சுட்டியை படத்தின் மேல் கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்
ஆலகால முண்ட
கண்டனே
இவ்வண்டம்
முழுதும் உந்தமே
தில்லையிலே
ஆடும் கூத்தனே
திருவோடு
ஏந்தும் பித்தனே
எமை திண்டாட
வைப்பவனே எம்
திமிரினை அடக்கும்
தில்லை நாதனே
இடு காட்டில்
வாழும் அப்பனே
எம் இடர் தீர
வாரும் ஐயனே
விடை ஏறும்
வல்லவனே
கடை ஏற
வைப்பவனே
கண்ணப்பன்
கண்ணவனே எம்
எண்ணங்கள் அறிவாயே
ஈடேற்றி விடுவாயே
அண்டங்கள்
ஆடாது அசையாது
நீ கண் மலர்
மூடிடக் கூடாது
நம் அன்பினை
கடந்தால் ஆகாது
பாவம் கடுந் தவம்
செய்தாலும் தீராது
பொன்னார்
மேனியனே
உன் புகழ் பாட
உருகுவையே
உமையாளருகிருந்தா
மருகுவையே
கங்கை நீரையே
பருகுவையே
நெற்றியிலும்
கண்ணை வச்ச
நித்திரைய
தள்ளி வச்ச
மனசில
மங்கை வச்ச
சிரசில
கங்கை வச்ச
எங்களையோ
ஏங்க வச்ச
பாவங்களை
செய்ய வச்ச
பாம்பையும்
கழுத்திலிட்டு
புலித் தோலையும்
இடுப்பிலிட்டு
எமை விலகிட
செய்தாயோ
நீ வெறுத்திட
நினைத்தாயோ
நாமுனை அணுகாது
வேதனை விலகாது
நீ எமை சேராது
நிதர்சனம் கிடைக்காது
ஆதியும் அந்தமும்
இல்லாதவன்
பந்த பாசம் எம் மீது
கொள்ளாதவன்
அண்ணா
மலையானே
அன்பினில்
விளைந்தவனே
எண்ணிய போது
நீ வரவேண்டும்
இன்பங்கள் யாவும்
தரவேண்டும்
வணக்கம்
ReplyDeleteஅம்மா
எண்ணிய போது
நீ வரவேண்டும்
இன்பங்கள் யாவும்
தரவேண்டும்
உயிர்இனங்களை படைத்தவன் பற்றிய கவிதை மிகச் சிறப்பாக உள்ளது கவிதையின் வரிகள்...மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteஅம்மா
சிறப்பாக உள்ளது மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் ரூபன்
Deleteஅன்பான வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்.
மிக்க நன்றி.....! வாழ்க வளமுடன்....!
ஜோதியானவன் இல்லாளில்
பாதியானவன் எல்லா ஜீவராசிகளிலும்
இரண்டறக் கலந்தே வாழ்பவன் சிவன்
அவனை வணங்கிட வீழும் துயர் சூழும் புகழ் நாளும் மகிழ்
''..நாமுனை அணுகாது
ReplyDeleteவேதனை விலகாது
நீ எமை சேராது
நிதர்சனம் கிடைக்காது..''
நல்ல வரிகள்
நல்ல சொற் கட்டு ரசித்தேன் .
இனிமை. நல் வாழ்த்து சகோதரி.
வேதா. இலங்காதிலகம்.
வாருங்கள் தோழி
Deleteஉங்கள் முதல் வருகையில் முக்குளித்தேன் மகிழ்ச்சியில்.
உம் அன்பினில் கட்டுண்டேன்
இனிமையாய் கருத்திட்டு
வளமாய் கவி புனைய
வாழ்த்தும் இட்டாய் நிறைவாய்
நிறைவாய் வாழ நெற்றிகண்ணன்
நிச்சயம் அருள் புரிவான்.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி......!
தொடர வேண்டுகிறேன்.
இனிய உன் இதயத்தில்
ReplyDeleteஇதமாக அமர்ந்துகொண்டேன்
தேன் கனிபோன்ற பா சுவைத்து
தென்பாக நடந்து சென்றேன் ....
