Thursday, July 2, 2015

ஏழையா னழைத்தால் எழுந்தருள் சாயி





Image result for ஸ்ரீ சாயி images gif
srisaidharisanam.com
பட உதவிக்கு ரொம்ப நன்றி !

ஜெய ஜெய ஜெய சாயி சரணம்
ஜெய ஜெய ஜெய சாயி 
ஜெய ஜெய ஜெய சாயி சரணம் 
ஜெய ஜெய ஜெய சாயி 

எல்லை இல்லா அன்பு உள்ளவரே

தாமரை இலையில் தண்ணீர் போலே 
தரணியில் பற்றைத்  தவிர்திடும் சாயி
தாமதமாக நீ வர நேர்ந்தால்
தவித்திடு மேதின மென்மனம் சாயி

எண்ணெய் திரிகளு மேதும் இன்றி  
ஏற்றிட தீபம் ஏழையென் செய்வேன் 
என்மன அகலில் என்னையே இட்டு
ஏற்றிடு கின்றேன் நீ வருவாயே

காலம் கடந்து கவிதைகள் புனைய 
கற்பனை என்னுள் கருக்கொள வில்லை
பாலம் எனவே படிப்பவர் நெஞ்சில் 
பயணம் செய்யும் எழுத்தருள் வாயே 

ஏழையான ழைத்தால் எழுந்தருள் சாயி
எளியனை ஆட்கொண் டருள்புரி சாயி
கோழையாம் நெஞ்சில் வீறேன நின்று 
கொடுமைகள் சாய்க்கும் குணமருள் சாயி

குன்றிடா நற்குணம் கொடுத்திடும் சாயி 
குவலயம் அன்பில் மனநிறைவாக
வென்றிடத் தன்னை வெறுப்புகள் மாய்த்து 
வாழ்ந்திட வேண்டும் வரமருள் சாயி 

இரங்குமென் நெஞ்சில் இறங்கிநீ வந்தால்
இன்பம் இதைவிட வேறெதும் உண்டோ 
குரங்கென ஓடும் சிந்தைகள் உன்னில் 
குவிந்திட  வேண்டும் கொடுத்திடு சாயி

அமுதினு மினிய ஆழகிய சொற்கள்
அரும்பிட மலர்ந்திட அருள்தரும் சாயி
நமதெனும் எண்ணம் மிகுந்திட வாழும் 
நானெனும் அகந்தை அழித்திடு சாயி 

கோர்த்திடும் மாலை காத்திடும் உன்றன் 
குமுத மலரடி சூட்டிடு கின்றேன் 
பார்த்திடு வாயோ பாரினைச் சூழ்ந்த
பகைமைகள் கொடுவினை அகற்றிடு சாயி 

ஆமையாய் என்றன் ஐம்புலன் உன்றன் 
அருளெனும் ஓட்டுள் அடங்கிட வேண்டும் 
தீமையை உன்றன் திருவருள் கொண்டு
தீய்த்திடு வாயென் தெய்வமென் சாயி 

எனையே மறந்திடும் நிலைவந் தாலும் 
நினையே என்றும் நினைந்திடல் வேண்டும் 
உனையே இந்த உலகினில் பற்றும் 
உறுதியை நெஞ்சம் உற்றிட வேண்டும் 

நோய்களில் வலியில் நொந்திடும் மனதில் 
நீ.. யுறை  அமைதி நல்கிடு சாயி
தாயென நீயும் சேயினைக் காத்தால்
தவறுகள் எங்கே தடுத்தருள் சாயி

கண்களைக் கொண்டு வாழ்ந்திருந் தென்ன?
கருணையின் வடிவுனைக் கண்டிட வில்லை 
அன்பினில் என்றன் அகம்நிறைக் கின்றேன் 
அடிமையைக் கண்டு ஆதரிப் பாயே 

பாரா முகமேன் பார்த்திடும் சாயி
பாவம் முழுதும்  பறந்திடு மோடி 
தீரா வினைகள் தீர்த்திட வல்லா !
தேடுவோர் நெஞ்சினை நாடுமென் சாயி

போரிடுவேனோ நானுனைப் பெறவே 
பரிவுகொள் ளாயோ பாவியென் மீது
யாரிடம் போவேன்? சேரிடம் நீயே
அடிமையாம் என்னை ஆதரிப்பாயே 

நீரின் அளவாம் நீர்மலர் போலே
நெஞ்சிலுன் எண்ணம் நிறைந்திட வேண்டும்!
ஊரும் எறும்பென உறுவினை தேய்த்து
உன்னருள் நாடி ஓடிவந் தேனே 

கறந்த பால்பின் முலைபுகல் இல்லை 
காக்குமுன் அன்புநீ நீக்கிடல் இல்லை
பிறந்த வாழ்வின் பிணிபோய் உன்னை 
பின்தொடர் கின்ற பேறருள் சாயி



 
 

28 comments:

  1. நெஞ்சம் உருகியழ நீளும் பிறவியறுத்
    தஞ்சல் எனச்சொல்லும் ஆன்மாவை - தஞ்சமடைந்
    தெண்ணிப்பா கண்ணிப்பூ பின்னிச்சேர்ந் துன்னியிம்
    மண்ணில்பண் பாடல் மகிழ்வு

    அருமையாகப் பாடுவதற்கேற்ற சந்தம் அம்மா.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி கவிஞரே ! மிக்க நன்றி உடன் வருகைக்கும் இனிய வெண்பா பின்னூட்டத்திற்கும். தொடர்ந்து வருகை தந்து என்னை ஊக்குவிப்பதற்கு. எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். ஒரு நன்றியை பல நன்றியாய் ஏற்று க்கொள்ளுங்கள்.
      வாழ்க வளமுடன் ....!

