Wednesday, April 16, 2014

தோகை மயிலுமே கோடை மழை கண்டு



SHIVA PEACE by VISHNU108


நெற்றிக் கண்ணனே வெற்றித் திருநாளை
காண வழியின்றி தட்டுத் தடுமாறுதே


PRANAM by VISHNU108
வெற்றிக் களிப்போடு வீதி
வலம்வர வேளை வரவில்லையோ

சுற்றிப் படர்கின்ற கோடி மக்களின்
கேடு காணவில்லையோ

பற்றி கொண்டு உன்பாதம்
பணிகின்றோம் காதில் விழவில்லையோ

பற்றி எரியுதே பாழும் மனசுகள்  
வித்தை காட்டவிலையோ

ஆனைபலம் கொண்டு சேனை பல
கண்டு வெற்றி கொள்ளுவதோ 

இரத்தம் சிந்தாது கத்தி ஒங்காது
காண வழி இல்லையோ

பள்ளி சென்ற பிள்ளை வீடு திரும்பவில்லை
பள்ளி கொண்டு அங்கு பாலியல் வதை பாரும் கேட்கவில்லையே

அன்னை தந்தையும் அற்ற பாலகர் 
அலையும் உலகிலே அன்பைத் தேடியே  

ஆலமரம் சுற்றி அரச மரம் பற்றி
பெற்ற பிள்ளையை காண வழியில்லையே

ஊரில் பலபேசி தேடி பொருத்திய துணை
தெரு முனையிலும் இல்லையே

கட்டிய தாலி கண்ணில்
ஒற்றிக் கொண்டு காத்திருக்கிறாரே

தீர்க்கமான ஒரு முடிவு வேண்டுமே
திரும்பிப் பார் சங்கரா

ஆவி அழியாது கூடும் அழியாது
கோபம் கொண்டு நின்றால்

கண்கள் மூடாது கனவு பலியாமல்
காண வா சங்கரா

பாதகங்களும் பழிகளும் நீங்க
சாபம் இடு சங்கரா

வீடுமனை இன்றி வாழ வழியின்றி
காலம் கழிகின்றதே

மதியும் சரியில்லை விதியும் சரியில்லை
மனித மனம் கெடுகுதே

விடையும் தெரியாது
படையும் கிடையாது வா சங்கரா

சங்கடம் தீர்த்து சதிகளை நீக்கி
கார் சங்கரா அருள் தா சங்கரா

மோதல்கள் இன்றி சாதல்கள்  இன்றி
வாழவே வா சங்கரா

வறுமையில் வாடி வதனமும் மாறி
வருத்தமும் கொள்ளுதே

கொடியவர் ஆட்சி கண்டு கண்டு
தினம் உள்ளம் குமுறுதே

கடல் அலையில் ஆடுகின்ற கொடிகள்
போலவேஅல் லாடுகின்றோமே

நீதியில்லை அங்கு நியாயம் இல்லை
அந்த நீதி தேவதை எங்கே

கொடுமைகள் காண துணியாமல் அவள்
தன்னை கொன்று போட் டாளோ

பகைவர் என்ற ஒரு பகுதி இல்லை
என்ற நிலை வேண்டுமே

காகம் குருவிகளும் கரைகின்றதே
கவலை கொண்டு தானே
  
தோகை மயிலுமே கோடை மழை கண்டு
கொண்டாட வில்லையே

காதல் புரியாமல் கவலை கொள்ளாமல்
காவல் காத்தவர் எங்கே
காடு மலையுமே கதறுகின்றதே
காண சகியாமலே

ஆடு புலியாட்டம் ஆடுகின்றாரே
நாடு நலம் இல்லையே

கூடி மகிழாது கோடி துன்பங்கள்
நாடி வருகின்றதே

வீறு கொண்டு நீ வேதனைகளை
வேரறுக்க வா சங்கரா வா சங்கரா

அருளவா சங்கரா மகிழவா சங்கரா- நலம்
முகிழவா சங்கரா நீ முழுமுதல் அல்லவா






28 comments:

  1. அருமை... அருமை...

    படங்கள் பிரமாதம்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  2. அருள வா சங்கரா.. மனம் மகிழ வா சங்கரா!..
    நலம் முகிழ வா சங்கரா.. நீ முழுமுதல் அல்லவா!..

    நம்பிக்கை எந்நாளும் வீண் போகாது!..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  3. கடவுளை நம்பினார் கைவிடப்படார் அருமையான வேண்டுதல் பா வரிகள்
    வாழ்த்துக்கள் தோழி இனியா .

