நன்னெறியில் இருந்து
பெருக்கமோடு சுருக்கம் பெற்ற பொருட்கேற்ப
விருப்பமொடு கொடுப்பர் மேலோர் -இரக்கம்
மலையளவு நின்றவெழில் மாதே மதியின்
கலையளவு நின்ற கதிர்.
கருத்து :-
அறிவு நிறைந்த மேலோர்கள் தம் செல்வ நிலைக்கேற்ப அன்போடு பிறருக்கு உதவுவார்கள்.
வணக்கம்! வலையுலக மக்களே!
இப்பாவுக்கு ஏற்ப நம் மதிப்பிற்குரிய திரு. ரூபன், திரு. யாழ்பாவாணன் அவர்கள் இருவரும் இணைந்து தமிழை வளர்க்க அரும்பாடு படுவது யாவரும் அறிந்ததே. போட்டிகளை தொடர்ந்து நடத்தி வரும் இவர்கள். எழுத்தார்வம் மிக்க அனைவரையும் மேலும் ஊக்கப்படுத்துவதும். நாங்கள் எல்லாம் எங்கே எழுதப் போகிறோம் என்று எண்ணி ஏங்குபவர்களுக்கு ஒரு வாய்ப்பளிப்பதுவும் தான் அவர்களது நோக்கம்.
எனவே வாசகர்களாக மட்டுமே வாழாமல், எண்ணக் கருவை எல்லாம் எழுத்தில் வடிக்க முடியுமா என்று ஏங்குவதை விட்டு விட்டு முடியுமா என்று சிந்திப்பதையும் சில நிமிடங்கள் நிறுத்தி விட்டு முயன்று தான் பாருங்களேன் ஒரு முறை. ம்..ம்..ம்.. பலமாக யோசிக்க துவங்கிவிட்டீர்கள் இல்லையா? நல்லது? உங்களை பாதித்த விடயங்கள் பல இருக்கலாம் இல்லையேல் உங்களுக்கு தெரிந்தவர்களோ நண்பர்களோ பாதித்த போது பார்த்து இருக்கலாம் அவற்றை கூட நீங்கள் பதியவைக்கலாம். உங்களுக்கே தெரியாமல் உங்களுக்குள் ஆற்றல் ஒளிந்திருக்கலாம்.அவ்வாற்றலை எல்லாம் குடத்துள் விளக்காய் குன்ற விடலாமோ? நாட்கள் நெருங்கி விட்டதல்லவா? எனவே அருமையான இச்சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் அனைவரும் பங்குபற்றி உலகளாவிய இப்போட்டியை சிறப்பிப்பதோடு நீங்களும் பயனடைந்து சிறப்படையுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஆற்றுப் பெருக்கற்ற போதும் அலுக்காது
கற்றறிவு இல்லாக் கடலும் கலங்காது
வெட்ட வெளியினில் கொட்டும் மழையாவும்
முட்டக் கொடுக்கும் பிறர்க்கு!
மேலதிக விளக்கத்திற்கு இங்கே சொடுக்கவும்
http://www.trtamilkkavithaikal.com/2015/01/31.html
மிக்க நன்றி!