      Delete
  2. Replies
    1. தாய் நாட்டில் இருந்தும் தரும் ஊக்கம் பெரிது. எப்படி நன்றி சொல்வேன். இத்தனை busy குள்ளும் தளம் வந்து இட்ட கருத்துக்கு மிக்க நன்றி! வாழ்க வளமுடன்..!நன்றாக என்ஜாய் பண்ணிட்டு வாருங்கள்.

      Delete
  3. அழைத்தால் எழுந்தருள வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! ஐயா வருகைக்கும் வாழ்த்திற்கும்
      தங்கள் வரவும் வாழ்த்தும் என்றும் என்னை வளர்க்கும்.
      வாழ்க நலமுடன்....!

      Delete
  4. Replies
    1. மிக்க நன்றி! சகோ வர்கைகும் வாழ்த்திற்கும் ...!

      Delete
  5. தங்களின் ஆழ்ந்த சாயி பக்தி பாடல் முழுதும் நிரம்பி வழிகிறது.மனதை உருக்கும் பாடல் . சாயி அருள் பெறுக

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைகும் வாழ்த்திற்கும் ...!

      Delete
  6. சந்தப்பாட்டிலெனை சாய்க்கப்பார்க்கின்றீர்...
    அருமை அருமை வேறென்ன சொல்ல.
    சந்தப்பாட்டெழுத எனக்கும் சொல்லித்தாருங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. என்னம்மா கண்ணு நீங்க இப்படி எல்லாம் சொல்லலாமா? உங்களைப் பார்த்து நான் மலைக்கிறேன். நீங்கள் என்னைப் போய் சொல்லித் தரச் சொல்கிறீர்களே. உண்மையை சொல்லுங்கள் இது நக்கல் தானே.... இல்லையா சரி அப்போ புத்தகத்தை எடுத்துக் கொண்டு வாருங்கள். நீங்கள் இங்கு வருகிறீர்களா அல்லது நான் அங்கு வரட்டுமா என்று சொல்லுங்கள் ok வா. அது சரி இப்போ யார் யாரிடம் கேட்டுப் படிப்பது ....நானா நீங்களா முதலில் இந்தக் குழப்பம் தீரணுமே....ஹா ஹா just kidding ..ம்மா

      Delete
  7. இனியாம்மா,
    எப்படி சொல்வது என்றே தெரியல,
    அருமைம்மா, அத்துனையும் அருமை,
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கம்மா மகி !இப்படி அழைக்கலாமா? நல்லா இருக்கில்ல.ம்..ம்..ம் அப்படியே அழைக்கிறேன்.உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் சொல்லிவிடுங்கள் பேராசிரியரே ok வா. அப்புறம் பணிஷ் பண்ணிடுவீங்கல்ல அதான் முதலிலேயே கேட்கிறேன். ஹா ஹா ...
      பேராசிரியரே நீங்களே அருமை என்று சொன்னால் அதைவிட மகிழ்ச்சி வேறென்ன வேண்டும். மிக்க நன்றிம்மா ! வரவுக்கும் இனிய கருத்துக்கும். வாழ்க வளமுடன் ...!

      Delete
  8. சாயி மஹராஜ் கி ஜெய்
    அருமை

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைகும் வாழ்த்திற்கும் ...!

      Delete
  9. Replies
    1. மிக்க நன்றி! தோழி வருகைகும் வாழ்த்திற்கும் ...!

      Delete
  10. Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைகும் வாழ்த்திற்கும் ...!

      Delete
  11. வணக்கம்
    அம்மா.
    சாயி பாடல் மிக அருமையாக உள்ளது இரசித்து படித்தேன் பகிர்வுக்கு நன்றி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! ரூபன் வருகைகும் இனிய கருத்திற்கும் ...!

      Delete
  12. your song is being sung in different raagas, first starting with malaya marutham.
    subbu thatha.
    Listen it here:
    www.menakasury.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தாத்தா ! எங்கே காணோமே என்று பார்த்துக் கொண்டு இருந்தேன். ஒருவேளை பார்க்கவில்லையோ என்று எண்ணி மெசேஜ் அனுப்பலாம் என்று எண்ணினேன் அதற்குள் அருமையாக பாடி அனுப்பிவிட்டீர்கள் மிக்க மகிழ்ச்சியடைந்தேன் . மிக்க நன்றி! தங்கள் பாடிய பின் தான் அதற்கு உயிரே வந்தது போல் தோன்றுகிறது தாத்தா. சாயியின் அருள் என்றும் கிட்டிடும் தாத்தா . வாழ்க நலமுடன் ...!

      Delete
  13. பாடலைப் படிக்கும்போதே கேட்கும் உணர்வு ஏற்படுகிறது. நன்றி.
    புத்தரைத் தேடும் எனது பேட்டியைக் காண அழைக்கிறேன்.
    http://ponnibuddha.blogspot.com/2015/07/blog-post.html

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோ வருகைகும் வாழ்த்திற்கும் ...! நிச்சயம் வருகிறேன்.

      Delete
  14. அருமை! குருவே சரணம்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ வருகைக்கு !

      Delete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.