கடல் தான் உனது பெயரோ காவியமும் படைத்தாயோ
சுனாமி என்பதும் நீ தானோ
நம் உறவுகள் எல்லாம் உன் வலையில்
சிக்கிக் கொண்டது நிஜம் தானோ
வலையை விரிப்பது நாம் தானே
நீ ஏன்விரித்து வதைத்தாயோ
வலையை விரிப்பது நாம் தானே
நீ ஏன்விரித்து வதைத்தாயோ
நீ பேரழகு என்று சொன்னாரே பெருமளவில் வந்து கண்டாரே
காவிய நாயகன் என்றாரே கதைகள் பலவும் சொன்னாரே
வளங்கள் நிறைந்தது என்றாரே வள்ளல் என்றும் சொன்னாரே
ஆழ்கடல் சென்று வந்தவர்க்கு வெகுமதி தந்ததாய் சொன்னாரே
தஞ்சம் என்று வந்தவரை தாங்கிக் கொண்டாய் என்றாரே
கரையினில் நின்று கால் நனைத்தால் கவலை எல்லாம்
தீரும் என்றார் கவிஞர் சொன்னது பொய் தானே எல்லாம்
கட்டுக்கதை தானே நீ நய வஞ்சகன் என்பது மெய் தானே
உன் மடியினில் தவழ தவித்தவரே உன் அணைப்பினில்
கிடந்து துடித்தனரே பகைவரையும் நீ மிஞ்சி விட்டாய்
படு கொலைகள் செய்து விட்டாய் படைத்தவன் கேட்பான்
பதில் சொல்லு விதியென நீயும் விடை சொல்லு
பழியினை அவன் மீதே போடு விளையாடிடுவான் உன்னோடு
No comments:
Post a Comment
வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி
வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.
நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.