Monday, December 18, 2017

நிம்மதி உந்தம் சந்நிதி சாயி

ஓம் சாயி நாதா ஓம் சாயி நாதா
சர்வமும் நீயே ஓம் சாயி நாதா
நிம்மதி உந்தம் சந்நிதி சாயி
நீயே எங்கள் பெருநிதி சாயி 
நம்பிய பேரின் நலங்களைக் காப்பாய்
நாளும் பொழுதும் நம்பிக்கை வளர்ப்பாய்
வம்படி யான வழக்குகள் சாயி
வந்து வழங்கிடும் வழுவா நீதி
தெம்புடன் உம்மை தேடினேன் சாயி
தென்பட வில்லையேன் தேற்றிட சாயி
சந்தனக் காடு உம்மனம் சாயி
சாந்தி நிலவச் செய்திடும் தாயி
நீர்க்குமிழ் ஆன வாழ்வென வுணர்த்தி
நிந்தனை செய்வதை நிறுத்திடச் செய்யும்
பன்னீர் உந்தம் பவித்திரம் சாயி
பலவு பாதைகள் போக்கிடும் சாயி
தந்திரம் நிறைந்த உலகினில் நீயே
தாயு மானாய் தவத்திரு மகனே
மந்திரம் போலும் நாமம் ஜெபித்தேன்
மனவலி தீர்த்து மகிழ்வதைச் சூட்டும்
துன்பம் சூழும் பொழுதினி லன்பை
சுயநலம் இன்றி சொரிபவர் நீரே
சுற்றும் முற்றும் பார்க்கிறேன் சாயி
சுந்தர முகமது எங்கே சாயி
சொக்கிடும் உந்தம் முகவுரை காட்டும்
சுலபம் மான வழிதனை நீட்டும்
சூட்சுமம் தெரிந்தவர் நீரே சாயி
சுழலும் துயரினைத் தூக்கிடும் சாயி
விதியின் பிடியில் விழுப வரைநீ
விரைந்தே வந்து விடுதலை செய்வாய்
கோபம் கொண்டு குடிகெடு ப்பவரை
கோலம் இட்டுக் கும்பிடச் செய்வாய்
வாதம் செய்து வலிமிகக் கூட்டும்
வஞ்சக நெஞ்சினில் வளங்களைத் தீட்டும்
பாதக மான பழவினை நீக்கி
பகுத்தறிவை நம் மதியில் புகுத்தும்
கண்களில் ஆறு கரை புரண்டோடக்
கனவிலும் சாயி கதை படித்தோயும்
புண்ணியம் தேடுமுன் புகழினைப் பாடும்
புண்ணியன் உன்னிடம் புலம்பித் தவிக்கும்
உள்ளம் தன்னில் உதிரப்போக்கு
உதியினை யிட்டு உரம்தனை ஊட்டும்
பள்ளம் தோண்டும் பகைவர்க்கு நீயே
பரிவுடன் பழக பதவுரை கூறும்
வாழ்வு மேம்பட வழிமுறை காட்டி
வையம் முழுதும் வழி படச் செய்யும்
கண்களில் நிந்தன் கனவழியாது
காப்பேன் என்று கனிமொழி கூறும்
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்

LikeShow more reactions
Comm