காதலே காதலே எனை நீ தீண்டாதே
என் கனவிலும் தோன்றாதே
இது வேடிக்கையே இல்லை
இது விளையாட்டும் இல்லை
நீ கறுப்பா சிவப்பா அறியேனே
பொய்யா மெய்யா தெரியாதே
நல்லதா கேட்டதா புரியவேயில்லை (காதலே காதலே)
காதலே காதலே உனக்குருவமும்
உண்டோ சொல்லு உறைவிடம்
எங்கணும் உண்டோ ஓடும் நதியில்
இருக்கின்றாயோ இல்லை ஒதுங்க
இடம் இன்றி தவிக்கின்றாயோ (காதலே காதலே)
பள்ளம் திட்டி பார்க்கின்றாயோ
பரந்த உலகில் எங்கும் நீ பறந்து திரிகின்றாயோ
பார்வையினாலே பலரையும் கொன்று தின்கின்றாயோ
இல்லை பாவிகளிடம் சிக்கிக் கொண்டு பரிதவிகின்றாயோ
ஆதியில் இருந்து அந்தம் வரைக்கும்
உன் பெயர் அடிபடுதே காதலே காதலே
பல சரித்திரம் படைத்தாயாமே
காதல் சின்னம் கூட உனக்கு கட்டினாராமே (காதலே காதலே)
ஆண்டான் அடிமை என்றில்லாமல் ஆட்கொண்டாயாமே
முற்றும் திறந்த முனிவரைக் கூட விட்டு வைக்க வில்லை நீ
போரிலும் நீதான் வெல்வாயா புற முதுகிடவே மாட்டாயா
வெற்றி மீது வருவாயா வீரம் சொல்லித் தருவாயா ( காதலே காதலே)
காதலே காதலே நீ சோகமா சுகமா சொல்வாயா
சொந்த பந்தம் உனக்குண்டா
வாசம் செய்ய சுவாசம் உண்டா அதையும் சொல்வாயா
சொற்பொழிவாற்ற சோகங்கள் உனக்குள்ளே உண்டா ( காதலே காதலே)
No comments:
Post a Comment
வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி
வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.
நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.