கடலலையே கடலலையே நீ தானா அது நீதானா நீ
கொந்தளித்தது ஏனோ காயங்கள் கொண்டதனாலோ
பேரழிவை செய்தது ஏனோ பெருமூச்சு நீ விட்டதனாலோ
கோபம் கொண்டது உனக்கழகோ காவு கொண்டது சரி தானோ
நமை கலங்கடித்தது முறை தானோ நீ வரம்பு மீறிடலாமோ
ஊருக்குள் வந்தது ஏனோ அபலைகள் கண்களில் உன்னழகை
கண்டு களித்திடத் தானோ உனக்கென உறவுகள் இல்லையோ
நம் உறவுகள் உனக்கு தேவையோ தாய் மண்ணில் அவலங்கள்
அறியாயோ கதறல்கள் உனக்கு கேட்கலையோ கண்களில்
ஈரம் காயுமுன்னே கொள்ளை கொண்டது முறை தானோ
பிஞ்சு நெஞ்சுகளில் கூட வேலை பாய்ச்சி விட்டாயே
நீங்காத துயரமதை நெஞ்சில் நிறுத்தி விட்டாயே
கொடூரச் செயலை கேளாமல் திரும்பி பார்க்க முடியாமல்
திரும்பி விட்டாய் நீ உன் பாட்டில் வருந்தவில்லையோ இன்னும் நீ
வேதனை என்பதை அறிவாயோ விருந்துக்கென்று வந்தாயோ
வேதனை என்பதை அறிவாயோ விருந்துக்கென்று வந்தாயோ
அத்தனை பசியா உனக்கு இது என்ன ராட்சச பசியா
உன்னிடம் உள்ளதே உணவு அதை ஊருக்கு கொடுக்கும் மனசும்
பின் அடுக்குமா இது உனக்கும்
வணக்கம்
ReplyDeleteஅம்மா
கருப்பொருள் ஒன்றுதான் வரிகள் வித்தியாசம் நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
வணக்கம் ரூபன் !
Deleteஆம் ரூபன் கருப்பொருளும் வலிகளும் ஒன்று தான் வரிகள் தான் வேறு வேறு.
என் வேண்டுகோளுக்கு ஏற்ப இதனை பார்த்து கருத்தும் இட்டமைக்கு மிக்க நன்றி!
வாழ்க வளமுடன்....!