வாழ வகையற்ற வாழ்வுநிறை
போராட்டம்
ஆழம் அறியாமல் ஐயமது -
சூழத்
துயர்வீழத் தூங்காது
தொண்டுசெய கண்ணா
பயனேதும் இல்லையோ பார் !
வேண்டித் தவமிருந் தெல்லா
வினைகளையும்
தாண்டிடவே உந்தன்
தயைநாடத் - தீண்டாதே
எப்பழியு மென்றுமெமை
ஏந்தலே ! அப்பனே
தப்பாமல் வந்தெமைத்
தாங்கு !
மண்ணில் மகிழ்ந்தாட
மாதுயரை நீநீக்க
பண்பாடி நித்தமும்நின்
பார்வைபட - விண்பார்த்து
விம்ம விரங்காயோ எம்கண்ணா
வந்தருள்க
இம்மண் சிறக்க எழுந்து !
இல்லை மழையென வேங்கவெம்
கண்ணன்நீ
தொல்லை தருவையோ தீராமல்
- வெல்லமன்றோ
எல்லை யிலாத்துயரம்
எல்லாம் துடைத்தழித்தல்
மெல்லக் குழலிசையை மீட்டு !
கல்லும் கரைந்துருகக்
கண்மூடி இன்தமிழில்
சொல்லெடுத்துப் பாடச் சுகமருள்வாய் - கொல்பகையும்
நீங்க உலகெலாம் நன்மை நிறைந்தெழவே
ஏங்குமென் உள்ளம் இசை !
ஊனுறக்கம் இன்றியே ஓயாமல் உனைநினைந்து
நானு மெழுதுகிறேன்
நீவருவாய் - வானமுத
கானம் பெருகிடவே கண்ணீர்
மலைகரைய
ஈனம் அழித்தருள் ஈ !.
எங்கும் நிறைந்துடமை
எல்லாம் அழித்திங்குத்
தங்கும் துயரமழை
தாக்கியழி - உங்கருணை
எல்லாம் நலமாக்கும் ஏழை
மகவுகள்யாம்
பொல்லா வினைகளைப் போக்கு
!
நின்றாலும் பேய்மழை
நீங்காதே பட்டதுயர்
குன்றாமல் பாருமையா கூடவே - நின்றெமை
வள்ளல் பெருமானே வாட்டும்
வறுமையற
அள்ளி யிறைப்பாய் அன்பு !
சோகமய மிங்குறைய சோர்ந்து கிடவாமல்
வேகமாய் வந்தகற்று
வெந்தணலில் - வேகுமுன்
பாராமல் நீயிருந்தால்
பாழ்பட்டுப் போய்விடுமே
வாராதோ உன்னன்பின் வாள் !.
பார்த்தாவுன் பக்தர்
படலாமோ மேதினியில்
வேர்த்து விறுவிறுத்து
வேதனையில் - நீர்க்க
நினைவின்றி இருப்பையோ!
நில்லாதே நேசா
வினைகளைய வாவேன் விரைந்து !
தொல்லை மிகுந்திடவே இல்லை
யெனாதருள
சொல்லாமல் வாராயோ சுந்தரனே
- கல்லும்
கரைந்துருகும்
காலமிது கார்மேக வண்ணா
விரைந்துவந்து தீர்க்க
விழை.!