வரம் அருள வாரும் சாயி
வள்ளல் ஆக வாரும் சாயி
வளங்கள் நிறைவாய் வழங்கும் சாயி
இருள் அகல வாரும் சாயி
கள்ளம் இல்லா உள்ளம் தாரும்
கொள்ளும் இன்ப வெள்ளம் எங்கும்
வாரும் சாயி வாரும் சாயி
கருணை கொண்டு வாரும் சாயி
பொன்னும் பொருளும் மின்னும் சாயி
எண்ணம் புனிதம் ஆகும் சாயி
வேம்பின் அடியில் விரும்பி இருப்பார்
வேரின் கசப்பையும் போக்கி வைப்பார்
எண்ணெய் இன்றி ஒளியேற்றி வைப்பார்
நீரில் நின்றே ஒளிர வைப்பார்
உம் பாதம் பற்றும் அடியவரின்
பாவம் போக்கும் சாயி நாமம்
சாயி வழங்கும் துனியின் உதியில்
நோய் நொடிகள் உடனும் விலகும்
சாயி நாமம் சொல்ல சொல்ல
சர்வமும் வந்து சேரும் எம்மை
ஆதவன் போல் அன்பு செய்ய
இன்பம் நெஞ்சில் ஊறும் சாயி
எடுத்த கருமம் இனிது சிறக்கும்
தடைபட காரியம் தடங்கல் நீங்கும்
வரும் துக்கம் எல்லாம் தூரநிக்கும்
வாரும் சாயி வாரும் சாயி
சாயி எம்மதம் என்றாலோ
எம்மதமும் சம்மதம் என்பார்
சாயி அல்லாவா என்றே கேட்டால்
எல்லாம் ஒன்றே என்றே சொல்வார்
வாரும் சாயி வாரும் சாயி
வல்லமை யாவும் தாரும் சாயி
சாயி என்றும் அன்பின் எல்லை-தீனதயாளர்
என்றும் இல்லை என்பது இல்லை
சாயி சரணம் சரணம் சாயி
ஜெய் சாயி ஜெய ஜெய சாயி
சப்தமாகப் படித்து ரசித்தேன்
ReplyDeleteபக்திமணம் கமழும் அற்புதமான கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாருங்கள் ரமணி ஐயா...!
Deleteபுத்தம் புதிய புத்தாண்டில் முதல் வருகை அமர்க்களம்.
நிச்சயமாக எல்லாம் உங்கள் ஆசீர்வாதம் தான். உங்கள் வருகைக்காக தவம் இருக்க வேண்டியே இருக்கிறது இன்று நான் செய்த புண்ணியம்.
முதலாக வந்து விட்டீர்கள். மிகவும் ஆனந்தமாக இருக்கிறது.
மிக்க நன்றி ஐயா....! தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!
//உண்மை வாழ்த்துக்கள் //
ReplyDeleteஎடுத்த கருமம் இனிது சிறக்கும்
தடைபட காரியம் தடங்கல் நீங்கும்
வரும் துக்கம் எல்லாம் தூரநிக்கும்
வாருங்கள் சகோதரா.
Deleteஉங்கள் வருகையும் கருத்துக்கும் மிக்க நன்றி ....!
புத்தாண்டில் முதலில் வந்து கருத்து இட்டது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்....!
சாய் அருளால் புத்தாண்டு இனிதாக மலரும்..! வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாருங்கள் தோழி உங்கள் வருகையில் அகம் மகிழ்ந்தேன்.
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.......!
சாயி என்றும் அன்பின் எல்லை -
ReplyDeleteஅவரிம் - இல்லை என்பதே இல்லை!..
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி - அனைவருக்கும்
மனம் கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்....!
வாருங்கள் சகோதரரே.
Deleteஉங்கள் வரவு கண்டு எல்லை இல்லா மகிழ்வு கொண்டேன்.
மிக்க நன்றி....!
typing mistake க்காக இருக்குமோ என்று சரியாக தெரியாததனால் (அவரிம் or அவரும்) என்று ஆகையால் தீன தயாளர் என்று மாற்றியுள்ளேன்.குறை நினைக்க வேண்டாம். மிக்க நன்றி....!
உங்கள் குடும்பத்தினருக்கும் உங்களுக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.....!
happy new year to you
ReplyDeleteThanks,...........! same to you தோழி.....!
Deletelisten your song here
ReplyDeletehttps://www.youtube.com/watch?v=btye8_Mwz3
meenachi paati.
for placing the song on the blog, pl go to LAYOUT, ADD A WIDGET, LINK, COPY THE ABOVE LINK AND PASTE IT THERE, YOU MAY GIVE THE TITLE OR THE SONG. AND THEN SAVE. THATS ALL.
FOR FURTHER ASSISTANCE, YOU MAY CONTACT THATHA AT 9840461667
வணக்கம் சுப்பு தாத்தா.
Deleteமிக்க நன்றி ...! பாட்டி வீடியோ not exist என்று வருகிறதே.
என்னவென்று பாருங்கள் அல்லது நான் தான் ஏதும் பிழையோ தெரியவில்லை பார்க்கலாம்.
தாத்தா பாட்டி மற்றும் பிள்ளைகள் அனைவருக்கும் என் உளம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்......!
https://www.youtube.com/watch?v=btye8_Mwz3s
Deleteplease see in this link.
subbu thatha.
https://www.youtube.com/watch?v=btye8_Mwz3s
Deleteகேட்டு விட்டேன் தாத்தா அருமையோ அருமை...!
