தனிமை அது கொடுமை
துயர் கொள்ளும் வெறுமை
பகைவருக்கும் வரவேண்டாம் இந்நிலைமை
துன்பம் வந்தால் சொல்லி அழ வேண்டும்
மகிழும் போதும் பகிர்ந்து கொள்ள வேண்டும்
இதை தலை விதியே நிர்ணயிக்க வேண்டும்
நாம் தெரிவு செய்ய என்ன இது தேர்தலா
தெரிந்து கொள்ள இதுவும் என்ன திண்மமா
வடிவமைக்க ஒன்றும் இது வண்ணமில்லையே
வாடி நின்ற போதும் வருந்திடவே வேணும்
குழந்தை பருவத்திலே வரும் தனிமை
வளரும் போது பழகிவிடும் போக
வாலிபத்தில் வரும் போது
தவித்துவிடும் இளமை முதுமையிலே
தனிமை மறுகி மனம் முறுகும் நோய் நொடிகள்
வந்துபோக நொருங்கிவிடும் இதயம்
கலைஞருக்கும் கவிஞருக்கும் தனிமை
ரொம்ப பிடிக்கும் ஆக்கங்களை படைப்பதற்கு
அருமையான தருணம் அவை
படிப்பதற்கும் நடிப்பதற்கும் பெரும் பங்கு வகிக்கும்
பக்தி முத்தி வரும் தனிமை
இனிமை காணக்கூடும்
இறைவனடி சேர்வதற்கும்
வழி சமைத்து பாடும்