துர்க்கை துர்க்கையே
துர்கை துர்க்கையே அந்த
சிவனுக்கு நீயும் சரிநிகரே உன்னை
தொளுதார்க்கு இல்லை ஒரு துயரே
முக்கண்ணனின் முழுமதி நீ
சரி பாதி நீ அவன் சக்தியும் நீயே
ஸர்வமும் நீயே சர்வேஸ்வரியே
அன்புக்கும் அரசி அம்பிகையே நீ
செந்தூரப் பொட்டிட்டு செவ்வண்ண பட்டுடுத்தி
வாழும் சூலமும் வேலும் தாங்கி சிங்கத்தின்
மீதமர்ந்து சிருங்காரம் புரிபவளே சிங்காரியே
உமையவளே வீரத்தின் உறைவிடமே வீரம்
செறிந்த மண் வேந்தர்கள் ஆண்ட மண்
வீணர்கள் கைவசமே நின் புகழ் ஒங்க
வீரம் செழிக்க விதைத்திடடடி புதைக்காது
நீ அருள் பாலித்தால் சேனைகள்
எமக்கெதற்கு சேதாரம் தான்
எதற்கு செந்தமிழைக் காத்திடடி
என் தமிழைக் காத்திடடி கனகவல்லி
பக்தர்கள் குறை தீர்க்க வேடங்கள் பல
பூண்டு வேடிக்கை புரிபவளே நம் வேதனை
தீர்க்க வேடம் தாங்கலையோ வேறு பெயர்
தோணலையோ என்றும் எமை நீ ரட்ஷிப்பாயே
திருமாலின் திருவிளக்கே வாழ்வில்
ஒளிதரும் சுடர்விளக்கே லக்ஷ்மியே
மங்கள வாழ்வு அளிப்பவளே திருமகளே
செங்கமலம் மீதமர்ந்து ஐஸ்வர்யம் தருபவளே
நின் தயவின்றி வாழவும் முடியாதே
அஷ்டமா சித்தியும் கிடையாதே
அன்னையே மண்ணை பொன்னாக மின்னவிடு
நவதானியமும் எங்கும் தவழவிடு
மழையோ வெய்யிலோ அழிக்காது
அளவாய் பெய்யவிடு பயிர் பச்சைகள்
எங்கும் ஓங்க விடு களைகளை மட்டும் நீக்கிவிடு
வறுமையை முற்றும் போக்கிவிடு

பார்க்கும் இடங்களெல்லாம் பிரம்மனின்
கைவண்ணம் அருகிருந்து ரசிப்பவளே கலைமகளே
அலைமகளே வெள்ளைக் கமலத்தில் வீற்றிருந்து
கலை விளையாடும் அதில் பூத்திருந்து
மரகத வளைக் கரங்கள் தாங்கிடும்
வீணையில் நின் மொட்டு விரல்
பட்டு நாதம் ஒலிக்கும் என் நாவில்
பட்டு ஒலிக்காதோ மெட்டு
நாடு நலம் பெற கல்வி கலை
பெருக விடு நற் பண்புகள் வளரவிடு
கயவரும் கற்றுணர அருள் வாயே
தலைகனமும் நீக்கி விடுவாயே
முப்பெரும் தேவியரே செம்பவள மேனியரே
கல்வி செல்வம் வீரம் வளர்ப்பவரே உமக்கு பூமாலை
சூடிட வாடிடுமே நவரத்தின மாலை தர வகையிலையே
என்றும் வாடாமல் பாமாலை சூட வல்லமை தாரீரோ
பூவிலே தேனை வைத்தாய் வண்டினங்கள்
அருந்த வைத்தாய் கூவி உனை நான்
அழைக்க குரலினில் குழைப்பாயோ
இந்தக் குவலயம் தன்னில் மறுக்காமல்
