உலவுகின்ற நிலவோ
அருகினில் வருமோ
என்னில் ஆசை கொண்டு விடுமோ
காதில் காதல் சொல்ல வருமோ
மின்னுகின்ற கண்கள்
கொள்ளை கொள்ளுகின்ற அழகு
அவள் சுவாசம் இன்னும் அழகு
அதை கண்டு கொள்ளும் உலகு (உலவுகின்ற நிலவோ)
மென்மையான பேச்சு என்னை
மெய் சிலிர்க்க வைக்கும்
அவள் சின்ன புன்னகை எந்தன்
நெஞ்சில் பதிஞ்சு போச்சு (உலவுகின்ற நிலவோ)
தங்க கைகள் வீசும் அழகில் அதனை
வருடி பார்க்க எண்ணும்
இடையும் இல்லை போலும் அதனை
கடையில் வாங்க கூடும் (உலவுகின்ற நிலவோ)
நடையும் நடனமாடும் பார்த்தால்
கதகளியும் புரியும் உள்ளம்
விண்ணில் உலகை மறந்து போகும்
ஆடை உடுத்தி மெல்ல அடி எடுத்து
வைத்தால் என் இதயம் நழுவி கீழே
விழுந்து போகும் மெல்ல ( உலவுகின்ற நிலவோ )
மேனி நோகுமென்று தென்றல்
மெல்ல விலகி போகும் நானும்
கண்ணாடி பொம்மை போல உனை
உள்ளங் கையில் தாங்கி காப்பேன் ( உலவுகின்ற நிலவோ)
No comments:
Post a Comment
வலை தளம் வருகை தரும்
வல்லபெரும் உறவுகளே
வந்தனங்கள் பல கோடி
வைத்தேன் உம் முன்னாடி
வாரி வழங்கிடுங்கள்
வண்ணக் கருத்துகளை
வேராழ வளர்ந்திடவே
ஊக்கமதை ஊற்றிடுங்கள்.
நன்றி....! வணக்கம் ....!
Thanks google images for all the pictures.