கண்ணா மேக நிற வண்ணா
வெண்ணெய் திருடும் கண்ணா
விளையாட்டு போதும் கண்ணா (கண்ணா)
ஐந்து தலை நாகத்தில் அமர்ந்திருக்கும் கண்ணா
அலைமீது நர்த்தனம் ஆடுகின்ற கண்ணா
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை
விரும்பி சூடுகின்ற கண்ணா (கண்ணா)
மூவுலகை ஓரடியாய் அளந்த கண்ணா
முகாரி ராகம் இங்கு வேண்டாம் கண்ணா
மனமுருகி வரவேண்டும் இங்கு கண்ணா
உன் குழலோசை தான் கேட்க வேண்டும் கண்ணா (கண்ணா)
பாண்டவர்க்கு தேர் சாரதியான கண்ணா
பாற்கடலில் படுத்து உறங்கியது போதும் கண்ணா
பார்த்தசாரதியே இங்கு கொஞ்சம் பாரும் கண்ணா
வீதி வெறிசோடுமுன்னர் வாரும் கண்ணா (கண்ணா)
உரிமை தர மறுக்கிறார் கண்ணா
எமை உறவாடிக் கெடுக்கிறார் கண்ணா
ஏழை எங்கள் துன்பங்கள் போக்கவில்லையா
நெஞ்சில் எரிமலைகள் வெடிக்கிறதே தடுக்கவில்லையா (கண்ணா)
அண்டசராசரங்கள் காப்பவன் நீ
அபலைகளின் அலறல்கள் ஏன் கேட்கவில்லை நீ
அநியாயம் தன்னையே அழிப்பவன் நீ
அவதாரம் இன்னும் ஏன் எடுக்கவில்லை நீ (கண்ணா)