Thursday, February 28, 2013

கண்ணா

 


கண்ணா மேக நிற வண்ணா 
வெண்ணெய் திருடும் கண்ணா 
விளையாட்டு போதும் கண்ணா                               (கண்ணா)                                     

ஐந்து தலை நாகத்தில் அமர்ந்திருக்கும் கண்ணா 
அலைமீது  நர்த்தனம் ஆடுகின்ற கண்ணா 
ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை
விரும்பி சூடுகின்ற கண்ணா                                        (கண்ணா)

மூவுலகை ஓரடியாய் அளந்த கண்ணா 
முகாரி ராகம் இங்கு வேண்டாம் கண்ணா
மனமுருகி வரவேண்டும் இங்கு கண்ணா
உன் குழலோசை தான் கேட்க வேண்டும் கண்ணா (கண்ணா)

பாண்டவர்க்கு தேர் சாரதியான கண்ணா 
பாற்கடலில் படுத்து உறங்கியது போதும் கண்ணா 
பார்த்தசாரதியே இங்கு கொஞ்சம் பாரும் கண்ணா 
வீதி வெறிசோடுமுன்னர் வாரும் கண்ணா                  (கண்ணா)

உரிமை தர மறுக்கிறார் கண்ணா 
எமை உறவாடிக் கெடுக்கிறார் கண்ணா 
ஏழை எங்கள் துன்பங்கள் போக்கவில்லையா 
நெஞ்சில் எரிமலைகள் வெடிக்கிறதே  தடுக்கவில்லையா   (கண்ணா)

அண்டசராசரங்கள் காப்பவன் நீ 
அபலைகளின் அலறல்கள் ஏன் கேட்கவில்லை நீ 
அநியாயம் தன்னையே  அழிப்பவன் நீ 
அவதாரம் இன்னும் ஏன் எடுக்கவில்லை நீ                          (கண்ணா)


Wednesday, February 27, 2013

கருவறையும் கல்லறையும்

கோவிலிலே கருவறை உண்டு தாயின்
கருவறையில் கோவிலும் உண்டு
குழந்தையும் தெய்வமும் ஒன்று
அந்த இருவருமே கருவறையில் ஒன்று
அந்த கோவிலும்  புனிதமானதொன்று 

கருவறையில் தொடங்குகின்ற வாழ்வு
அலை அலையாய் கொண்டு போகும் பாரு
மணவறையில் பூத்த புது உறவு அது
பள்ளியறையை அலங்கரிக்கும் ஒன்று
அங்கு கலந்து பகிர்ந்து கொண்ட அந்த அன்பு
தாயின் கருவறையில் மிளிர்ந்து சிறை கொள்ளும்

கருவாகி உருவாகி பெரிதாகி வருமே வெளியில்
பூவுலகை காண ஒரு நாளே அது தான் திருநாளே
துன்பங்கள் அறியாமல் அதுவும்
மழலை மொழி  பேசி கொள்ளும்
அழுக்கு போக குளியலறையில் கழுவும்
பசியெடுத்தால் சமையலறை செல்லும்

படுக்கையறையில் துயில் கொள்ளும்
கொள்ள பழுதுகளை சரி செய்யும் 
நல்லறிவு பெற கல்வி கலை கற்று
வாழ்க்கையினை வழி நடத்தும் நன்று
வாழ்க்கையிலே வந்து போனதெல்லாம்
வகுப்பறையில் கொண்டதுபோல் ஆகும்

படிப்படியாய் அறிவிழந்து உடல் தளர்ந்து போகும்
அது பிணவறையில் கொண்டு சென்று சேர்க்கும்
பின்னர் கல்லறையில் கதை முடித்து கொள்ளும்
கருவறையில் தொடங்கிய நம்  வாழ்வு
கல்லறையில் சென்று அது  முடியும்

ஊனம் ஊனமா

உடலினிலே உள்ள ஊனம்  ஊனமா 
உள்ளத்திலே இருந்தால் தான் ஊனமே 
அதை உதட்டினிலே கொள்வது தான் பாவமே 
அதையும் ஊரறிய சொல்லிவிட்டால் சாபமே 
அவை ஏழேழு பிறப்பினிலும் தொடருமே 

Tuesday, February 26, 2013

ஆறுபடை வீடு


 




ஆறுபடை வீடு உண்டு 
முருகா உனக்கு
ஆத்துக்காரி ரெண்டு 

இருக்குது முருகா
 

ஆறுமலை ஏழுமலை 
என்று உனக்கு
அதிகமான சொத்து 

இருக்குது முருகா
 

அன்பை பெற அன்னை 
உண்டு முருகா
ஆறுதல் தரவுனக்கு 

தந்தை உண்டு முருகா                  ( முருகா ஆறுபடை)

ஆபத்துக்கு ஓடி வர 
அண்ணன் உண்டு முருகா
எங்களுக்கோ அன்னை 
தந்தை யாரும் இல்லை
 

ஆதரவுக் குன்னை விட்டால் 
எவரும் இல்லை ஆறு குளம் 
கண்ட தில்லை முருகா எங்கள் 
கண்களிலே உள்ளனவே முருகா
 

வேதனையின் வடிவம் 
என்ன முருகா
எம்மை வேதனைக்கா 

விற்று விட்டாய் முருகா              ( முருகாஆறுபடை)

