காதலர் தினம் வாழ்க
காதலர்கள் வாழ்க .....!
கனவுகளை கற்பனையை
வெல்க வெல்க...!
வீதியிலே வலம்வரும்
வாலிபர்கள் வாழ்க
வான்னிலவு தேடிவரும்
புன்னகைகள் வாழ்க
பூத்துக் குலுங்கும் ரோஜாபோல்
பொலிவுடேனே வாழ்க
அன்னநடை சின்னஇடை
பைங்கிளிகள் வாழ்க
அச்சம் மடம் நாணம்
பயிர்ப்பு அலுங்காமல் வாழ்க
இஷ்டப்பட்டு கஷ்டம்
கொள்ளும் இதயங்கள் வாழ்க....!
இன்பம் பொங்க என்றும் வாழ்க வாழ்க....!
இதயம் ஒன்றானால்
காதல் பிறக்கும்
கண்கள் கலந்திடவே
கவிதை உயிர்க்கும்
இறையருளும் சேர்ந்து
விட்டால் கைகள் கலக்கும்
காதல் கொள்ள
கொள்ள பரவசம்
அதில் கனவுகளும்
கற்பனையும் இலவசம்
உடல் பொருள் ஆவி
எல்லாம் உன்வசம்
உற்றவரும் பெற்றவரும்
தென்பட வில்லை
உருகி உருகி காதல் செய்வார்
தன்வசம் இல்லை
பறவைகளும் விலங்குகளும்
கொள்ளும் இந்தக் காதல்
சுதந்திரமாய் காதலிக்கும்
இல்லை ஒரு காவல்
ஜாதி மத பேதமில்லை
கட்டுப்பாடு இல்லை
பணம் பதவி கௌரவமும்
தேவையே இல்லை
தற்கொலையும் தோல்விகளும்
இல்லவே இல்லை
கற்றவரும் பாமரரும்
கொள்ளும் இந்தக்காதல்
முற்றும் துறந்த முனிவரையும்
வென்று விட்ட காதல்
முத்தமிழ் வித்தகரும்
வீழுகின்ற காதல்
முத்துகுமரன் அவன்
முக்குளித்த காதல்
பட்டுப் போன அத்தனையும்
தளிர வைக்கும் காதல்
பித்துபிடித்தே காதலரை
கொன்று விடும் காதல்
மோதலிலே பிறக்கும்
காதல் வாழும்
காதலினால் மோதல்
பிறக்க வீழும்
வாழுகின்ற காதல்
எல்லாம் காவியம்
வீழுகின்ற காதல்
எல்லாம் வெறும் ஓவியம்.