Deleteசாயி அருளால் உள்ளம் பொங்கு இனிய புத்தாண்டு இது தாத்தா. அத்துடன் சிவன் பாடல் நீங்கள் பார்க்கவில்லை என நினைக்கிறன். அதை படலாமா பாருங்கள் தாத்தா. அதையும் சேர்த்து blog ல் இட்டு விடுகிறேன் எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. specially பாட்டிக்கு நன்றி சொல்ல வேண்டும் தாத்தா.தங்களுக்கு எவ்வளவு ஒத்துழைப்பு நல்குகிறார் நல்ல பாட்டி.
இனியா புத்தாண்டில்
எல்லாமும் பெற்று இன்று
போல் என்றும்இன்பமாய் வாழ
வாழ்த்துகிறேன் தாத்தா பாட்டி
வணக்கம்
ReplyDeleteஅம்மா.
கவிதையின் ஒவ்வொரு வரிகளையும் மிக அழகாக இரசித்து படித்தேன். சாயி பெருமையை மிக அருமையாக சொல்லியுள்ளிர்கள்...வரிக்கு வரி... ஒளிரும் படங்கள் மிக அருமை. வாழ்த்துக்கள்.
----------------------------------------------------------------------------------------------------------
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாருங்கள் ரூபன்
Deleteஉங்கள் வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன். மிக்க நன்றி.....!
என்றும் இன்பம் பொங்க
எண்ணமும் எழுத்தும் பொங்க என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ....!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள், இனியா!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி....! சகோதரி
Deleteஉங்களுக்கும் என் மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....!
தீரும் மனங்களின் தேடல்கள் பேரருளால்
ReplyDeleteபாரும் உணரும் பொழுது!
அற்புத பக்திப் பாமாலை!
உள்ளத்தில் அமைதியை ஆனந்தத்தைத் தருகிறது தோழி!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர்க்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!
பாதையே மாறும் சாயியின் தயவில்
Deleteதரிசனம் கிட்டிட மாயையும் விலகும்
வல்வினை வென்றிட ஆற்றலும் நல்கும்
காக்கும் வீழ்ந்திடாமல் விழியினில் நின்று
மிக்க நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்.
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்....! தோழி
கலையாது கவிஞர் வாக்கு
ReplyDeleteகுலையாது கல்விச் செல்வம்
கலைவாணி நிலையாய் நாவில்- நின்று
நவின்றி டுவாள் நயம் பல
போற்றிப் புகழும்
குணம் உமக்கு
கிட்டிடும் மின்னும்
பொன்னும் புகழும் தினம் உமக்கு.
தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ........!
இறைபோற்றும் உங்கவியில் இன்புற்றேன் ! மண்ணில்
ReplyDeleteமறையாக நிற்கும் மலர்ந்து !
இனிய கவிதை இனியா அருமை அருமை
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
இரங்குவார் இறைமகனை வேண்டிட
Deleteவையம் போற்றிட அருள்வார் வரம் உவந்து.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி....!
தேரோடும் வீதியெல்லாம் பேரோடு நீ வாழு
ஊரோடும் உறவோடும் உறவாடி நீ மகிழு
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்,,,,!
அன்பு சகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteதங்கள் கவியில் பக்தி மணம் சொட்ட சொட்ட நிரம்பியிருப்பது கண்டு மகிழ்ந்தேன். வாழ்த்துகள் சகோதரி.
சாயி சரணம் சரணம் சாயி
ஜெய் சாயி ஜெய ஜெய சாயி
--------
வழக்கம் போல் எனது தாமதமான வருகைக்கு மன்னிக்கவும். இணையப்பக்கம் வருவதில் இப்பொழுது எல்லாம் தாமதம் ஆகிறது (சார் ரொம்ப பிஸி). எனது தளத்தில் இடப்பட்ட பின்னூட்டத்திற்கு கூட நன்றி சொல்லவில்லை என்பதைக் கவனித்திற்பீர்கள். ஆதலால் மன்னிப்பீர்கள் எனும் நம்பிக்கை இருக்கிறது எனக்கு. தொடர்ந்து இணைந்திருப்போம் நன்றி சகோதரி.
------
எனது அன்பு சகோதரிக்கும் இல்லத்தார் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
சரி சரி பிழைச்சு போப்பா மன்னிச்சிட்டேன்.
ReplyDeleteஐயா ரொம்ப பிஸி என்று தெரிகிறது ஆனால் போட்டி பிஸி யா வீட்டு பிஸி யா என்று தான் தெரியலை.
தாமதமானாலும் வருகைக்கு மகிழாமலும் இருக்க முடியவில்லை.
கோபப் படவும் முடியவில்லையே. அன்பு சகோதரி என்று வேற சொல்லி விட்டீர்கள். என்ன செய்வது?
மிக்க மகிழ்ச்சி அப்பனே...!
உங்களுக்கும் உங்கள் வீட்டாருக்கும் வருங்கால மனைவிக்கும்
இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்....!
சாயி சரணம் சரணம் சாயி
ReplyDeleteஜெய் சாயி ஜெய ஜெய சாயி
இனிய கானம் ..பாராட்டுக்கள்..வாழ்த்துகள்..!