கனிவான வார்த்தைக்குக்
கை கூப்பி வணைகின்றேன்
எமையாளும் ஈசனவன்
என்றென்றும் துணையிருப்பான் ..
வாழ்த்துக்கள் தோழி .
வருக வருக அம்பாளே உன் வருகை நல்வரவாகுக....!
Deleteதுள்ளும் இதயம்
கொள்ளும் இன்பம்
பொங்கும் வருகையில்
அன்புடன் இன்பா சுவைத்து
இதயத்தில் அமர்ந்திட்ட இனிய
அம்பாள் அடி தொடர்வேன் இனி
இனியவளே கனியாய் கனிந்து
இதயத்தில் இணைந்திட்ட
இன்மகளே பொன்மகளே என்றும்
பாவேந்தி பூத்துக் குலுங்கு
புகழாரம் சூட்டி போற்றும் உலகு
வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி தோழி...! தொடர வேண்டுகிறேன்......!
அன்பு சகோதரிக்கு வணக்கம்
ReplyDeleteஅற்புதமான வரிகள். எப்பொழுதும் பக்தி சம்பந்தமான வரிகளைப் படிக்கும் போது அந்த பக்தி உணர்விலேயே லயித்து படித்து விட்டு கடந்து விடுவேன். முதல் முறையாக ரசித்து படித்தேன் சகோதரி. ரசித்த வரிகள் நிறைய இருப்பினும் இரு வரிகளைச் சுட்டிக்காட்டுகிறேன்
//மனசில
மங்கை வச்ச
சிரசில
கங்கை வச்ச // சிவனை வணங்கவும் புகழ் பாடவும் அழகான வாய்ப்பைத் தங்கள் கவிவரிகள் தந்தமைக்கு மிக்க நன்றிகள். தொடர்ந்து இது போன்ற பக்தி கவிகளையும் அழகியல் கலைகளையும் ரசிக்க தாருங்கள் ( மீன் குஞ்சுக்கு நீந்த சொல்லித்தரணுமா!). பகிர்வுக்கு நன்றிகள் சகோதரி.
அன்புச் சகோதரனுக்கு
Deleteமிக்க நன்றி வருகையும் கருத்தும் எப்பொழுதும் போல் ஊக்கம் தரும் உங்கள் வார்த்தையும் ஒன்றென்ன ஓராயிரம் எழுத முடியும் எனும் நம்பிக்கை தருகிறது. உங்கள் விருப்பம் போல் மேலும் எழுத முயற்சி செய்கிறேன். உங்கள் ஆதரவினால் இது வரை வந்திருக்கிறேன். தொடர்ந்தும் தர வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்....!
கணணியில் ஏற்பட்ட கோளாறினால் கருத்திட சிரமமாக இருக்கிறது பல தடவை முயற்சி செய்து இட்டிருக்கிறேன்.
அழகிய சிவனழகை அனுபவித்துப் பாடினீர்!
ReplyDeleteஅருளுவான் அனைவருக்கும் அற்புதமானவன்!
மிக அருமையான கவிதை!
பக்திரசம் சொட்டச் சொட்டத் தந்தீர்கள்!
வாழ்த்துக்கள் தோழி!
ஈசனின் எழிலை இனிதாய்
Deleteபாடியதாய் இயம்பியது
இனித்தது இன்மகளே
போற்றும் உன் உள்ளம்
பொங்கிடும் எந்நாளும்
பொலிவுகள் கூடி....!
.எங்கே காணவில்லை என்று பார்த்தேன் தோழி. விடுதலை நாட்களில் வேலைகள் அதிகமாக இருக்கும் என நினைத்தேன். வந்து விட்டீர்கள்.
மிக்க நன்றி ....! வாழ்க வளமுடன்...
பக்தி மணம் கமழும் பாடல் அருமை. வாழ்த்துக்கள்
ReplyDeleteவாருங்கள் சகோ
Deleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி....!
தொடர வேண்டுகிறேன்.
