமுடன்...!
அற்புதமான துதிப்பாடல்
ReplyDeleteமீண்டும் மீண்டும் படித்து ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ரமணி ஐயா ..!
Deleteஉங்கள் வருகை கண்டதும் உள்ளம் துள்ளியது கருத்து நெஞ்சை நிறைத்தது. ரொம்ப நன்றி ஐயா ...!
உங்கள் ஆதரவு என்றும் தேவை .
வாழ்க வளமுடன்...!
தற்பரன் தாள்பணிந்து சொன்னதுதி தேவரீர்
ReplyDeleteநற்கருணை தேர்ந்திட்டீர் நன்று!
அற்புதமாய அமைத்திட்டீர்
அழகிய பக்திப் பாமாலை!
மேலும் சிறக்க மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் தோழி!
இளமதி தந்த வாழ்த்து
ReplyDeleteஇனிக்குதே எந்தன் நெஞ்சில்
இடரது வந்த போதும் தளைக்குமே
என் தன் பாட்டு.
ஈரமே கொண்ட நெஞ்சு
ஏற்றமே கொள்ளும் என்றும்.
எண்ணாமல் ஏற்று இன்னும்
விண் புகழ் சேர்ந்து கொள்ளும்.
ரொம்ப நன்றி தோழி...! வருகையும் கருத்தும் கண்டதும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன். அன்பும் வரவும் தோடர வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்....!
படித்தோம்
ReplyDeleteமகிழ்ந்தோம்
பகிர்ந்தோம்...
அனுமதி உண்டுதானே...
https://www.facebook.com/malartharu
வணக்கம் மது
Deleteநான் ரொம்பக் கோபமாக அல்லவா இருக்கிறேன். எப்படி நீங்கள் இப்படி நல்ல விடயங்களை செய்யலாம்.ம்...ம்...ம்...இது தப்பாக தெரியவில்லை உங்களுக்கு.
ஹா ஹாபயந்து விட்டீர்களா........சும்மா
உண்மையில் ரொம்ப மகிழ்ச்சியே,எனக்கு அங்கீகாரம் கிடைத்தது போல் தான் உணர்கிறேன். உங்கள் அன்புக்கும், பகிர்வுக்கும் மிக்க நன்றி....!
வாழ்க வளமுடன்...! தேவன் அருள் நிச்சயம் கிட்டும். இதை பகிர்பவருக்கு.
ReplyDeleteவணக்கம்!
மான்றாடும் பாடல் மகிழ்தாடும் என்மனத்துள்!
நின்றாடும் இன்பம் நிறைந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வாருங்கள் கவிஞரே..!
Deleteஉங்கள் வருகையினால் மனம் கூத்தாடுகிறது. இனிய கருத்தினால் நிறைவுறும் நெஞ்சம். நீந்திடும் உங்கள் அறிவு வண்ணத்தில் நிறைந்து.
தேவன் அருள் பெற்றுய் எந்நாளும் துயரற்று...!
அரும் பணி தொடர்ந் தேற்று மகிழ்வுற்று...!
நன்றி...! வாழ்த்துக்கள்....!
நான் இந்து என்றாலும் எல்லா மத உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுப்பேன். ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் நாள் அன்று இந்து கோயிலுக்கும் செல்வேன், அதே போல் அன்று சர்ச்சிற்கும் செல்வதுண்டு.. இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்த்துக்களையும் பெறுவேன். அன்றைய வருட துவக்கம் மிக இனிமையாக இருக்கும். ஆன்மீக கவிகளை அற்புதமாக எழுதும் உங்கள் பக்கத்தை பார்த்து வியப்படைகிறேன். பாராட்டுக்கள்..... நேரம் கிடைக்கும் போதெல்லாம் தொடர்ந்து நிறைய எழுதுங்கள்......
ReplyDeleteவாருங்கள் தோழி.
Deleteமதங்கள் உருவானதே நம்மை வழிப்படுத்தவும் நெறிப்படுத்தவும் தானே மதங்களின் நோக்கம் எல்லாம் ஒன்று தானே ஆண்டவனின் நோக்கமும் இயக்கமும் ஒன்று தான். வடிவங்களும் வழிபடும் முறைகள் வேறு வேறாக இருக்கலாம் வழிபடும் நோக்கம் ஒன்று தானே. ஆகையால் எல்லா மதங்களையும் உங்களை போன்று மதிக்கிறேன் வணங்கவும் செய்கிறேன். நானும் இந்துப் பெண்தான்.
உங்கள் வருகையும் கருத்தும் இன்னும் தெளிவும் ஊக்கமும் தருகிறது. மிக்க மகிழ்ச்சி தோழி. தொடருங்கள் தொடர்கிறேன்.
வாழ்க வளமுடன்...!
கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் சகோதரி !
ReplyDeleteஅருமையான கரோல் சாங்!!
கீழ சீரடி சாய் !அசத்துறிங்க !!
வணக்கம் சகோதரி வாருங்கள் ...!
Deleteமுதல் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி யடைந்தேன். உங்கள் கருத்து மிகுந்த ஊக்கம் தருகிறது. ரொம்ப நன்றி.....! தொடர வேண்டுகிறேன்....! வாழ்க வளமுடன்....! நானும் தொடர்கிறேன்.
ஒளியாய் விழியாய் வருவாரே
ReplyDeleteநாம் களிப்புற கண்டு மகிழ்வாரே///
இயேசுவின் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்
வாருங்கள் சகோதரரே...!
Deleteஉங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்.
தேவன் அருள் பெற்று வாழ வாழ்த்துகிறேன்....!
மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன்.....!
வணக்கம் சகோதரா ...!
ReplyDeleteதகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ...!
சென்று பார்த்தேன் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். சகோதரர் துரைராஜ் அவர்களுக்கும், தங்களுக்கும் என் அன்பு கலந்த நன்றியும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்....!
பரிசுத்தமான பரம பிதாவே உம் பாதம்
ReplyDeleteதுணை என பணிகின்றோம்
யேசுவே உமை துதிக்கின்றோம்
எமை மன்னிக்கவே மன்றாடுகிறோம்.
அருமையான பாடல் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
வாருங்கள் தோழி ..!
ReplyDeleteமீண்டும் வருகை கண்டு மகிழ்கின்றேன். இன்னும் எழுத மனம் துடிக்கிறது. உங்கள் கருத்துக்களும் ஆசீர்வாதமும் நிச்சயம் எனை வளர்க்கும்..
மிக்க நன்றி ...! வாழ்க வளமுடன்......!
ReplyDeleteகிறிஸ்து பிறப்பின் கருப்பொருள் எல்லாம்
அறிந்திட அன்பே அறம் !
அழகிய கவிதை இறையருள் நல்கட்டும் என்றும்
இனிய நத்தார்தின நல்வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
வரவேண்டும் வரவேண்டும்
ReplyDeleteஉங்கள் வரவும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்.
மன நிறைவு கொண்டேன். மிக்க நன்றி...!
வாழ்க வளமுடன்.....!
கிறிஸ்துவின் கிருபை கிட்டிடும்
பாதம் பணிய கெட்டியாய் பிடித்திட
கெட்டிடும் பாவம் விட்டு விலகிடும்
வல்லமை பெற்றிடும் வாழ்வில்