Monday, December 18, 2017

நிம்மதி உந்தம் சந்நிதி சாயி

ஓம் சாயி நாதா ஓம் சாயி நாதா
சர்வமும் நீயே ஓம் சாயி நாதா
நிம்மதி உந்தம் சந்நிதி சாயி
நிர்மலம் ஆனாய் ஏனோ சாயி
நம்பிய பேரின் நலங்களைக் காப்பாய்
நாளும் பொழுதும் நம்பிக்கை வளர்ப்பாய்
வம்படி யான வழக்குகள் சாயி
வந்து வழங்கிடும் வழுவா நீதி
தெம்புடன் உம்மை தேடினேன் சாயி
தென்பட வில்லையேன் தேற்றிட சாயி
சந்தனக் காடு உம்மனம் சாயி
சாந்தி நிலவச் செய்திடும் தாயி
நீர்க்குமிழ் ஆன வாழ்வென வுணர்த்தி
நிந்தனை செய்வதை நிறுத்திடச் செய்யும்
பன்னீர் உந்தம் பவித்திரம் சாயி
பலவு பாதைகள் போக்கிடும் சாயி
தந்திரம் நிறைந்த உலகினில் நீயே
தாயு மானாய் தவத்திரு மகனே
மந்திரம் போலும் நாமம் ஜெபித்தேன்
மனவலி தீர்த்து மகிழ்வதைச் சூட்டும்
துன்பம் சூழும் பொழுதினி லன்பை
சுயநலம் இன்றி சொரிபவர் நீரே
சுற்றும் முற்றும் பார்க்கிறேன் சாயி
சுந்தர முகமது எங்கே சாயி
சொக்கிடும் உந்தம் முகவுரை காட்டும்
சுலபம் மான வழிதனை நீட்டும்
சூட்சுமம் தெரிந்தவர் நீரே சாயி
சுழலும் துயரினைத் தூக்கிடும் சாயி
விதியின் பிடியில் விழுப வரைநீ
விரைந்தே வந்து விடுதலை செய்வாய்
கோபம் கொண்டு குடிகெடு ப்பவரை
கோலம் இட்டுக் கும்பிடச் செய்வாய்
வாதம் செய்து வலிமிகக் கூட்டும்
வஞ்சக நெஞ்சினில் வளங்களைத் தீட்டும்
பாதக மான பழவினை நீக்கி
பகுத்தறிவை நம் மதியில் புகுத்தும்
கண்களில் ஆறு கரை புரண்டோடக்
கனவிலும் சாயி கதை படித்தோயும்
புண்ணியம் தேடுமுன் புகழினைப் பாடும்
புண்ணியன் உன்னிடம் புலம்பித் தவிக்கும்
உள்ளம் தன்னில் உதிரப்போக்கு
உதியினை யிட்டு உரம்தனை ஊட்டும்
பள்ளம் தோண்டும் பகைவர்க்கு நீயே
பரிவுடன் பழக பதவுரை கூறும்
வாழ்வு மேம்பட வழிமுறை காட்டி
வையம் முழுதும் வழி படச் செய்யும்
கண்களில் நிந்தன் கனவழியாது
காப்பேன் என்று கனிமொழி கூறும்
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
சாய் ராம் சாய் ராம் சாய் ராம் சாய் ராம்
LikeShow more reactions
Comm

10 comments:

 1. வணக்கம் சகோ நலமா ? நீண்ட இடைவெளிக்குப் பிறகு அழகிய சாய் பாடலுடன் கண்டதில் மகிழ்ச்சி.

  வாழ்க நலம்.

  ReplyDelete
 2. நீண்ட நாட்களுக்குப் பிறகு தங்களின் கவி கண்டு மகிழ்ந்தேன்

  ReplyDelete
 3. வணக்கம் இனியா சகோதரி/இனியா எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது!! மீண்டும் உங்களை சாய் கவி வரிகளுடன் காண்பதற்கு மிகவும் மகிழ்ச்சி. கவி வரிகளை என்ன சொல்ல!!! அருமை அருமை என்பதைத் தவிர!!

  ReplyDelete
 4. மிக நீண்ட இடைவெளிக்குபின் பார்க்கிறேன் அழகிய சாய் பாடலுடன்....வருக தொடர்ந்து எழுதுக

  ReplyDelete
 5. மீள்வருகைக்கு வாழ்த்துகள்

  ReplyDelete
 6. உணர்வலைகள் ஓங்கி ஆர்ப்பரிக்கும் கவிவரிகள்!
  நீண்ட காலத்திற்குப் பின்னர் உங்களைக் காண்கிறேன்.
  நலமா தோழி?..

  சொல்லி வைத்தாற்போல் நானும் இன்றுதான் வலையில்...:)
  தொடர்ந்து சந்திப்போம்!வாழ்த்துக்கள் தோழி!

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
 7. ஆஹா ஆஹா இனியாவும் வந்தார் இதயம் மகிழ்கிறதே .....ஆமா சொல்லிவைத்தர்ப்போல் இளமைதியக்காவும் தாங்களும் ஒரே தடவையில் வந்திருக்கீங்களே இப்போதான் வலையில் வர நேரம் கிடைத்தது போல ....ம்ம் நல்லது தங்களை நீங்க நாட்க்களின் பின்னர் வலையில் அதுவும் அழகிய சாய்ராம் பாடலோடு கண்டு நெஞ்சம் நிறைகிறது தொடர்ந்து வாருங்கள் இது எங்கள் எல்லோரினதும் அன்பு வேண்டுகை தட்டிக் கழித்தால் தண்டனை உண்டு ஆமா சொல்லிட்டேன் .....!

  மீண்டும் கவியோடு உங்களைக் காண நாளை வருகிறேன் வாழ்க நலம் வளரட்டும் தங்கள் கவிப்பயணம் !

  ReplyDelete
 8. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
  http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
  தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

  நன்றியுடன்
  சாமானியன்

  ReplyDelete
 9. வணக்கம் !

  பங்கயம் பூத்துக் கங்கை
  ....பசுமையும் கொள்ளல் போல!
  மங்கலம் பெருகி மக்கள்
  ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
  எங்கிலும் அமைதி வேண்டி
  ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
  பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
  ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

  ReplyDelete
 10. பிரார்த்தனைகள் பலனளிக்கும்

  இனிய பொங்கல் வாழ்த்துகள்
  புத்தாண்டு வாழ்த்துகள்

  ReplyDelete

வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி

வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.

நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.