வாழ்க வளமுடன்.....!
அண்டங்கள்
ReplyDeleteஆடாது அசையாது
நீ கண் மலர்
மூடிடக் கூடாது
இமைப்போதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க..!!
இமவான் மகளை இடப்பாகம் கொண்டானின் புகழை
இனிய கவிதை வடிவில் அளித்தமைக்குப் பாராட்டுக்கள்
வாருங்கள் தோழி
Deleteஉங்கள் வருகையில் மனம் மகிழ்ந்தேன்.
இனிய கருத்தில் இதம் கொண்டேன்.
சித்தம் எல்லாம் சிவமயம்
இனி இல்லை எமக்கொரு பயம்.
வாழ்க வளமுடன்....!
பாடல் அருமை...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மிக்க நன்றி சகோதரரே வருகைக்கும் வாழ்த்துக்கும்
Deleteவாழ்க வளமுடன்....!
தினமும் சிவன் பாடல்களை படிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறேன்.
ReplyDeleteசிவனை போற்றி எழுதிய வரிகள் அத்தனையும் சிறப்பு! ஆன்மிக சிந்தனைகளை இனிய கவிதை வடிவில் எழுதுவது பாராட்டுக்குரியது...!
எல்லாம் அவன் சித்தம் என்றால்
Deleteபுத்தம் புது கவிதை நித்தமும் பிறக்கும்
நெற்றிக்கண்ணன் நிறைவாய் என்றும் வாழவைப்பான் உமை.
வாழ்த்துக்கும் வரவுக்கும் மிக்க நன்றி...!
தொடர வேண்டுகிறேன்....!
மிக மிக அற்புதமான கவிதை
ReplyDeleteநிச்சயம் வருவார்
வாரி வாரித் தருவார்
ஏனெனில் கவிதை அப்படி
மனம் கவர்ந்த கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
வாருங்கள் கவிஞரே
Deleteவாரித் தரும் கருத்து
என்னை வளர்த்து விடும்.
வழங்கும் வள்ளல் உமை
நல் வாழ்வு தேடி வரும்
நெற்றிக் கண்ணன் நினைவு
கொள்ள நெஞ்சினிக்க வாழ்வமையும்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.....!
வாழ்க வளமுடன்......!
இனியா உனது இறைகவி எல்லாம்
ReplyDeleteதனியாய் இனிக்கும் தளிர்த்து !
அழகிய கவிதை இறையருள் நல்கட்டும் என்றும் உனக்கு
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
சீராளா உன் சீரிய கருத்தென்
Deleteசிந்தை குளிரவைக்கும்
பாரிய மாற்றங்கள்
பாதையில் உருவாக்கும்
நடராஜன் என்றே நவின்றிட
நல் வாழ்வு கிட்டிடும் நாளும்
கூடிடும் இன்பம் எல்லாம்
பாடிப் பரவும் அன்பொடு.
வரவுக்கும் வாழ்த்துக்கும்.
மிக்க நன்றி ......! வாழ்க வளமுடன்....!
ReplyDeleteவணக்கம்!
ஆலகாலம் உண்டவனை! ஆடிக் களித்தவனைக்
கோலத் தமிழில் குளித்தவனை! - ஞாலமெலாம்
கொண்டு தரித்தவனைக் கூறிய பாட்டுக்குள்
கண்டு களித்தோம் கனிந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வணக்கம் ஐயா....!
Deleteதங்கள் வருகை நான் செய்த பாக்கியம்.
தங்கள் கருத்தை அப்படியே ஏற்றுக் கொண்டேன். மிக்க மகிழ்ச்சி.
நீர் இட்ட வழி நடந்து செல்ல
இனிக்கும் ஐயா கவிதை
நீர் தொட்டதெல்லாம் துலங்கிடவே
துணை செய்வான் ஈசன்.
மிக்க நன்றி ...! வாழ்க வளமுடன்....!
Happy chritmas and a bright new year
ReplyDeleteVetha.Elanagthilakam
Thank you ...!
DeleteSame to you......!