Friday, January 17, 2014

பத்துமாதம் சுமந்து

ஆரம்ப காலங்களில் எழுதியது    




 
பத்துமாதம் சுமந்து இருப்பாள் அன்னை.
அவர்பக்கத்திலே துணைஇருப்பார் தந்தை.
மடியினிலே சுமந்திருப்பாள் அன்னை.  

மனதினிலே சுமந்திருப்பார் தந்தை. 


கற்பனைகள் கண்டிடுவர் நாளும் குழந்தை 
பிறந்தவுடன் குதித்திடுவார் மகிழ்ச்சி கடலில். 
உலகத்தையே ஜெயித்ததாக நினைப்பர்.
மழலை மொழி கேட்டு அவர்கள் மறந்திடுவர்  தம்மை.

 
சுட்டித்தனம் அத்தனையும் பார்த்து பார்த்து ரசிப்பர்.
பெரும் சாதனையே செய்ததாக சொல்லி சொல்லி மகிழ்வர்.
பிள்ளைகளோ நோயினிலே விழுந்துவிட்டால் போதும். 

நொடிந்திடுவர் நொடியினிலே நோன்பு கூட இருப்பர். 

 

குழந்தைகளோ தலையணையில் துங்கிடவே மாட்டார். தந்தை 
நெஞ்சணையை தானே தன் பஞ்சணையாய் கொள்வர்.
பெற்றவரின் கரங்களையே பற்றிக்கொண்டு நடப்பர்.
பெற்றவரோ தன்னுடைய ஊன்றுகோல் என்றே நினைப்பர்.


குழந்தைகளோ ஓடி தெருவினிலே விளையாடி 
விழுந்தால் தீயினையே மிதித்தது போல்  
துடித்திடுவார் தந்தை. அண்டை அயல் 
ஓடி வர அழுது புலம்பிடுவார் அன்னை
 
தந்தை தாய் தாம்  கண்ட கனவெல்லாம் 
நனவாக்க எண்ணி இரவு பகல்
உழைத்திடுவர் வருத்திடுவர் தம்மை கண்ணை

இமை காப்பது போல் காத்திடுவார் உன்னை.
 

கல்வி கலை கற்றுவர பள்ளியிலே சேர்ப்பார்.
தந்தையோ தன் பொறுப்பை எண்ணி பள்ளி கொள்ள மறுப்பார்.
பக்கத்திலே இருந்து அவர் பாரியாரும் தவிப்பார்.
முற்றதிலேயிருந்து அவர் வானத்தையே முறைப்பார்.

நட்சத்திரம் அத்தனயும் எண்ணி  எண்ணி பார்ப்பார்.
பரிட்சையிலே தேர்ச்சி பெற்றால் தந்தை 

வெகுளியாக சிரிப்பார் தோத்து விட்டாலோ 
அவர் துவண்டே  விடுவார்.
 

வயது வந்து விட்டாலோ பெற்றவர்கள் 
வயிற்றினிலே நெருப்பை கட்டிகொள்வர்.
சீக்கிரத்தில் திருமணத்தை செய்து வைத்து விடுவார்.
திருப்தியோடு திண்ணையிலே அமர்ந்து பெரு மூச்சு விடுவார்.
 

நொந்திருப்பார் நோய்சூழ நெருப்பின் மேல் நிற்பார்
தலையிலுள்ள சுமைகளையே இறக்கிவைக்க துடிப்பார்.
எமைதாங்கிடும் பிள்ளை என்றே தலைகனம் கொண்டிருப்பார்
இந்நிலையில் பெற்றவரை புறக்கணித்தல் எவ்விதத்தில் நியாயம்

 நினைவில் இல்லையா அவர்கள் செய்து வந்த தியாகம்.
அவர் பட்ட பெரும் பாட்டை எல்லாம் மறந்திடுதல் முறையோ.
பெற்றவரும் பிள்ளைகளை புரிந்து கொள்ளல் வேண்டும்.
வெளிநாட்டில் படும் பாட்டை தெரிந்து கொள்ளல் வேண்டும்.