வீர தீரம் செய்ய

வில்லை முருகா  
ஒரு விருந்தினரை 
கண்டதில்லை முருகா
 

வெற்றி வேலன் 
துணை இருந்தால் 
போதும் விதியினையே 
வென்றிடுவோம் நாளும்
 

கனவிலேனும் காட்சி 
கொடு முருகா எம்
கவலை எல்லாம் தீர்ந்து 

விடும் முருகா                        ( முருகாஆறுபடை)

Monday, February 25, 2013

ஆறடி மனிதன்

 

ஆறடி மனிதன் அளந்தது என்ன 
இழந்தது தானே அதிகம் 
மனைவி மக்கள் சுற்றம் இழந்து 
சொத்து சுகங்கள் அனைத்தையும் 
இழந்து தன்னையும் ஒரு நாள் இழந்தானே 

ஆறடிமண் தான் அவனுக்கு சொந்தம் 
என்று சொன்னாரே ஒரு பிடி சாம்பல் அதுவும் 
கரைந்து காற்றில் பறந்ததுவே
அழியும் உடம்பை  நிலையென நினைத்து 
ஆசை வைத்தானே விதியென நினைத்து
மாயையில் விழுந்து சிக்கிக் கொண்டானே

பொறுமை இழந்து நிம்மதி இழந்து 
தன்னையும் மறந்து தவறுகள் செய்தானே 
பற்று பாசம் என்று எண்ணி பதறித் துடித்தானே 
ஆசைகள் அவனை ஆண்டு கொள்ள அவதிபட்டானே 
எல்லாம் எனக்கே சொந்தம் என்று  உரிமை கொண்டானே 

பெரியவன் நான்  என்று ஆணவம்
கொண்டு அழித்திடத் துணிந்தானே 
அன்பு செய்வதை மறந்து அவனும் 
ஆட்கொள்ள நினைத்தானே 
ஆண்டான் அடிமை என்று அவனும் பேதம் கொண்டானே 

உயிருக்கு இல்லை பேதம் என்று உணர மறுத்தானே 
ஆண்டவனையும் வகை வகையாக பிரித்து வைத்தானே
பாவத்தை தொலைக்க வந்தவன் இங்கு மேலும் சுமந்தானே 
பேரின்பம் காண விளையவில்லை அவன்  சிற்றின்பம் கண்டானே 

உன்னை நினைப்பினிலே

உன்னை நினைப்பினிலே வரிஞ்சிருக்கேன்
நித்திரையும் இழந்திருக்கேன் நான்
நெத்தியிலே வரைஞ்சிருக்கேன் நீ
நெஞ்சுக்குள்ளே நிறைஞ்சிருக்கே (உன்னை நினைப்பினிலே)

கண்ணாளன் காத்தாட மூச்சை
கொஞ்சம் இழுத்து விட்டேன்
கண்ணு எரியும் இன்னு ஒறப்பை
கொஞ்சம் கொறச்சுக் கிட்டேன்
இனிக்க வேணுமின்னு லட்டு
கொஞ்சம் சேர்த்துகிட்டேன் (உன்னை நினைப்பினிலே)

லட்ட கண்டதும் நீ எட்டிப் பார்க்க கூடாது
நெஞ்சறையை பூட்டி சாவியை மறந்து வச்சேன்
தொறக்க முடியாது தொந்தரவு செய்யாதே
தெத்தி பல்லை ஓடைச்சிடுவேன்

நான் மண்ணுக்குள்ள போகு மட்டும்
நீ நெஞ்சுக்குள்ளே இருக்கோணும்
நெத்தி பொட்டு அழியு முன்னர் நான்போய்
சேரோனும் அங்கேயும் காத்திருந்து
பூ விலங்கு போடோணும் (உன்னை நினைப்பினிலே)

ஒய்யாரமா

ஒய்யாரமா நெஞ்சுக்குள்ளே ஒக்காந்து என்ன பண்ணிற
நெஞ்சு வலிக்கவில்லை நித்திரையும் கொள்ளவில்லை
கும்மிருட்டு வேளையிலும் ஏன் குதிக்கிறே
கொத்தடிமை போல என்னை ஏன் வெருட்டிற                 (ஒய்யாரமா)

கட்டெறும்பு போல என்னை ஏன் கடிக்கிற
கட்டியவன் கோட்டையிலே கூத்தடிக்கிறே 
கரு வண்டு போல கண்ணை ஏன் உருட்டிற
கட்டுப்பட்டு காலடியில் தானே கிடக்கிறேன்                      (ஒய்யாரமா)

சுரிதார் வேண்டாம் கால்சட்டை வேண்டாம்
கண்டுகண்டு  கசந்து போச்சு கண்ணே
கண்டாங்கி சேலை கட்டி வரணும் எனக்கு
கை வளையல் கொஞ்சும் ஓசை கேட்கணும்
அதற்கு கால்கொலுசு மெட்டி மெட்டு  போடணும்
மல்லிப்பூ வாசம் என்னை கமகம என்று இழுக்கணும்  (ஒய்யாரமா)

கனடா முழுவதையும் சுத்தி வந்து பார்க்கணும்
சி .என் டவரில சோழன்போரி கொறிக்கணும் 
சிட்டுப் போல அங்கிருந்து சேர்ந்து நாம பறக்கணும் 
கண் கொள்ளாக் காட்சி என்று கண்டவர்கள் வியக்கணும் 
இது தண்டா ஜோடி என்று மூக்கின் மேல் விரலை வைக்கணும்   
கலை மகளே வந்ததாக எண்ணி நான் 
கண்ணிமைக்க மறந்திடணும்பெண்ணே                             (ஒய்யாரமா)