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தோழி வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  4. "//வீறு கொண்டு நீ வேதனைகளை
    வேரறுக்க வா சங்கரா வா சங்கரா//" - கண்டிப்பாக அந்த சங்கரன் வருவான்.

    அருமை.. அருமை .. வாழ்த்துக்கள் சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  5. மதியும் சரியில்லை விதியும் சரியில்லை
    மனித மனம் கெடுகுதே

    விடையும் தெரியாது
    படையும் கிடையாது வா சங்கரா

    முழுமுதல் பொருளே அருளவா....!
    அருமையான ஆக்கம்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! தோழி வருகைக்கும், கருத்துக்கும், பாராட்டுக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  6. அருமை! சங்கரன் அருள் கிடைக்க வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  7. "ஆடு புலியாட்டம் ஆடுகின்றாரே
    நாடு நலம் இல்லையே" என்ற
    அடிகளை வரவேற்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  8. அடுத்தவர்காக அழும் கண்கள் மிக அழகானவை !
    தோழி உங்கள் பிரார்த்தனைகள் தான் எவ்வளவு பறந்து விரிந்து இருக்கிறது!!! படங்களும் கொள்ளை அழகு!! அருமை தோழி!!

    ReplyDelete
    Replies
    1. என்ன தோழி இப்படி சொன்னால் நான் எப்படி அழுவேன். ஆமா எப்படி இவ்வளவு கரக்டா கண்டு புடிச்சீங்க என் கண்ணு ரொம்ப அழகு என்று ஹா ஹா சும்மா...
      நன்றி தோழி ! வருகைக்கும் கருத்துக்கும். வாழ்க வளமுடன்...!

      Delete
  9. கூடி மகிழாது கோடி துன்பங்கள்
    நாடி வருகின்றதே-----முற்றிலும் உண்மை. கண்டிப்பாக தங்கள் வேண்டுதல் பலிக்க நானும் வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  10. வேண்டும் வரங்கள் விரைவாகி
    விடியல் காணும் ஈழத்தில்
    தாண்டிச் செல்வோம் தடைவிலக்கி
    தரணி ஆழ்வோம் எம்மண்ணில்

    அருமை அருமை படித்தேன் ரசித்தேன்
    இனிய வாழ்த்து சகோ வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வரவேண்டும் வரவேண்டும் சீராளா ரொம்ப நாளைக்கப்புறம் மிக்க மகிழ்ச்சி!
      உங்கள் பொன் வாக்கு பலிக்கட்டும்
      விரைவில் விடியல் காண.!
      மிக்க நன்றி! சீராளா ! வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும்.
      வாழ்க வளமுடன்....!

      Delete
  11. மிக்க நன்றி! சகோதரா வருகைக்கும் கருத்துக்கும்.
    வாழ்க வளமுடன்....!

    ReplyDelete
  12. கவிதை அருமை
    வாழ்த்துக்கள் சகோதரி...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோதரா! வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும்.

      Delete
  13. வெள்ளை மயில் கொள்ளை அழகு எங்கே பிடித்தீர்கள் சகோதரீ?

    ReplyDelete
    Replies
    1. ஆஹா என்ன வளர்க்கிறேன் என்று நினைத்தீர்களா? இல்லை இல்லை கூகிள் இல் எடுத்த படம் தான்.வெள்ளை மயிலை பார்த்தவுடன் வளர்க்கும் ஆசை வந்துவிட்டதோ. ஹா ஹா

      Delete
  14. வணக்கம்
    அம்மா.
    விடியலைத் தேடி புறப்படும் ஒரு இனத்துக்கு உத்வேகம் கொடுக்கும் கவிதை சிறப்பாக உள்ளது.வாழ்த்துக்கள் அம்மா.

    சில நாட்கள் இணையம்வர முடியாமல் போனது.இனி தொடரும் வருகை..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ரூபன்நலம் தானே ! வாழ்த்துக்கள் ! என்ன யோசனை மீண்டும் வருகை தொடர்வதற்குத் தான் ஹா ஹா... மிக்க நன்றி ! வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் ரூபன் .....!
      வாழ்க வளமுடன்...!

      Delete
  15. வணக்கம்
    அம்மா

    என்பக்கம் கவிதையாக
    எப்போது ஒளிருமட வசந்த காலம்...... வாருங்கள் அன்போடு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.