Friday, November 22, 2013

நன்றி கெட்ட மாந்தருக்கு
நன்றி கெட்ட மாந்தருக்கு
நஞ்சு தான் நெஞ்சினிலே

நாவிலே வாளை வைப்பார்        
வஞ்சமும் வளர்த்திருப்பார்

வன்மப் பகையினையே
வார்த்தையில் கொட்டிடுவர் 

இஷ்டப்படி வர்ணம் 
பூசி மகிழ்ந்திடுவர்

சாதனையே புரிந்தாலும்
பைந்தமிழால் பாராட்ட மறுத்திடுவர்

இன்பத் தமிழாலே
இழித்தே உரைத்திடுவர்

அகலப் பரப்பிடவே
பாவம் என்றிடுவர்

விசும்பி அழுதிடுவர்
பழி தான் சொல்லிடுவர்

கானல் நீர் கலங்கி
நிற்கு தென்பர்

காட்டாறு முற்றத்திலே
கரை புரண்டு ஓடுதென்பர்

காற்றும் மழையும் தான்
போட்ட பிச்சை என்பர்

விண்ணகமும் மண்ணகமும்
தன்னகத்தே உண்டு என்பர்

தானே சரி என்று
தப்பாக கணித்திருப்பர்

தன்னை போல் ஒருவர்
இல்லை என்றே உரைத்திடுவர்

நிலையான வாழ்வு என்று
நினைத்தே குதித்திடுவர்

தான் மட்டும் வாழ வென்று
பிறரை தள்ளியே மிதித்திடுவர்

நல்லவர் உண்டு என்றா
வானம் பொழிகிறது

நட்டவர் பாவம் என்றா
வெய்யிலும் எறிக்கிறது

14 comments:

 1. காலம் ஒரு நாள் மாற்றும்...

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரா...!
   நீண்ட நாட்களின் பின் உங்கள் வரவு மகிழ்வைத் தருகிறது.

   எவ்வளவு நம்பிக்கை உங்களுக்கு பார்க்கலாம். திண்ணையிலும் அடுக்களையிலும் இருந்து புறப்பட்டது தானே. ஆட்களும் இடமும் தான் மாறியிருக்கிறது. மன வளர்ச்சி பக்குவம் இன்னும் பலருக்கு வரவில்லை.
   ரொம்ப நன்றி...! வாழ்க வளமுடன்....!

   Delete
 2. நல்லவர் நம்முடன் நாளும் இருக்கின்றார்
  வல்லவர் சேர்வார் விரைந்து!

  சுள்ளென உறைக்கச் சுழற்றிய கவிவரிகள் தோழி!
  மெள்ள விரியும் நல்ல காலமும்.
  நம்பிக்கையோடு நடைபோடுங்கள்!

  வாழ்த்துக்கள் தோழி!

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் தோழி..!
   அது தான் விரைந்து வந்து விட்டீர்களே.
   நம்பிக்கையும் ஆறுதலும் அள்ளித் தருகிறீர்களே.வாழ்த்தியும் விடுகிறீர்கள். ஆனந்தம் பொங்க.இதை விட வேறென்ன வேண்டும் எனக்கு. நன்றிகள் பல..!

   எனக்கு சிரிப்பும் கவிதையும் வருகிறதே.... ஆகையால் அவர்களுக்கு நன்றி தானே சொல்ல வேண்டும்.
   நாமும் பரந்த மனப்பான்மையை வளர்ப்போம்.
   தீயவற்றை விலக்கிடுவோம்.
   நன்றி வாழ்த்துக்கள்...!

   Delete
 3. வணக்கம்

  விசும்பி அழுதிடுவர்
  பழி தான் சொல்லிடுவர்
  கானல் நீர் கலங்கி
  நிற்கு தென்பர்

  காட்டாறு முற்றத்திலே
  கரை புரண்டு ஓடுதென்பர்
  காற்றும் மழையும் தான்
  போட்ட பிச்சை என்பர்

  அனல் பறக்கும் கவிதை வரிகள்...... காலம் விரைவில் பதில் சொல்லும்...அவர்களுக்கு ரசித்தேன் அருமை மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ரூபன்....!
   உங்கள் வரவும் கருத்தும் மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும்
   தருகிறது. மிக்க நன்றி...! தொடர வேண்டுகிறேன்.

   வாழ்க வளமுடன்....!

   Delete
 4. நல்லவர்,நட்டவர்க்கு மட்டுமா,மற்றவர்க்கும் சேர்த்துதான் மழையும்,வெயிலும்/

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் சகோதரரே முதல் வருகை மிக்க மகிழ்ச்சி...!
   ஆம் நீங்கள் சொல்வது சரியே நல்லவர் கெட்டவர் என்று எப்போதும் பாரபட்சம் பார்ப்பது இல்லையே நம்மை போல.
   நன்றி வாழ்த்துக்கள் ....!

   Delete
 5. மாரியாய் வாழ்வோம் நல்லவை வாழும் அல்லவை வீழும்.வாழ்த்துக்கள் தோழி.

  ReplyDelete
 6. வாருங்கள் தோழி உங்கள கருத்தும் வாழ்த்தும் கண்டு மிகுந்த ஊக்கம் கொண்டேன். ரொம்ப நன்றி
  தொடர வேண்டுகிறேன் வல்க வளமுடன் ....!

  ReplyDelete
 7. அற்புதமான கவிதை
  கருத்துச் செறிவு மனம் கவர்ந்தது
  துவக்கமும் தொடர்ந்ததும்
  முடித்த விதமும் மிக மிக அருமை
  பகிர்வுக்கும் தொடரவும்
  மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாருங்கள் ரமணி ஐயா ...!
   உங்கள் கருத்து மனதை கவர்ந்தது மிக்க மகிழ்ச்சி. நீங்கள் தரும் ஊக்கம் நிச்சயம் என்னை வளர்க்கும். மிக்க நன்றி ...!
   வாழ்க வளமுடன் ....!

   Delete
 8. வணக்கம் சகோதரி
  அற்புதமான கருத்தாளம் மிகுந்த வரிகள். நல்லவர்களை விட வஞ்சகர்கள் மாவுலகில் பெருகி விட்டார்கள் எனும் வினா என்னுள்ளும் அரும்பிச் செல்வது தவிர்க்க முடியவில்லை. நேர்மறை எண்ணங்கள் குறுகி எதிர்மறை எண்ணங்கள் தழைத்தோங்க தொடங்கியதன் விளைவு தான் இது. நல்லவர்கள் செய்யும் காரியங்களால் தான் இவ்வுலகம் இன்னும் உய்த்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. நல்லவர்களை நாடி நட்பு கொண்டு நாளும் வளர்ந்து நன்மை செய்திடுவோம். நான் தொடங்கி விட்டேன் தங்கள் நட்பால்.. அழகான கவி வரிக்கு நன்றிகள் சகோதரி..

  ReplyDelete
 9. அருமை கவிஞரே..
  வலைச்சரம் அழைத்துவந்தது..

  ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.