 படத்தின் மீது சுட்டியை கொண்டு செல்ல வாசகங்கள் தென்படும்






14 comments:

  1. ஒவ்வொரு வரியும் உண்மைகள்... பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரா !
      வருகையும் கருத்தும் கண்டு மகிழ்ந்தேன்.

      நன்றி ...! வாழ்க வளமுடன்....!

      Delete

  2. வணக்கம்!

    தந்தையைத் தாயைத் தமிழில் குழைத்தகவி
    சிந்தையை ஈா்க்கும் சிரித்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் கவிஞரே !

      தாய்மையினால் தாள் பதித்தோம் தரணியில்
      முதுமையில் தோள் கொடுத்தால் பாழ்படாது வாழ்வு.....!

      வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சி கொண்டேன் நன்றி .....!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  3. வணக்கம்
    அம்மா.

    கவிதையின் ஒவ்வொரு வரிகளும் ஒவ்வொரு மனித குலத்தையும் சிந்திக்க வைக்கிறது....உண்மையின் வடிவமாக கவிதை உருப்பெற்றுள்ளது.... கடசி வரி நமக்கு சரியாக வருகிறது....சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா...

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பற்றுடனே பெற்றோரை பேணிடுதல் தகுமே
      புறக்கணித்தல் பண்பற்ற செயல் புண்ணாகும் நெஞ்சு வீணில்....!

      ஊக்கம் தரும் வகையில் கருத்துக்கள் அமைத்து நெஞ்சை நெகிழ வைக்கிறீர்கள்.
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  4. பெற்றவர் பாசப்பிணைப்பு
    அற்புதப்பிணைப்பு அவனியில்
    குற்றமற்ற எழுத்தியலிணைப்பு
    நற்றமிழில் வாழ்த்துமக்கு.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி!

      முதுமை பெற்றவர் பற்றினை பேணிடவே
      பெரும் பூசல்கள் தோன்றுது பாரினிலே.
      நற்றவம் செய்தேன் பெற்றிடவே பிள்ளை
      என்றிருக்க பாவி என்பர் பதைத்திடவே

      அன்பான வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ....!
      வாழ்க வளமுடன்....!

      Delete
  5. பெற்றவரும் பிள்ளைகளை புரிந்து கொள்ளல் வேண்டும்.
    வெளிநாட்டில் படும் பாட்டை தெரிந்து கொள்ளல் வேண்டும்.

    உணர்ந்து தெளியும் சிந்தனை மிக்க ஆக்கம்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  6. முன்னெழுதி பின்பதிந்த முக்கனிபோல் சொற்சுவையில்
    நன்னெறிகள் ஊட்டும் நயங்கண்டேன் -முன்னலே
    வந்தென்னை முள்ளில் வருத்துங்கால் சேர்க்காதே
    செந்நெறி தந்த செழிப்பு !

    கடந்த காலத்தை நினைவூட்டும் அழகிய படைப்பு அருமை சகோ !
    இனிய வாழ்த்து !
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
  7. வணக்கம் சீராளா!
    தங்கள் வருகையிலும் வழங்கிய கருத்திலும் உள்ளம் உவகை கொண்டது. மிக்க நன்றி .....! மேலும் ஊக்கம் தர வேண்டுகிறேன்.

    பெற்றவரின் ஆசி வான்மழை
    போல் கேளாமல் மனம் உவந்து
    கிடைக்கப் பெறும் என்றும்
    எல்லாவுயிர்க்கும்.....!

    நன்றி ....! வாழ்க வளமுடன்.....!

    ReplyDelete
  8. mikavum arumai thozi .valkaiyaiye kavithaiyai eluthittinga .valthukkal

    ReplyDelete
    Replies
    1. வாருங்கள் தோழி !
      வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ..!
      வாழ்க வளமுடன்...!

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.